“நமது நாடு எதிரி படைகளை வீழ்த்திவிட்டது. ஆனால், தேசத்தின் இறையாண்மைக்கு உறுதுணையாக பொருளாதார விடுதலையை பெறவதன் மூலமே நமது விடுதலை உறுதி செயப்படும். மிகப்பெரிய அரசியல் மற்றும் இராணுவ வெற்றிகள் நிலைத்திருக்க வேண்டுமென்றால், அந்த வெற்றிகளுக்கு மணிமகுடங்களாக பொருளாதார வெற்றிகள் அமைய வேண்டும்”

என்று கூறினார் துருக்கியின் தந்தை என்று அழைக்கப்பட்ட முஸ்தபா கமால் பாட்சா.

“தொழிலும், விவசாயமும் மறுசீரமைப்பு செய்யப்டாமல் பொதுவுடைமை சமுதாயத்தை உருவாக்க இயலாது. அறிவியலைக் கொண்டுதான் புதுமையான முறையில் தொழிலையும், விவசாயத்தையும் உருவாக்க வேண்டும். அந்தப் புதுமையான முறைதான் மின்சாரம். நாடு முழுமையும் தொழில் மற்றும் விவசாயத் துறைகளை மின்மயமாக்குவதன் மூலம்தான் பதவுடைமை சமுதாயத்தை நம்மால் உருவாக்க இயலும்.”

என்று 1920 ஆம் ஆண்டிலேயே தீர்க்கத் தரிசனத்தோடு முழங்கியவர் லெனின்.

ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர், ரஷ்யாவின் பொருளாதார மேம்பாட்டுக்கு முன்னுரிமையை அளித்தார் லெனின். அதிலும் குறிப்பாக, நீர்த்தேக்கங்களுக்கும் மின் உற்பத்தித் துறைகளுக்கும் அதிக முக்கியத்துவத்தை லெனில் அளித்தார்.

கம்யூனிசப் புரட்சிக்கு பின்னர் மலர்ந்த புதிய சீனாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மாசேதுங் அதிக அக்கறைக் காட்டினார். புரட்சிகுப் பின்னர், பல நூற்றுக்கணக்கான திட்டங்கள் ஒரே நேரத்தில் சீனாவில் துவக்கப்பட்டன. நீர்தேக்கங்கள் மின்சாரம், தொழில்துறை ஆகியவற்றிக்கு முன்னிரிமை அளித்து செயல்படுத்தப்பட்டன.

இப்படி விடுதலை பெற்ற நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுக்கு காணப்பட்ட வழி முறைகளையே தமிழகத்தின் பொருளாதார உயர்வுக்கும் அடித்தளமாக கொண்டார் காமராஜர். அந்த வகையில் நீர்ப்பாசனம், மின்மயமாக்குதல் இந்த இரண்டும் முதற்படிநாகவும், அடுத்த நிலையில் தொழிற்துறையும் காமராஜர் ஆட்சியில் முன்னுரிமை பெற்று செயல்படுத்தப்பட்டன.

நீர்ப்பாசனம்

கரிகால் சோழனால் காவிரியில் கட்டப்பட்ட கல்லணை, முதலாம் ராஜ ராஜ சோழனால் அமைக்கப்பட்ட உய்யக் கொண்டான் கால்வாய், பாண்டிய மன்னர்களால் தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்ட பல கல் அணைகள் தமிழர்களின் பொறியியல் மேன்மைக்கும் நீர்பாசன முறைகளுக்கும் சான்றாக விளங்குகிறது. மேட்டூர் அணை, பெரியாறு அணை ஆகிய இரண்டைத் தவிர ஆங்கிலேயர்களின் காலத்தில்நிறைவேற்றப்பட்ட நீர்ப்ப்பாணன திட்டங்கள் யாவையும் சிறுசிறு திட்டங்கள்தான். 1889 முதல் 1947 வரை ஆங்கிலேயர்களால் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களால் 9,75,096 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்றன. விடுதலை பெற்ற 1947லிருந்து 1954 வரை தற்போதைய தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களால் 66,000 ஏக்கர் நிலங்கள் மட்டுமே பயன்பெற்றன. முதலாம் அய்ந்து ஆண்டுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல நீர்ப்பாசன திட்டங்கள் விரைவுப்படுத்தப்படாமல், ஆமை வேகத்தில் நகர்ந்தன.

