சுதந்திரம் என்பது என்ன?

சுதந்திரம் என்பது என்ன? அதன் அடிப்படை என்ன? நம்முடைய நாட்டை நாமே ஆள முடியும் என்ற நம்பிக்கை உணர்ச்சிதான் அது. நாம் எவருக்கும் அடிமையல்லர். நம்மை யாரம் ஆண்டு அடக்கி ஆதிக்கம் செலுத்த முடியாது. விடவும் மாட்டோம்.

நாமே நமக்கு எஜமானர்கள். நாம் யாருக்கும் குடிகள் அல்லர் என்று காந்திஜி காட்டிய வழியில் இன்று நமது சொந்த அரசாங்கம் நடக்கிறது. இது தானே சுதந்திரம்!

ஜநாயக நெறியில் முக்கிய அம்சம்

தேர்தல் என்றால் என்ன? இதில் மக்களுக்கு – வாக்குரிமை படைத்துள்ள மக்களுக்கு உள்ள பொறுப்பு என்ன? வோட்டு போடுவதால் விளைய்மு முடிவு என்ன? அதன் மூலம் நாட்டில் ஏற்படும் நிலைமை என்ன? என்பவை களையெல்லாம் எவ்வோரும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம்.

தேர்தல் என்பது ஏதோ ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வந்து போகும் திருவிழாவா? அல்லது ஐந்து பத்து வாரங்களுக்கு ஒருமுறை தியேட்டர்களில் மாற்றிக் காண்பிக்கும் சினிமாவா? இல்லவே இல்லை.

தேர்தல் என்பது நமது ஜனநாயக முறையில் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும். தேர்தலின் மூலம் மக்கள்மதங்கள் எஜமானர்களை இப்படிச் சொல்வது கூடத் தவறு- தங்களுக்குத் தேவையான கார்யங்களைச் செய்யும் நிர்வாகப்பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்பதை மக்கள் நிர்ணயம் செய்கிறார்கள்.

ஏதோ விளையாட்டாக எக்கட்சி வந்தால் என்ன, போனால் என்ன? யாரோ பணம் பெருத்தவர்கள் தேர்தலுக்கு நிற்கிறார்கள். கட்சிக்கார்ர்கள் சண்டை அது என்று தேர்தல் போட்டிகளையும், வேடிக்கை அல்லது விளையாட்டு என்று கருதிவிடக்கூடாது.

இந்த நாட்டை ஆள்வது யார்? எந்தக் கட்சி என்பதும் ஒரு முக்கியமான விசயமாகும்.

வாக்குரிமையின் ஆற்றல்.

மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மெஜாரிட்டி கட்சிதான் நாட்டின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது ஜனநாயக முறையில் உள்ள சட்டம் அது.

இதன்படி இந்த நாட்டின் அரசாங்க நிர்வாகம் அதாவது பொது மக்களுக்கான படிப்பு, உணவு, தொழில், சுகாதாரம், ரோடு, ஆஸ்பத்திரி குடிநீர் முதலிய எல்லா வசதிகளையும் செய்து தரும் பொறுப்போடு நாட்டில் சட்டத்தையும், சமாதானத்தையும், ஒழுங்கையும், அமைதியையும் நிலைநாட்டி மக்களுக்குப் பாதுகாப்புக்கொடுத்து எல்லோரும் பயமற்ற வாழ்வு நிம்மதியான் கவலையற்ற தேர்தல் மூலம் ஒரு குறிப்பிட்ட மெஜாரிட்டி கட்சியிடம் ஐந்தாண்டு காலத்திற்கு ஒப்படைக்கப் படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

வாக்குரிமையின் சக்தி, அதாவது தேர்தல் நடக்கும் தினத்தன்று வோட்டுச் சாவடிக்குச் சென்று வோட்டுச் சீட்டைப் பெற்று, அதில் உள்ள ஒரு சின்னத்தின் மீது முத்திரை குத்திவிட்டு வருவதற்கு இருக்கும் சக்தி இதுதான். இந்தச் சக்தி சாதாரணமானதல்ல. இது யாரோ தயவாக்க் கொடுத்ததும் அல்ல. காந்திஜியின் தலைமையில் ஒற்றுமையாகவும், ஐக்கியமாகவும் சுதந்திரப் போராட்டம் நடத்தி விடுதலை பெற்றதனால் நமக்கு நாமே அளித்துக் கொண்ட உரிமை. அதுதான் வோட்டுப் போடும் சக்தியை நமக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னேற்றத்தின் அடிப்படையில் அமையும் பலமான அரசாங்கமே நமக்கு நல்வாழ்வையும், பாதுகாப்பையும் அளிக்க வல்லது.

வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் தேசத்தில் எந்தெந்தக் காலகட்டத்தில் பலமான மத்திய ஆட்சி நடைபெற்றதோ அந்தக் காலங்களில் நான் நல்ல முன்னேற்ற வேலைகள் நடைபெற்று மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும், சுபீட்சத்துடனும்வாழ்ந்தனர் என்பதைக் காண்கிறோம்.

பலமான மத்திய ஆட்சி பலவீனப்பட்டு, குட்டி ராஜாக்கள் ஏற்பட்டிருந்த காலங்களில் நாட்டில் சண்டை ச்ச்சரவு ஏற்பட்டு அமைதியின்றி சுபீட்சம் கெட்டு மக்கள் திண்டாடியதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட சமயங்களில் தான் அந்நியர் படையெடுத்து வந்துள்ளனர் என்பதையும் அறிகிறோம். ஆகவே பலமான மத்திய ஆட்சியின் கீழ் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

ஒன்று பட்டதால் உயருகிறோம்.

காந்திஜியின் தலைமையில் சாதி, மத மொழி பேதங்களை மறந்து நமேல்லாம் ஒற்றுமையாக வெள்ளையனை எதிர்த்து சுதந்திரம் அடைந்தோம். அந்தக் காலத்திலும் வெள்ளைக்காரன் கொடுத்துவிட்டுப் போன சர்வ சுதந்திரத்துடனும் பல சிறு அரசர்கள் நமது தேசத்தில் இருந்தனர். அவர்களில் பலர் படைகளைத் திரட்டிப் பக்கத்து ராஜ்யங்கள் மீதுபடையெடுத்து சண்டைப்போடவும், நாட்டின் அமைதியைக்குலைக்கவும் திட்டமிட்டனர். என்றாலும் காந்திஜியின் தலைமையின் மூலம் நமக்குக் கிடைத்த ஐக்கிய பலத்தாலும் ஒற்றமையின் விளைவினாலும் அமைக்கப்பட்ட பலமான மத்திய அரசாங்கம் எல்லா குட்டி அரசாங்கங்களையும் நல்ல முறையில் இந்தியாவுடன் இணைத்து ஒரே தேசமாகப் பலப்படுத்தியது.

