தான் இறங்கினாலும் தரம் இறங்காதவர்

posted in: admire, Leadership, lessons | 0

சிறுசிறு அரசியல் நடவடிக்கைகளில் இறங்கி மெல்ல மெல்ல அரசியல்வாதியானவர்களும் உண்டு. தொண்டு செய்து சமூகத்துக்உ உதவும் தோள்களைப் பார்த்து தலைவர்கள் அழைத்துச் சேர்த்ததால் அரசியலுக்கு வந்தவர்களும் உண்டு. அரசியல் தலைவர்களின் உறவாய் பிறந்ததாலே அரசியல்வாதியாக ஆனவர்கள் – பணபலமும், புகழ் ஆசையும் கொண்டு அரசியலைச் சார்ந்தவர்கள்-சமூக விரோதச் செயல்களை மறைக்கவும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருக்கவும் … Continued

ஜனநாயகவாதி

posted in: admire, lessons | 1

இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. இங்குள்ள அரசியல்வாதிகள்தான் அதனைக் கடைப்பிடித்துக்காப்பாற்றவேண்டும். ஜனநாயக் காவல்ர்களாக அரசியல்வாதிகள் நடந்துகொள்ளும் தோதுதான் ஒரு நாட்டின் பாரம்பரியம் காப்பாற்றப்படும். சர்வாதிகார நாடுகளில் ஆட்சிமுறையும் அமலாக்கமும் எளிதாகிவிடும் சூழ்நிலை உண்டு. அங்கே எதிர்ப்பு நசுக்கப்படும், போராட்டம் களையெடுக்கப்படும். மாறாக ஜனநாயக நாட்டில் எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம்யாவும் இருப்பதால் எல்லாமே எதிர்ப்புக்கிடையேயும் … Continued

பாராட்டை விரும்பாத பாமரர்

posted in: admire, lessons | 1

பாராட்டு என்பது வளர்பவர்களுக்கு ஊட்டச்சத்து போன்றது. ஆனாலும், பாராட்டில் மயங்குபவர்களுக்கு அப்பாராட்டே புகழ்க் கொல்லியாகிவிடும். பாராட்டை விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள் என்று நாம் படித்திருந்தாலும், பாராட்டை விரும்பாத பாமரர் ஒருவர் இருக்கிறார் என்பதை இப்போது படிக்கிறோம்.

ஆளத்தெரிந்தவர்

posted in: admire, Leadership | 0

ஆளத்தெரிந்தவர்கள் ஒவ்வொரு ஆளையும் தெரிந்திருக்க வேண்டும் என்னும் அரசியல் சித்தாந்தத்தை உணர்ந்த உத்தமர் காமராஜர். என்றோ பார்த்து அறிமுகமான ஒருவர் கூட்டத்துக்குள் எங்கேனும் நின்றால் கூட பெயர் சொல்லி அழைக்கும் நினைவாற்றலே ஆளவந்தவர்களிடம் அவசியம் இருக்க வேண்டும். இது பெருந்தலைவரிடம் இருந்தது.

வழி விட்ட வள்ளல்

posted in: admire, lessons | 0

‘பதவியை நீ தேடிப்பொனால் பதவிக்குகப் பெருமை. பதவி உன்னைத் தேடி வந்தால் உனக்குப் பெருமை’ – என்ற உயர்ந்த அரசியல் இலக்கணத்துக்கு ஏற்றாற் போல, உலகம் போற்ற வாழ்ந்தவர் கர்மவீரர் காமராஜர். அவர் எப்போதுமே பதவியைத் தேடிப் போனதே இல்லை. மாறாக பதவிதான் காமராஜரைத் தேடிப் போனது. அதனால்தான் அவர் வகித்த பதவிகள் எல்லாம் இன்றளவும் … Continued