இந்த சூழ்நிலையில் 1954-ஆம் ஆண்டு பதவி ஏற்ற காமராஜர் நீர்ப்பாசன திட்டங்களால் மூன்று பெரும் நன்மைகள் உணவு உற்பத்திப் பெருக்கம், புதியபாசனப் பகுதிகளால் வேலை வாய்ப்புக்கள் அதிகரிப்பு மற்றும் மின்சார உற்பத்தி இருப்பதைக் கண்டார். அதன் விளைவாக, சிறிதளவு வாய்ப்பு இருந்த ந்திகளிலும் கூட அதற்கேற்ற நீர்ப்பாசனத் திட்டம் என்ற நிலையில், தமிழகத்தின் எல்லா ந்திகளிலும் பாசனத் திட்டங்களை ஏற்படுத்தியது காமராஜர் ஆட்சி. இதன் காரணமாக, காமராஜர் ஆட்சியிலிருந்து ஒன்பது ஆண்டுகளில் பெரிய அணைத் திட்டங்களால் மட்டும் ஏறக்குறைய 3,73,436 ஏக்கர் நிலங்கள் புதிதாக பாசன வசதிப் பெற்றது.

காமராஜர் ஆட்சிக்காலத்தில் நிற்வேற்றப்பட்ட பெரிய அணைத் திடங்களை காணும்பொது, ஒருவேளை அவரது ஆட்சியில் நிறைவேற்றப்டாமல் இருந்திருந்தால் அவைகள் நிறைவு பெறாத திட்ட்கள் என்ற் ட்டியலில் சேர்ந்திருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது.

நீர்த்தேக்கத் திட்டங்கள்

1. கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத் திட்டம்- 1956-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 1957-ஆம் ஆண்டு (கிருஷ்ணகிரி அணைத்திட்டம்) முடிவுற்றது. பொன்னியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணைத்திட்டத்தால் 7500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது.

2. அமராவதி நீர்த்தேக்கத் திட்டம்-அமராவி ஆற்றின் குறுக்கே (1958-ல்) கட்டப்பட்ட இந்த அணைத் திட்டத்தின் பயனாக புதியதாக 15,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.

3. சாத்தனூர் நீர்த்தேக்கத் திட்டம்- ஆர்க்காடு மாவட்டத்தில், பொன்னி ஆற்றின் குறுக்கே (1957-ல்) கட்டப்பபட்ட இந்த அணைத்திட்டத்தால் 20,000 ஏக்கர் நிலங்கள் பாணன வசதி பெற்றன.

3. புள்ளம்பாடி கால்வாய்த்திட்டம்- காவிரியின் மேல், அணைக்கட்டிலிருந்து 54 மைல் நீளமுள்ள கால்வாய் வெட்டப்பட்டு திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி, உடையார்பாளையம் தாலுக்காவில் 24,114 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், புள்ளப்பாடி கால்வாய்த் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

5. வீடுர் நீர்த்தேக்கத்திட்டம்-திண்டிவனம் அருகிலுள்ள வீடுர் கிராமதில் 1958-ல் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தினால் 3200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. இதில் பாண்டிச்சேரி மாநிலத்திலுள்ள 1000 ஏக்கர் நிலமும் அடங்கும்

6. புதிய கட்டளை மேல்நிலைக் கால்வாய்த்திட்டம்- 86 மைல் நீளம் கொண்ட புதிய கட்டளைக கால்வாய்த் திட்டத்தின் மூலமாக 8622 ஏக்கர் தரிசு நிலங்கள் பாசன வசதி பெற்றன.