இதே மாதிரிதான் இந்தியாவிலிருந்து அந்நிய நாட்டுக் காலனிகளும் நம்முடன் சேர்க்கப்பட்டுள்ளன.

மத்திய ஆட்சி மூலம் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல ஐந்தாண்டுத் திட்டங்களைப்போட்டு, நல்ல முறையில் முடித்து விட்டோம். திட்டங்கள் மூலம் நாட்டில் படிப்படியாக நல தொழில் வளமும், வேலை வாய்ப்பும், கல்விப்பெருக்கமும் பெருகி வருகின்றன. இந்த மாதிரியான ஒற்றுமை தான் நாட்டின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் உதவுகிறது.

நல்ல கொள்கைகளை ஏற்றுக்கொள்க.

நபிகள் நாயகம் காலத்திற்கு முன்பிருந்தே பல்வேறு மத்த்தலைவர்கள் இந்தியாவில் இருக்கின்றனர். குடியேறியும் இருக்கின்றனர். அவர்களின் நாகரிகங்களெல்லாம் இந்தியாவுக்கு நன்மைகளையே அளித்திருக்கின்றன. கட்சிகளாக இருக்கட்டும் அல்லது மதங்களாக இருக்கட்டும், நல்ல கொள்களைகள் இருந்தால் அவைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்த மதத்தவரையும் எந்த நல்ல கொள்கைகளயும் இந்தியா ஏற்றுப் போற்றி வந்திருக்கிறது. நல்லவைகளை ஏற்பதால் தப்பு வந்துவிடாது. காந்தியடிகள் எல்லா மதத்தவர்ளும் மனமொத்து வாழாலாம் என்பதற்கு வழி காட்டியுள்ளனர்.

இந்திய சுதந்திரத்திற்கு முஸ்லிம்கள் பெரும் தொண்டு புரிந்திருக்கிறார்கள். கிலாபத் இயக்கம் நல்லமுறையில் நடந்தது. அலி சகோதர்ர்களைப் போன்றவர்கள் அபாரத் தொண்டு செய்திருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் வாழாவிட்டால் இந்துக்கள் வாழ முடியாது. இந்துக்கள் வாழாவிட்டால் முஸ்லிம்கள் வாழு முடியாது. சில புதுத் தலைவர்கள் தோன்றி சாதி, இனம், மொழி என்று சொல்லி வருகிறார்கள். இந்திய மக்களின் ஐக்கியத்தைக் குலைக்க சிலர் ஏதாவது சொல்வார்கள். அந்த நேரங்களில் நாம் சுதந்திரத்தில்ன அருமையை எண்ணினால், நமக்ககுள் சண்டை பொட்டுக் கொள்ள மாட்டோம்.

வாழ்வு சிறக்க வகை செய்ய வேண்டும்

இந்திய நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்ற காந்திஜியின் எண்ணம் வாழ்நாளிலேயே ஈடேறி விட்டது. அது வரையில் நாம் சந்தோஷப்பட வேண்டியதுதான்.
அவர் எதற்காக சுதந்திரம் கேட்டார்? எந்த இலட்சியத்தை நிறைவேற்ற சுதந்திரப் போர் நடத்தினார் என்பதைத்தைதான் நாமெல்லாம் நன்றாக எண்ணி எண்ணத்தில் நிறைநிறுத்திப் பாடுபட வேண்டும்.

இந்திய நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ வழியில்லை. வயிறாரச் சோறு கிடையாது. போதிய அளவு உடுக்கத்துணி இல்லை. கந்க் குடிஞை கூடப பலருக்குக் கிடையாது. படிப்பில்லை, வேலையில்லை. தொழிலுமில்லை. பணமும் கிடையாது. சுருக்கமகாச் சொன்னால் சொத்து சுதந்திரம் ஏதுமில்லை. என்று பல கோடிப் பேர் அவதிப்படுவதை மாற்ற வேண்டும். இந்தக் கோடானு கோடிப் பேர்களுக்கு வாழ்வு கிடைக்க வேண்டும். அவர்களுது வாழ்க்கைத் தரமும் மற்றவர்கள்போல் உயரவேண்டும் என்பதுதான் அவரது லட்சியம்.

இது மட்டுமா? இந்தியா மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். சாதி மத பேதமின்றி இருக்க வேண்டும்.

நாம் தாழ்ந்து போனதேன்?

நம்முடைய நாடு எப்படிப்பட்டது? நாடு எப்போதும் இப்படித்தான் தாழ்ந்து கிடந்ததா? இல்லையே! உலகமெங்ககும் உள்ள மற்ற நாடுகள் எல்லாம் தாழ்ந்து கிடந்த நேரத்தில் நம்முடைய நாடு மிகவும் உயர்வான நிலையில் இருந்தது.

உலக நாடுகளின் சரித்திரத்தைப் புரட்டிப்பார்த்தால் எல்லா நாடுகளும் தாழ்ந்து இருந்த நேரத்தில் நமது நாட்டவர்கள் உயர்ந்த நிலையில் வாழ்ந்து வந்ததாக வரலாற கூறுகிறதே!

முன்பு உயரந்து, நல்லபடி வாழ்ந்த நாடும், மக்களும் இன்று தாழ்ந்து அல்லற்படும் நிலையில் இருகின்ற இதே நேரத்தில் முன்பு தாழ்ந்திருந்த மற்ற நாடுகள் இன்று உயர்ந்து இருப்பதை ப்பார்க்கிறோம்! எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது? தலைகீழாக மாறுதல் இருக்கக் காரணம் என்ன? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நம்மிடையே என்ன கோளாறு? எதனால்தாழ்ந்து கிடக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது? இதற்குப் பொறுப்பாளி யார்?

கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுக்காலமாக நாம் அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்ததே இந்தத் தாழ்ந்த நிலைக்குக் காரணமாகும்.

பதவியில் அமர்வது யார்?

பதவியில் யார் அமர்வது என்பது பெரியதல்ல. அதில் யார் வேண்டுமானாலும் அதற்கென்று சட்டப்படி உள்ள வழிமுறைகளைப் பூர்த்தி செய்துவிட்டுப் போய் அமர்ந்து கொள்ள முடியும் ஆனாலமக்களுக்கு யார் நன்மை செய்தார்கள் – செய்வார்கள்- செய்யப்போவார்கள் என்பதுதான் முக்கியம். இதில் கட்சிகளைவிடப் பொது மக்களுக்குக் கவலை மிகவும் அதிகமாக இருக்கிறது. யாரைப் பதவியில் உட்கார வைப்பது என்பதை அவர்கள் தீர்மானமாக யோசித்துத்தான் முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். இனியும் செய்வார்கள். இதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம்.