7. கீழ்பவானி திட்டம் – பவானி ஆற்றின் குறக்கே கட்டப்பட்ட இந்த அணைத்திட்டத்தினால் 2,07,000 ஏக்கர் நிலங்கள் பயனடைந்தன. 1957-ஆம் ஆண்டு இத்திட்டத்தின் மூலம் முழுமையான பலன்கள் மக்களைச் சென்றடைந்தன.

8. மணிமுத்தாறு திட்டம்- இத்திட்டம் 1958 -ஆ ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றோடு, மணிமுத்தாறு சேரும் இடத்திற்கு முன்பாக இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணைத்திட்டத்தோடு, மழைநீரை நம்பி விவசாயம் செய்து வரும் 20,000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கும் வித்ததில், அணையின் வலது புறத்தில் 28மைல் நீளக் கால்வாயும் வெட்டப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலமாக தண்ணீரைப் பற்றாக்குறையால் அடிக்கடி அவதிப்படும், தாமிரபரணி ஆற்றின் மூலம் பாசன வசதி பெறும் 83,000 ஏக்கர் நிலங்களுக்கு நீர் தொடர்ந்து கிடைக்கும் வகையில் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

9. ஆரணி ஆறு திட்டம் – ஆரணி ஆற்றின் குறுக்கே கடப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், புதிதாக 13,600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றதோடு, 13,000 ஏக்கருக்கு பாசன வசதி உறுதிசெய்யப்பட்டது. இந்தத் திட்டம் 1958 – ஆம் ஆண்டு முழுமையடைந்தது.

10. பரம்பிக்குளம் – ஆயாறு திட்டம்- தமிழ்நாடு கேரள மாநிலங்களின் கூட்டுதிட்டமாக அன்றே 32 கோடி ரூபாய் செலவில் பல துணைத் திட்டங்களையும் கொண்தாக இத்திட்டம் அமைந்திருந்தது. அதற்கான ஒப்பந்தமும் கேரள அரசோடு போடப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தின்படிமேற்கு நோக்கி ஓடி அரபிக் கடலில் கலக்கின்ற பரம்பிக்குளம் நதி மற்றும் சாலக்குடி துணை நதிகளினுடைய நீரை பயன்படுத்தும் கூட்டுத்திட்டடமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி சோழியாறு ந்தியில் இரு அணைகளும் பரம்பிக்குளம், பெரும்வாரி பள்ளம், தனுக்கடவு மற்றும் தேக்கடி ஆகிய ஒவ்வொரு நதிகளிலும் ஒரு அணைத்திட்டமாக பல திட்டங்களைக் கொண்டது இந்த திட்டம். இது தவிர ஆழியாறு நதியின் ஒரு
நீர்த்தேக்கமும் பாலாறு ந்தியில் ஒரு நீர்த்தேக்கமும், இது தவிர பல மைல் நீளத்திற்கு மலக்குடைவு களையும் கொண்டதாக இந்த திட்டம் தீட்டப்பட்டிருருந்தது. 1963 வரை இந்த திட்டம் பலமுறைகளில் முடக்கவிடப்பட்டு தீவிரமாக வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. சோழியாறு அணை, பரம்பிக்குளம் மலைக்குடைவு பரம்பிக்குளம் அணை, ஆழியாறு அணை, ஆழியாறு மலைக்குடைவு நவமலை மலைக்குடைவு, திருமூர்த்தி அணை, வேட்டைக்காரன் புதூர் கால்வாய், பரம்பிக்குளம் பிரதான காலவாய், சேதுமடை கால்வாய், பொள்ளாச்சி கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் என்று ஏறக்குறைய திட்டத்தினுடைய பெரும்பகுதி முடிவடையும் நிலையை 1963-ஆம் ஆண்டு எட்டியிருந்தது.

வைகை நீர்த்தேக்கத்திட்டம்- மதுரை மாவட்டதில் வைகை ஆற்றின் குறுக்கே 1959ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த திட்டத்தினால் புதிதாக 20,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது.

மேட்டூர் கால்வாய்த்திட்டம்- 1958 -இல் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தினால் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.