கவலையற்ற சமுதாயம் அமைப்போம்

சுதந்திர அரசாங்கத்தால் நாட்டில் புதிய சமுதாயம் உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய சமுதாயம் என்றால் என்ன? தன்னைத் தானே தன்னம்பிக்கையோது ஆண்டு கொள்ளும் சக்தி படைத்தது அது. தனக்குரிய தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொள்ளவல்லது. எத்தகைய ஏற்றத்தாழ்வும் ஏற்பட முடியாத சூழ்நிலையில் உள்ளதே நாம் காண விரும்பும் புதிய சமுதாயம். அது எப்படிப்பட்டது? கவலையற்ற வாழ்வு பிறரைப் போலவே நாமும் வாழ்கிறோம் என்ற திருப்தி படைத்தது. புதிய சமுதாயம்.

இத்தகைய கவலையற்ற சமுதாயத்தைப் படைப்பதே நம் இலட்சியம். அதற்குச் சட்டம் போட்டு முடியாது. பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் மட்டும் போதாது. மக்களிடையே மகத்தான மனமாறுதல் – மனப் புரட்சி ஏற்பட்டாக வேண்டும்.

கூட்டுறவை வளர்க்கும் தன்னம்பிக்கை

முன்பு தேக்கமும் உயிரற்ற வாழ்க்கையும் இருந்த இடங்களில் இப்போது ஜீவத்துடிப்பு நடமிடுவதை நாம்பார்க்கிறோம். உண்மையில் இந்தியாவின் ஆழ்ந்த அடிப்படையிலிருந்து புதிய சக்திகளை நாம் எழுப்பி விட்டிருக்கிறோம். அவைகளை நாம் எவ்வளவு தூரம் சரியான பாதையில் திருப்பிவிட முடியும் என்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை.

ஆண்களும் பெண்களும் சரிவரப் பயிற்சியளித்து பொறுப்பான பிரஜைகளாக அவர்களை உருவாக்கி வருகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு பயிற்சி பெற்ற தன்னம்பிக்கையுள்ள, கூட்டுறவு ரீதியில் வேலைசெய்கிற மக்களிடமிருந்துதான் எல்லாம் உதயமாகவேண்டும். தனிப்பட்டவர்களை நாம் பயிற்றுவிக்க வேண்டும். அவர்களுக்க சமூக வாழ்க்கை உணர்ச்சியை உண்டு பண்ண வேண்டும். தன்னம்பிக்கையுள்ள கூட்டுறவு முயற்சி மூலந்தான் நம் மக்கள் நன்றாகச் செழித்து வளர்ந்து முன்னேற முடியும். இவ்வறு ஒரு புதிய இந்தியாவை நிர்மானிப்பதில் சர்க்கார் பெரும் பங்கு கொண்டு வேலை செய்ய வேண்டும் என்று கருதுகிறோம். ஆனால் உணைமையான ஜீவசக்தி மக்களிடமிருந்துதான் வரவேண்டுமே தவிர சர்க்காரிடமிருந்து அல்ல.

நாம் எதை இலட்சியமாக்க் கொண்டுள்ளோம்? ஒவ்வொரு கிராமத்திலும் ஒருபள்ளிக்கூடம், ஒருபஞ்சாயத்து, ஒரு காரிய கூட்டறவுச் சங்கம் ஆகியவை ஏற்படும்படி செய்ய வேண்டும். அதன் மூலம் நமது அரசியல், பொருளாதார கலசார அபிவிருத்திக்கு அஸ்திவாரமிடுகிறோம். விரிவான இந்திய ஜனநாயக அமைப்பில் சுய ஆட்சி புரிகிற ஜனநாயக அங்கங்களை உருவாக்குகிறோம்.

சமுதாய அபிவிருத்தியும் பெண்கள் பொறுப்பும்

சமுதாய அபிவிருத்தி இயக்கம் படிப்படியாக மக்களுடைய இயக்கமாக மாறி மக்கள் பொறுப்பிலேயே நடக்க வேண்டும். சர்க்காரின் உதவியும் அவர்கள் பங்கெடுப்பதும் அவசியம் தான். அவை மேலும் யநீடிக்கும். ஆனால் அது மக்களின் இயக்கமாக மாறிவர வேண்டும். மேலே இருந்து நடத்தப்படும் ஒரு விஷயமாக அது ஆக்கூடாது. இந்த கருத்தில் தான் இப்போது சமுதாய நல வேலைகளை, கிராம்ப் பஞ்சாயத்துக்கள், பஞ்சாயத்து யூனியன்களிடம் விடப்பட்டுள்ளன.

மக்களை விழிப்புப் பெறச் செய்ய வேண்டுமானால் பெண்களைத்தான்முதலில் விழிப்புறச் செய்ய வேண்டும். பெண்கள் விழிப்புப் பெற்று நடவடிக்கை எடக்கத் தொடங்கிவிட்டால் குடும்பம் முன்னேறும். கிராமங்களும் முன்னேறும். தேசமே முன்னேறும். பெண்கள் மூலம் குழந்தைகள் இதில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு இன்னும் நல்ல சுகாதார வாழ்க்கை, சிறந்த பயிற்சி ஆகியவைகளின் பலன்கள் கிடைக்கும். எனவே நாம் இன்றைய சிறுவர்கள் மூலம் எதிர்கால இந்தியாவை வளரும் சமுதாயத்தை உருவாக்குவோம்.

பலன் பெறுவோம் முன்னேறுவோம்

ஏழைகள் வாழ நாட்டில் தொழில் வளர வேண்டும். விவசாயம் அபிவிருத்தி அடைய வேண்டும். எல்லாக் குழந்தைகளும் படிக்க வேண்டும் என்றுதான் மகாத்தமாகாந்தி கூறினார்.

நாட்டில் தொழில் பெருகுகிறது. தேவையும் பெருக்கிக்கொண்டே போகிறது. நாட்டில் போதிய அளவு தொழிற்சாலைகள் பெருக இயந்திரங்களை நம் நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும். வெளிநாடுகளிலிருந்து வாங்க முடியாது. நம் நாட்டில் இயந்திரங்களை உற்பத்தி செய்ய இரும்பு முதலியவற்றைத் தோண்டி எடுக்க வேண்டும். பிறகு உற்பத்தி செய்யப்பட்ட இயந்திரங்களை ஓட்ட, மின்சாரத்த்ஐ உற்பத்தி செய்ய வேண்டும். இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

நமது நாடு மிகப் பழமையான நாடு. மற்ற நாட்டினர். விவசாயம்,தொழில், நாகரிகம் முதலியன தெரியாமல் வாழ்ந்தபோது நாம் நன்கு வாழ்ந்தோம். இடையிலே அடிமைப்பட்டதால் தாழ்ந்தோம். நம்மை அடிமைப் படுத்தியவர்கள் இலாபம் கிடைக்கும் இருப்பார்கள். இலாபம் இல்லை யென்னால் போய்விடுவார்கள். அது போலவே சுரண்டிவிட்டுப் போனார்கள் வெள்ளையர்கள். அதனால் நமது நிலை மேலும் தாழ்ந்தது. பட்டினி, கல்வி இல்லாமை பெருகிற்று. வலிமை குறைந்தது.

நாம் அன்று இழந்த பலத்தை மீண்டும் பெறுவதற்கு நல்ல ஆகாரம் சாப்பிட வேண்டும். அப்பொழுதான் உடல் வலிமை மனவலிமை ஏற்படும். முன்பு ஏர்பிடிக்கு முன்பு கம்மங்கஞ்சி சாப்பிட்டடார்கள். இப்பொழுது இட்லி, காப்பி சாப்பிடுவதால் ஏரைப் பிடித்தவுடன் மயக்கமே வருகிறது. இந்த நிலை மாற வேண்டாமா? அப்படி மாறினால் தான் நீர்வளமும், நிலவளமும், குடிவளமும் பெற்று நல்லமுறையில் முன்னேற முடியும். இதை மறந்து விடக்கூடாது.

நமது இலட்சியம் தொழில், படிப்பு, வீடு

நெல் வயலைப் பார்க்காத ஒருவன் வயல்பக்கம் போகிறான். உழவர்கள் நிலத்தை உழுது, அதாவது சகதியாக மாற்றி அதில் அழகான மணியான நெல்லை விதைக்கிறார்கள். வயலே பார்க்காதவன் அங்கு வந்து “ஐயோ, இவ்வளவு நெல்லை சகதியில் போடுகிறீர்களே! வீணாகப் போகிறதே!” என்று கூப்பாடு போட்டானாம். அதைப் போலவேதான் அரசாங்கத்திட்டத்துக்கச் செலவு செய்வதை வீண் செலவு என்று சொல்லுவதுமாகும்.
பட்டினி, பசி நாட்டில் இருக்க்கூடாது. அனைவருக்உம் படிப்பு வசதி வேண்டும். பெரியவர்கள் வயதான காலத்தில் ‘ஆண்டவனே! என்பிள்ளை பசி இல்லாமல் சாப்பிட வேண்டும். கஷ்டப்படாமல் காப்பாற்று’ என்று கடவுளிடம் வரம் கேட்பதுண்டு. அந்தக் கவலையை அடியோடு போக்கவே திட்டம் போடப்படுகிறது நம் குழந்தைகளுக்கு தொழிலும், படிப்பும் கிடைக்க வேண்டும். எல்லோருக்கும் வீடு, சோறு வேண்டும். அதுவே நம் லட்சியம்.

சோம்பேறி வேதாந்தம் கூடாது.

எல்லோரும் ஒரே தொழிலில் கவனம் செலுத்திக்கொ ண்டிருக்காமால், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுப் பகிர்ந்து செய்ய வேண்டும். எப்படி வாழ்வது என்று சோம்பேறித்தனமான வேதாந்தம் பேசிக்கொண்டு காலத்தை வீணாக்காமல் உழைக்க வேண்டும். ஊருக்கு நல்லது செய்வதில் எல்லோரும் ஒன்று பட வேண்டும்.

சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களை மேம்படுத்துவதே நமது அரசியல் இலட்சியம். இதைச் சிலர் மறைக்கப் பார்க்கிறார்கள். வேறு பாதையில் நாம் போனால் நாடு முன்னேறாது. அதன் வளர்ச்சி பாதிக்கப்படும். ஏழைகள் வாழ்க்கை சீரழியும்.

காந்தி வழியில் நடந்து வாழ்வு பெறுவோம்

சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும்? யார் யாருக்குப் பயன்படவேண்டம் என்று நமது சுதந்திரப் போராட்டத்தலைவர்கள் வழிகாட்டியுள்ளனர். மகாத்மா காந்தி எதற்காக ஆசைப்பட்டாரோ எதற்க்காகப் பாடுபட்டாரோ, அந்த ஆசை நிறைவேறும் வகையில் சுதந்திரத்தைப்பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எல்லோரும் வாழ முடியும். நல்வாழ்வுதான் எல்லோரும் வாழ முடியும் நல்வாழ்வு வாழ முடியும்.

இதைவிட்டு வேறு பாதையில் நாம் சென்றால் நாட்டின் முன்னேற்றம் தடைப்படும். முன்னேற்றம் தடைப்படும் என்றால் என்ன அர்த்தம்? அதாவது ஏழை மக்களுடைய கஷ்டங்களைத் தீர்க்க காலதாமதமாகும். சோற்றுக்கு வழியில்லாமல் தவிக்கும் மக்களுடைய சீர்பட நாளாகும். வேலையில்லாமல் திண்டாடுவர் தொகை குறையாது. அதிகரித்துக் கொண்டே போகும்.

சுதந்திரம் வாங்கியாகிவிட்டதே கொஞ்சநாள் பொறுத்திருப்பொமு. ஆற, அமர நிதானமாக்க் காரியம் செய்யலாம் என்று சும்மா இருந்தால் மேலே சொன்ன கதிதானே ஏற்படும். அதானால்தான் உடனே முழுமூச்சாகப் பிரட்சினைகளைத் தீர்த்துவிட முடியாவிட்டாலம் ஓரளவுக்காவது ஏழ்மை, இல்லாமை, பசி, பட்டினி, பிணி ஆகிய பிரச்சினைகளுக்குப் பரிகாரம் தேட வேண்டும்.

குழப்பங்களை வளர்க்கக்கூடாது.

இந்நாட்டில் எதிர்க்கட்சிகளுக்குப் பூரண சுதந்திரம் உண்டு. எழுத்துரிமை உண்டு. ஏன் இந்த உரிமைகள் எல்லாம்? யாரும் அரசாங்கத்தைப் பார்த்துப் பயப்பட வேண்டியதில்லை. பயப்படுவதென்றால் ஆட்சியில் இருப்பவர்கள்தான் மக்களைப்பார்த்துப் பயப்பட வேண்டும். நல்ல காரியங்கள் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பொது மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள்.