மின்சாரம்

விவசாய வளர்ச்சிக்கழகம், தொழில் வளர்ச்சிக்கும் மின்சாரம் அவசியமானதால் காமராஜர் ஆட்சிக் காலத்தில், மின்சார உற்பத்திப் பணிகளுக்கு சிறப்பான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. காமராஜர் ஆட்சிக் பொறுப்பை ஏற்றபோது, 156 மெகாவாட்டாக இருந்த மின்சார உற்பத்தித் திறன், 571 மெகாவாட்டுகளாக உயர்ந்தத்து. இதற்காக நீர்மின் நிலையங்களுக்கும் அனல்மின் நிலையங்களும் புதியதாக உருவாக்கப்படன. இது மட்டுமல்ல ஏன்கனவே இயங்கி வந்த நீர், அனல் மின்நிலையங்கள் திறன் அதிகரிக்கப்ட்டது.

ஏற்கனவே இயங்கி வந்த பைகாரா, மேட்டூர், பாபனாசம், குந்தா 1 ஆகிய நீர்மின்திட்டங்களோடு சென்னையில் இயங்கி வந்த அனல் மின்சார உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் நோக்கோடு காமராஜர் அரசு பல புதிய நீர்மின்திட்டங்களையும், அனல் மின் திட்டங்களையும் ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி மத்திய அரசிடம் போராடி நெய்வேலி அனல் மின்திட்டத்தையும், கல்பாக்கம் அணுமின் திட்டத்தையும் தமிழகத்திற்கு காமராஜர் அரசு பெற்றுத்தந்தது. காமராஜர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மின் உற்பத்தி திட்டங்கள் பின்வருமாறு:

குந்தா நீர்மின்திட்டம்- பன்னாட்டு திட்டங்களோடு ஒப்பிடும்போது நம் நாட்டில் மேற்கொள்ளப்பட மிகப் பெரிய நீர்மின்திட்டமாகும். 1956-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டம் கனடா நாட்டு ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டது. 1960-ஆம் ஆண்டு செயல்பட தொடங்கிய இத்திட்டத்தின் மொத்த உற்பத்தி திறன் 1,40,000 கிலோ வாட் ஆகும்.

கூடலூர் நீர் மின் திட்டம்- மதுரை மாவட்டம் கூடலூருக்கு அருகில் பெரியாறு நீரை பயன்படுத்தி இந்த நீர்மின் உற்பதி திட்டம் அமைக்கப்பட்டது. 1955-ல் துவக்கப்பட்டு 1958-ஆம் ஆண்டு நிறைவு பெற்ற இத்திட்டத்தின் உற்பத்தி அளவு 1,40,000 கிலோ வாட் ஆகும்.

சென்னை அனல்மின்நிலையம்-ஏற்கனவே இயங்கி வந்த சென்னை அனல் மின்நிலையத்தில் மூன்றாவது மின்உற்பத்தி பிரிவு 1958-ஆம் ஆண்டு செயல்பட தொடங்கியது.

சமயநல்லூரில் அனல்மின்நிலையம்-மதுரைக்கு அருகே சமயநல்லூரில் அனல்மின்நிலைம் அமைக்கப்பட்டது. அதனுடைய உற்பத்தி திறன் 14,000 கிலோ வாட் ஆகும்.

மேட்டூர் புனல் உற்பத்தி திட்டம்- மேட்டூர் அணையிலிருந்து விடப்படும் விவசாய கழிவு நீரை பயன்படுத்தி அமைக்கப்பட்ட சுரங்க நீர்மின்திட்டமாகும் இது. இந்த நீர் மின்திட்டத்தினுடைய திறனானது ஒரு இலட்சம் கிலோ வாட் ஆகும்.

நெய்வேலி அனல்மின் திட்டம்-நெய்வேலியில் பெறப்பட்ட பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தி நான்கு இலட்சம் கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்டதாக அமைக்கப்பட்டது.