இன்று பல அரிசியல் கட்சிகள் நாட்டில் குழப்பம் ஏற்படுத்துவதைக் தவிர வேறு எந்தக் கொள்கையும் இல்லாதவனாக இருக்கின்றன. நாட்டிற்கு நலவழி காட்ட தலைவர்கள் வேண்டுமே தவிர குழப்பங்கள் செய்வதற்காக தலைவரும் கட்சியும் தேவையில்லை.

உற்பத்தி பெருகினால் வளம் பெருகும்

அந்த நாட்டிலே சுபீட்சம் இருக்கிறதே, இந்த நாட்டிலே செல்வம் கொழிக்கிறதே என்பார்கள். அமெரிக்காவைப் பார். இங்கிலாந்தைப் பார். என்று கூறுவார்கள். எல்லா நாடுகளும் பல முயற்சிகளுக்குப் பின்தான் இன்று சுபீட்சமாக இருக்கின்றன என்பது தெரியாதா?

அடுத்த வீட்டுப்பையன் எவனாவது பெரியவனாகி, பி.ஏ. படித்து இருநூறு ரூபாய் சம்பளம் வாங்குகிறான் என்பதற்காக எஸ்.எஸ்.எல்.சி படித்துக்கொண்டிருக்கும் தன் மகனிடம் ‘பார்த்தாயா அவன் இருநூறு ரூபாய் சம்பளம் வாங்குகிறான். வீட்டிற்கு பணம் கொடுக்கிறான். நீயும் இருக்கிறாயே! என்று தாய் கூறினால் எப்படி இருக்குமோ அது போலத்தான் சிலர் கூறுவதும். இப்பையனும் நன்றாகப் படித்தப்பின் அவனைவிட சம்பாதிக்க முடியாதா? நாமும் தொழில் உற்பத்திப் போராட்டத்தில் வெற்றி பெற்றால் மற்ற நாடுகளை விட மேலாக நிச்சயம் இருக்க முடியும். நிலைமையைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் – படிக்காதவர்கள் மாத்திரமல்ல, படித்தவர்களும் – இப்படிப் பேசுவதை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறதே. தொழிலாளர்கள் சட்ட ரீதியாக தங்கள் நன்மைகளைப் பெற முயற்சிக்க வேண்டும். அரசாங்கம் வேண்டிய உதவிகளைச் செய்யும்.

சரிநிகர் சமானமாக வேண்டும்!

நம் நாட்டைப் பொறுத்தவரை வயிற்றுப்பிழைப்புக்கு வழியில்லாதவரகள் கோடானு கோடிப்பேர். மற்ற முற்போக்கு நாடுகளில் வயிற்றுக்கு இல்லை என்று சொல்லுகிறவர்கள் இருக்கிறார்களா? மோட்டார் வேண்டும். சைக்கிள் வேண்டும், என்றுதானே அவர்கள் கேட்கிறார்கள்.

மற்ற நாடுகளுக்கும் நம் நாட்டுக்கும் வித்தியாசம் அங்கு எல்லாம் பொருளாதார ஏற்றத்தாழ்வு மாத்திரம்தான். ஆனால் நம்நாடு அடிமைப்பட்டிருந்தது. பொருளாதார ஏற்றத்தாழ்வு வித்தியாசம் போன்ற ஏராளமான வித்தியாசங்கள் இருந்தன.

இவற்றைப் போக்க சுதந்திரம் என்றோம். சுதந்திரம் பெற்றோம்.

இப்போதும் நாம் சுகவாழ்வைப் பூரண மாக அடையவில்லை. முன்பு இருந்த நிலையைவிட இப்போது அபிவிருத்தி அடைந்திருக்கிறோம். அவ்வளவுதான். ஏற்றத்தாழ்வைப்போக்கச் சட்டங்கள் இயற்றுகிறோம். ஆனால் பூரண பலனளித்துவிட்டது என்று சொல்லமுடியாது. குடிக்கக்கூடாது என்று சட்டம் போட்டோம். திருட்டுச் சாராயம் காய்ச்சுகிறார்கள் அல்லவா? திருடக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. திருடாமலா இருக்கிறார்கள்? அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்கா அப்படிச் செய்கிறார்கள். ஆனால் ஏற்றத்தாழ்வைப் போக்க ஊழலை அகற்றி சம அந்தஸ்துக் கொண்ட சமதாயம் ஏற்படுவதை சிலர் ஏன் எதிர்க்க வேண்டும்? தாழ்த்தப்பட்டவர்களும் மற்றவர்ளோடு சரிசமமாக வாழத் தகுதியுள்ளவர்களாகச் செய்வதை ஏன் எதிர்க்க வேண்டும்?

நிலையான அரசாங்கம்

நிலையான அரசாங்கம் என்றால் என்ன? அப்படிப்பட்ட அரசாங்கம் தேவை என்பது எவ்வளவு முக்கியம்? அதனால் நாட்டுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் எவை? என்பதையும் தெரிந்துகொள்வது முக்கியமாகும்.

நிலையான அரசாங்கம் என்பது முதலில் பூரண மெஜாரிடி பலம் உள்ள கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்பதுதான். அடுத்து அக்கட்சியின் பலம் இடையில் சிதைந்துவிடாமல் போக சுய பலத்திலேயே இயங்க வேண்டியது முக்கியமாகும்.

இப்படி அமையும் நிலையான அரசாங்கத்தில்தான் ஆளும் கட்சி தனது பலம் குறைந்து விடுமோ என்ற பயம் இல்லாமல் நிர்வாக வேலைகளைத் தயவு தாட்சண்யமின்றிச் செய்ய முடியும்.

அப்படியின்றி இரண்டு மூன்று கட்சிகள் சேர்ந்து கூட்டு அரசாங்கம் அமைப்பதும், அல்லது ஒருகட்சி, வேறு சில கட்சிகளின் ஆதரவையோ பெற்றுக்கொண்டு ஆட்சி நடத்துவதும் எப்படி இருக்கும்? அதை நிலையான அரசாங்கம் என்று கருத முடியுமா? அப்படிச் செயல்படத்தான் முடியுமா? முடியவே முடியாது.

பல்வேறு கொள்கைகளைக் கொண்ட சில கட்சிகள் சேர்ந்தோ அல்லது சுயேச்சைகள் ஆதரவு பெற்றோ அமைக்கப்படும் அரசாங்கத்தில் ஒரு பொதுவான நிலைத்த கொள்கையோசீரான செயல் முறையோ நடைமுறையில் சாத்தியமற்றதாக்ப் போய்விடும்.

அரசாங்கப் பொறுப்பிலுள்ள ஒருகட்சிக் கார்ர் ஒன்றைச் சொல்வார். மற்றொரு கட்சிக்கார்ர் கவேறொன்றைச் செய்ய வேண்டுமென்பார். மொத்தத்தில் கூட்டு ஆட்சியில் எது செய்தால் தங்கள் கட்சிக்கு நல்லது அல்லது பெருமை என்ற போக்கில் கூட்டு ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஒவ்வொரு கட்சியும் எண்ணுமாகையல் காரியங்கள் சீராக நடைபெறாமல் போய்விடும்.

மதவேறுபாடு கூடாது

நமது தேசத்தில் இந்துவுக்கு உள்ள உரிமை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கும் உண்டு. ஆகவே மத இனபாகுபாடு கொள்ளாது எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

நாடு ஒன்று நாமெல்லாம் இந்தியர் என்ற எண்ணத்தை ஏற்படுத மகாத்மா காந்தி அரும்பாடுபட்டார். அவர் எண்ணம் ஓரளவு செயலானதால்தான் நாடு சுதந்திரம் அடைந்தது. மீண்டும் பழைய கேடுகளை திரும்ப몮புகத்த பலர் வேலை செய்கின்றனர். சிலர் தூண்டிவிடுகிறார்கள். ஆனால் அவதிப்படுவது ஏழைகள். தூண்டி விட்டுவிட்டு அவர்கள்எல்லா சாதியையும் சேர்ந்த பணக்கார்ர்கள் தங்களுக்குள் சிநேகமாக இருப்பார்கள். நாம தன் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாவோம். இந்தப் பிளவு மனப்பான்மையை அடியோடு ஒழிக்கவேண்டும். நம்மோடு நம் காலத்தோடு இந்தக் கேடுகள் எல்லாம் குழி தோண்டிப் புதைகப்பட வேண்டும். நமது பிள்ளைகள் – குழந்தைகள், நமது சண்டையைப் பார்த்து அந்தப்பிஞ்சு மனங்களிலும் இந்தப் பிரிவின் மனப்பான்மை தோன்றிவிடக்கூடாது. அவர்கள் இன்னும் நெடுங்காலம் வாழ வேண்டியவர்கள். சமுதாயத்தில் பல குறைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அவைகளுக்கு நல்ல வழியில் தீர்வு காண வேண்டியது நமது கடைமையாகும்.

அண்ணல் வழி நடப்போம்

நமது நாட்டிற்கு பலாத்காரமற்ற முறையில் சுதந்திரம் சம்பாதித்துக் கொள்ளும் வழியைக் காட்டி, அந்த வழியில் பாடுபட்டு, சுதந்திரம் வாங்கிக்கொடுத்துவிட்டே மாண்டார் அண்ணல் காந்தி. மக்களுக்காவே அதிலும் குறிப்பாக ஏழை எளியவர்களுக்காகவே உத்தம வாழ்க்கை வாழ்ந்து மடிந்தார் மகான் காந்தி.

காந்திஜியின் உயரிய எண்ணங்கள் நனவாக்கப்பட வேண்டும். அவரது நல்ல இலட்சியங்கள் மக்களது மனதெங்கும் ஊறிப் பதியவேண்டும். எல்லோரும் நல்வாழ்வு பெறப்பாடுபட வேண்டும்.

மகான் காந்திஜியின் உயரிய எண்ணம் என்ன? எதற்காக வாழ்ந்தார்? பாடுபட்டார்? கண்டபலன்தான் என்ன? யோசித்துப் பார்க்க வேண்டும்.

வாழ்க்கைத்தரத்தில் மட்டுமல்லாமல் சமூக சமுதாய அந்தஸ்த்திலும் மக்கள் அனைவரும் சரி நிகர் சமானம் என்ற உணர்ச்சி நாடெங்கும் நிலவ வேண்டும். உயர்வு – தாழ்வு உணர்ச்சிக்கு வழியின்றி மக்கள் வாழ வேண்டும். அந்த மகத்தான சமுதாயம் உருவாக வேண்டும் என்ற இலட்சியத்தைப் பரப்ப வேண்டும்.

இந்த இலட்சியத்தை மக்களிடையே பரப்பி- சமதர்ம சமுதாயத்தை ஏற்படுத்தத்தான் மகான் காந்தி சுதந்திரம் வேண்டினார். பாடுபட்டுப் பெற்றுத் தந்தார். வேறு எதற்காக அவர் சுதந்திரம் வேண்டுமென்றார்? வேறெங்கும் இல்லை. மக்கள் அனைவரும் சுகமாக நல்வாழ்வு வாழத்தானே!

ஏழைகளும் காந்திஜியும்

நமது நாடு அடிமைப்பட்டிருந்தபோது சாதாரண ஏழை மக்கள் அந்நிய அரசாங்கத்தின் கீழ் அடங்கி ஒடுங்கிக் கிடக்க நேரிட்டது. அன்றாட வாழ்க்கைக்ப் பிரச்சினை பற்றிய அல்ல்லே பெரிதாக அவதிப்பட்ட அவர்களுக்காக யாரும் இல்லை.

அந்தக் காலத்தில் இருந்த நமது பெரியவர்களும் சரி, பல்வேறு கட்சிகள், சங்கங்களும் சரி, பல்வேறு கட்சிகள், சங்கங்களும் சரி, வெள்ளையரது சர்க்காரில் இந்தியருக்கு உயர்ந்த பதவிகள் கொடுப்பது, சட்டசபை ஸ்தானங்கள் கொடுப்பது பற்றிய தங்கள் பாட்டையேதான் பெரிதாகப்பாடிக்கொண்டிருந்தார்கள்.

இந்த சமயத்தில் மகான் காந்திதான் முதன் முதலில் ஏழைகளைப் பற்றிப் பேசினார். அந்நிய அரசாங்கத்தினால் ஏழை மக்கள்தான் பெரிதும் வாழ வழியின்றி அல்லற்படுகிறார்கள் என்பதை கவனித்துக் கவலைப்பட்டார்.

அந்நிய அரசாங்கத்தின் தயவினால் ஏதோ சில இந்தியருக்குப் பெரிய சர்க்கார் பதவி கிடைக்க வேண்டும். இந்தியர்களை ஐகோர்ட்டு நீதிபதி போன்ற பதவிகளுக்கு நியமிக்கவேண்டும் என்பன போன்ற காரியங்களுக்காகப் போராடினார்ல போதாது. வெள்ளைக்காரன் தயவாக சிலருக்குத் தரும் பதவியால் நாட்டுக்கு என்னப்பயன்? பெரும்பாலான ஏழை மக்களது வாழ்வு உயர வழி பிறக்குமா? என்று எண்ணி நமது நாட்டு விடுதலை இயக்கத்தை காங்கிரசை ஏழைகள் பக்கம் முதலில் திருப்பியவர் காந்திஜிதான்.