1963-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு கொண்டிருந்த திட்டங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவை 54 மில்லியன் உற்பத்தி திறன் கொண்ட சாண்டியநல்லூர் நீர்மின் உற்பத்தி திட்டம், குந்தா நீர்மின் உற்பத்தி திட்டத்தினுடைய இரண்டாவது பிரிவு, பரம்பிக்குளம் ஆழியாறு நீர்மின் உற்பத்தி திட்டத்திலுள்ள பல்வேறு திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி ஒகேனக்கல், பாண்டியாறு புன்னம்புழா, மேல்தாமிரபரணி, சுருளியாறு பாலியாறு நீர்மின் உற்பத்தி திட்டங்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு செயல்படுத்தக்கூடிய நிலையை காமராஜர் அரசு ஏற்படுத்தியது.

இந்த வகையில், தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட மின்திட்டங்கள் மூலமாக, மின்சக்தித் திறன் 1963 ஏப்ரல் 1-ஆம் தேதியன்று 6,30,700 கிலோ வாட்டாக உயர்ந்தது. இதில் நெயவேலி அனல்மின் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட 70,000 கிலோ வாட்டும் அடக்கம்.

கிராமப்புற மின்மயமாக்குதல்

காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில், தமிழ்நாட்டின்மொத மக்கள் தொக்யில் 75 விழுக்காட்டினர் கிராமங்களில் வாழ்ந்து வந்தனர். எனவே,கிராமப்புற மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித காமராஜர், கிராம்ப்புறங்களில் மின்மயமாக்கலைத் தீவரமாக அமுல்படுத்தினார். இதன் காரணமாக, 1957-58-ஆம் ஆண்டுகளில், தமிழ்நாட்டின் மொத்த மின் தொடர்புகளில் 25 விழுக்காட்டிற்கு மேல்கிராமப்புற மின் தொடர்புகளாகவும் மின்சாரப் பயன்பாட்டில், ஏறக்குறைய 20விழுக்காடு கிராம்ப்புற பயன்பாட்டிற்கும் அளிக்கப்பட்டது.

கிராமப்புறங்களில் நுகரப்பட்ட மின்சாரத்தில் 70 விழுக்காடு மின்சாரமானது விவசாய மோட்டார் பம்ப்செட்டுகளை இயக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. 1963-ஆம் ஆண்டில் மொத்தமாக 1,0,000 விவசாய ப்ம்ப் செட்டுகள் தமிழ்நாட்டில் மின்சாரத்தைக் கொண்டு இயக்கப்பட்டு, விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டது. விவசாய பம்ப் செட்டுகளின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென்பதற்காகவே, விவசாயத்திற்கு மின்சாரம் சலுகை கட்டணத்தில் அளிக்கப்பட்டது. விவசாய மின் நுகர்வோர்களைப் பொறுத்தவரை, அத்தியாவசிய நுகர்வோர்களாகக் கருதப்பட்டது.

விவசாயம் மட்டுமல்லாது, கிராமப்புறங்களிலே இருந்த நெசவாளர், சிறுதொழில்புரிவோர்கள் போன்றவர்களுக்கு மின் நுகர்வதில் சலுகைகள் அளிக்கப்பட்டது. இப்படி, கிராம்ப்புற மக்களின் அடிப்படையை உண்ர்ந்து, விரைந்து நடவடிக்கைகள் மேற்கொண்ட ஒரே அரசு காமராஜர் அரசுதான்.

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், கிராம்ப்புற மின்மயமாக்குதல் மிகப்பெரிய சாதனையை தமிழ்நாடு செய்திருந்தது. 1963-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் மின்மயமாக்கப்பட்ட 5000 மக்கள் தொகை கொண்ட கிராமங்கள், நகரங்களின் மொத்த எண்ணிக்கை 32,500 தமிழகத்தில் மட்டும் 5000 மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 657 நகரங்களிலும் 6777 கிராமங்களிலும் மின்மயமாக்கப்பட்டிருந்தது. மற்ற மாநிலங்களின் 1963 மார்ச் எண்ணிக்கை பின்வருமாறு.