புதுவழி காட்டிய காந்தி

நம்நாட்டின் விடுதலை இயக்கத்திற்குக் காந்திஜி தலைமையேற்கும் நேரத்தில் இருந்த சூழ்நிலை என்ன என்பதையும் அதனை காந்திஜி எப்படி மாற்றியமைத்து விடுதலை தேடித்தாந்தார் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அப்போது வெள்ளை அரசாங்கம் இந்தியர்களில் சிலருக்கு தங்களுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கும்படி செய்து கொள்ள பல்வேறு முறைகளைக் கையாண்டு வந்தது.

அதுவரை வெள்ளையர்களுக்உக மட்டுமே அளிக்கப்பட்டு வந்த சில பெரிய சர்க்கார் உத்தியோகங்களில் ஒரு சிலவற்றுக்கு இந்தியரையும் நியமித்தது. இப்படிப்பட்ட சலுகைகளைக் பெறுவதில் பெரும் போட்டியும் அந்தச் சலுகைகளைப் பெருக்கிக்கொள்வதில் அக்கறையும் காட்டப்பட்டு வந்தது.

பிரிட்டிஷ் சர்க்காருடன் ஒத்துழைத்து அதிகாரத்தில் பங்கு கேட்டுப் பெறுவதில் திருப்திபடும் கோஷ்டி ஒருபுறம். மிதவாதிகள் மற்றொருபுறம். வெள்ளைக்காரனை வெறுத்து அடியோடு வேரறுக்க வேண்டும் என்று துப்பாக்கி ஏந்தி வெள்ளையரைச் சுட்டு அதற்காகத் தூக்குமேடையேறவும் தயாராயிருந்த அதிதீவிரவாத கோஷ்டி ஒருபுறம். பல்வேறு வகைப்பட்ட கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் கோஷ்டிகளிடையில் நாட்டு மக்கள் சிக்கித் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த காலத்தில்தான் காந்திஜி விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்டார். தலைமையேற்று வழிகாட்டத் தொடங்கினார்.

அரசாங்கத்தின் கடமை!

இந்திய நாட்டுக்கு முதலில் தேவையானது என்ன? சுதந்திரம்தான். வேறு எதுவும் அல்ல என்றார் காந்திஜி. சுதந்திரம் வந்தால்தான் நாட்டின் தாழ்வான நிலையும் குறிப்பாக்க் கோடானுகோடி ஏழைகளது வாழ்க்கைப் பிரச்சினைகளும் தீரும் – தீருவதற்கு வழி செய்ய முடியும் என்றார்.

காந்திஜி கேட்ட சுதந்திரம் வந்தாகி விட்டது. காந்திஜியின் எண்ணத்தை நிறைவேற்றி செயல்படுத்த சுயராஜ்ஜியத்தைப் பயன்படுத்த வேண்டும். இன்றைய அரசாங்கத்தின் வேலை அதுதானே!

கிராம நலன் பெருக வேண்டும்.

மக்களிடம் – குறிப்பாக ஏழைகள் கிராம்ப்புற மக்களிடம் மன மாறுதல் ஏற்படுவுத முக்கியம். கிராம்ப்புறங்களில் நல்வாழ்வும், நாகரீக வசதிகளும் ஏற்படுத்த சமுதாய நல அபிவிருத்தி திட்டம் சிறப்பான பணி புரிந்து வருகிறது.

சமுதாய அபிவிருத்திப் பிரதேசங்களில் நடந்த வேலைகள் பற்றி எவ்வளவோ குறைகள் கூறப்படுகின்றன. அவைகளில் பல நியாயமான வையாகவும் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் சமுதாய அபிவிருத்தித் திட்ட வேலைதான் நாம் மேற்கொண்ட புரட்சிகரமான வேலை என்பது நிச்சயமான உண்மை.

இதுவரை கிடைத்துள்ள பயன்களும் மிகவும் ஆச்சரியப்படத்தக்க முறையில் அமைந்துள்ளன. இவ்வாறு குறிப்பிடும்பொழுது, சில இடங்களில் ஓரளவுதான் வெற்றி கண்டிருக்கிறது. சில இடங்களில் தோல்வி அடைந்திருக்கிறோம். செய்ய உத்தேசித்துள்ளவைகளைச் செய்ய முடியாமல் ஆகியிருக்கிறது. என்பதை முழுக்க உணர்ந்துதான் இதைத் தெரிவிக்கிறேன். இப்போது இந்தத் திட்டம் கிராமாந்திர இந்தியாவில் நெருங்கி வியாபித்து விட்ட திட்டமாக இருக்கிறது. பல்லாயிரக் கணக்கான கிராமங்களுக்கு அது வியாபித்திருக்கிறது என்பதால் மாத்திரம் இப்படிச் சொல்லவில்லை. ஆனால் அது ஏற்படுத்தியுள்ள புதிய ஜீவனைக்கருதித்தான் இவ்வாறு சொல்கிறேன்.

உற்பத்தியே முதல் தேவை

நமது உடனடி இலட்சியங்கள் எவை? விவசாய உற்பத்தியில் கணிசமான அபிவிருத்தி காணுவது. முக்கியமாக உணவுத் தானியங்கள் அதிக உற்பத்தி காணுவதும், அதையொட்டி கிராம சிறு தொழில்கள் அபிவிருத்தியும் இன்று ஜீவ முக்கியத்துவமுள்ள விஷயங்களாகும். சமீபத்தில் நாம் தீர்க்க வேண்டியிருக்கிற மிக முக்கியமான பிரச்சினை அதுதான். மற்றவையெல்லாம் இந்தப் பிரச்சினையைப் பொறுத்தே இருக்கின்றன. தொழில்கள் விவசாய வளர்ச்சியை பொறுத்தே பெருக முடியும். கிராமங்களில் ஏற்பட வேண்டுமென்று நாம் விரும்புகிற வசதிகளெல்லாம் விவசாய உற்பத்தி எவ்வளவு தூரம் முன்னேறுகிறது என்பதைப் பொறுத்தே அமையும்.

சமுதாயம் முன்னேற்றமடைய

இந்தியாவில் சமுதாய நல அபிவிருத்தி வேலை ஒரு முக்கிய கட்டத்துக்கு வந்திருக்கிறது எதிர்கால வெற்றியை ஏதோ லேசாக மனத்தில் எழுகிற உணர்ச்சிகளைக் கொண்டே மதிப்பிட்டு விடலாமா? ஆனால் உண்மையில் உணவுத் தானிய உற்பத்தி எந்த அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதைப்பொறுத்தே அது மதிப்பிடப்படும். எனவே, ஒவ்வொரு சமுதாய அபிவிருத்தித்தொகுதியும் இதைக் கவனத்தில் வைத்து அந்த லட்சியம் ஈடேற இடைவிடாமல் உழைக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியும் கிராம்ம் வரை வியாபிக்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியின் குடும்பம் வரை எட்ட வேண்டும். அப்படியானால்தான் இந்த முயற்சி மிக விரிந்த அடிப்படையில் தனிப்பட்ட ஒவ்வொருவரும் ஈடுபட்டு வேலை செய்கிற முயற்சியாக இருக்கும்.

படிப்படியாக வந்த நன்மை

ஏழ்மையையும், இல்லாமையையும் வேலையில்லாத்திண்டாட்டத்தையும் போக்க வேண்டும். ஆனால் ஒரேயடியாக ஒரே நாளில் இவற்றைத் தீர்த்து விட முடியுமா என்ன? எப்படி முடியும்? யாராலும் முடியாது! அப்படி யாராவது செய்து காட்டுகிறேன் என்றால் ரொம்ப சந்தோஷம். சும்மா சத்தம் போட்டு சொன்னால் மட்டும் காரியம் நடந்துவிடாது. நடைமுறையில் இந்தப் பிரச்சினைகளுக்குப் பரிகாரம் காண நல்ல வழி வகுத்து படிபடிப்படியாக வேலை செய்தால்தான் நடக்கும். அப்படித் தானே செய்து வருகிறோம்.

தவறான எண்ணம்.

சுதந்திரம் வந்த பிறகுதான் நாட்டிலே வறுமை, பசி, பட்டினி, பிணி எல்லாம் வந்து விட்டதாகவும், பெரிதாக வளர்ந்து வட்டதாகவும், கூடச் சிலபேர் சத்தம் போடுகிறார்கள். இந்தப் பசி, பட்டினி, பிணி எல்லாம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. நம்முடைய நாட்டில் மட்டும் ஏற்பட்டவை அல்ல. வெகு காலமாகவே எல்லா நாடுகளிலும் இருந்து வரும் பிரச்சினைகள்தானே!

இவையெல்லாம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக இருந்து வருகிறது. அந்தந்த நாட்டிலும் அங்குள்ள நிலைமைக்கு ஏற்றபடி பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு வருகிறார்கள். ஆனால் எங்கேயும் அவற்றை ஒரேயடியாகப் பரிகாரம் கண்டுபிடித்து நீக்கி விடவில்லையே!

இதனால் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கவே முடியாது என்பது அர்த்தமல்ல. பிரச்சினைகளை சுலபமாகப் போக்கிவிடலாம் என்பதும் தவறான எண்ணம் என்பதையும் உணர வேண்டும்.

பாடுபட்டால்தான் பலன் கிடைக்கும்

நம்முடைய பொருளாதார நிலை வளர வேண்டும் என்று சொன்னால் திடீர் என்று எப்படி முடியும்? இங்கிலாந்திலே நூற்றுக்கணக்கான வருஷங்களாக அதை வளர்த்து வந்திருக்கிறார்கள். அதைப் பார்த்தவுடனே அதைப்போல நடக்க முடியுமா? அமெரிக்காவைப் பார்த்தவுடனே அமெரிக்காவைப்போல வளர முடியுமா? பிரிட்டிஷ் ராஜயத்தைப் பார்த்தவுடனே அதபோல் இருக்க முடியுமா? தன்னையும் தன்னைச் சார்ந்தவர்ளையும் தவிர மற்றவர்களைத்தான் அவர்கள் பார்க்கிறார்கள்.

சொந்த முயற்சியே பலன் கொடுக்கும்

சுயராஜ்யம் வந்து பல வருஷங்கள் ஆகிவிட்டதே பட்டினியைத் தீர்த்து விட்டாயா? பஞ்சத்தை ஒழித்து விட்டாயா? என்று இவர்கள் கேட்கிறார்கள். அமெரிக்காவைப்பார்த்தாயா? ரஷ்யாவைப் பார்த்தாயா? என்றும் கேட்கிறார்கள். அங்கெல்லாம் எதற்காகப்பார்க்க வேண்டும்? அங்கே பார்த்து பயன் என்ன? நம் ஊரையே பார்த்தால் போதும். இங்கே சோறு இல்லை. வீடு இல்லை. வேலை இல்லை. படிப்பு இல்லை. அதைத்தானே பார்க்க வேண்டும். இந்த ஊரிலே வேலை இல்லாதவர்களுக்கும் படிப்பு இல்லாதவர்களுக்கும் சோறு இல்லாதவர்களுக்கும் என்ன பண்ண வேண்டும் என்று யோசிக்க வேண்டும். அதற்கு வேண்டிய பிரயத்தனம் நாம் பண்ண வேண்டுமே தவிர வேறு நாட்டைப் பார்த்து என்ன பண்ண இருக்கிறது?

காரியத்தில் கண் வேண்டும்.

வேற்று நாட்டின் சில அனுபவங்கள் நமக்குத் தெரிய வேண்டும். அந்த நாட்டுக்குச் சுயராஜ்யம் வருவதற்கு முன்னாலே -அவர்கள் சொந்த அரசாங்கம் ஏற்படுவதற்கு முன்பாகவே அவர்கள்பட்ட கஷ்டங்கள், சிரமங்கள் அவர்கள் எப்படி முன்னேற்றம் அடைந்தார்கள் என்பதை நாம், பார்க்க வேண்டும். அவர்கள் அடைந்த முன்னேற்றங்களையெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்குக் கொள்கையிலே எப்படி தயக்கம் ஏற்பட்டது.? அவர்களுக்கு முட்டுக்கட்டை எங்கேயெல்லாம் இருந்தது என்பதையெல்லாம் பார்த்து நம் எதிரேயுள்ள முட்டுக்கட்டையைத் தூக்கி எறிய வேண்டும்.

பாடுபட்டு அந்த நாட்டின் கொள்கைகளை வைத்துக்கொண்டு நம்முடைய நாட்டை முன்னேற்றப் பாதையிலே ஓட்டிக்கொண்டு போக வேண்டும். முன்னேற்றப் பாதையிலே போவதற்கு முயற்சி எடுத்துக்கொள்பவர்கள் பின்னாலே திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டும்.