மாநிலங்கள் நகரங்கள் கிராமங்கள்
ஆந்திரப்பிரதேசம் 392 2712
அஸ்ஸாம் 20 72
பீகார் 186 2244
குஜராத் 182 954
கேரளா 467 1316
மத்தியப் பிரதேசம் 129 477
சென்னை 657 6777
மகாராஷ்டிரா 259 1352
மைசூர்(கர்நாடகம்) 192 2889
ஒரிசா 38 177
பஞ்சாப் 199 4225
ராஜஸ்தான் 113 145
உத்திரப்பிரதேசம் 300 4388
மேற்கு வங்காளம் 124 382

மின்மயமாக்குதலுக்கு அளிக்கப்பட்ட நிதியிலிருந்து இத்தகைய சாதனையை செய்வது என்பது நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்றாக இருந்தது. ஏனெனில், எல்லா மாநிலங்களிலும் ஒரு கிராம மின்மயமாக்ககுதலுக்கென திட்டமிட்டு செய்யப்பட்ட செலவுத் தொகை ரூ. 80,000. தமிழ்நாட்டிற்கும் அதே அளவு தொகை தான் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது . இந்த அளவு செலவுத் தொகையைக்கொண்டு உறுதியா மிகப்பெரிய எண்ணிக்கையல் கிராமப்புற மின்மயமாக்குதலை மேற்கொள்ள இயலாது என்பதை உணர்ந்த காமராஜர் அரசு, கிராமப்புற மின்மயமாக்குதலை விரைந்து, குறைந்த செலவில் மேற்கொள்ள எளிய திட்டத்தை ஏற்படுத்தியது. அதன்படி, மின்மயமாக்குதலுக்கு உள்ளூர் பொருட்களே பெரும்பாலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. அது மட்டுமின்றி தமிழக மின்சார வாரியமே, சொந்த பணிமனைகளை மாநிலத்தின் பல இடங்களில் பரவலாக ஏற்படுத்தி பொருட்களை வடிவமைத்துக்கொண்டது.

இதன் காரணமாக, கிராம மின்மயமாக்குதல் செலவுத் தொகை வெகுவாக குறைக்கப்பட்து, பல மடங்கு அதிகமான கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டன. தமிழகத்தின் இந்த முயற்சிகளை அறிந்த மத்திய அரசின் திட்டக்குழு ஓர் ஆய்வுக் குழுவை நியமித்து முழுமையான ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அதே முறையை பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஆணையிட்டது.

தொழில் வளர்ச்சி

விவசாயம் தமிழகத்தின் உயிர்நாடி என்ற நிலைதான் காமராஜர் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது இருந்த நிலை. தொழில்துறை என்பது இல்லவே இல்லை எனலாம்என்ற நிலையும் இருந்தது. முதலமைச்சாரக காமராஜர் பொறுப்பேற்ற 1954-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தொழிற் சாலைகளின் எண்ணிக்கை 1339. தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வராத தொழிற்சாலைகளைப் பொறுத்த வரை அவையெல்லாம் மிகச்சிறிய அளவிலான தொழிற்சாலைகள். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், கட்டாந்தரையில் பயிர் செய்வதற்கு இணையான நிலையில்தான் தொழில்வளர்ச்சி தமிழகத்தில் இருந்தது. கட்டாந்தலையை உரிய முறையில் பண்படுத்தி பயிர் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை முதலில் மேற்கொண்டால், கட்டாந்ரையாக இருந்த இடத்திலும் பயிர் செய்யலாம். அதைப்பபோல, தொழில் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படைகளை உருவாக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிட காமராஜர் அரசு முனைந்தது.

ஒரு மாநிலத்தின் தொழில்வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவையானது, இயற்கை ஆதாரங்கள், இடுபொருட்கள், மின்சாரம், நீர் போக்குவரத்து வசதிகள் மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள், ஊழியர்கள், தமிழகத்தைப் பொறுத்தவரை பெருமளவில் கனிமங்களும் இல்லை. காடு வளமும் இல்லை. நீர் ஆதாரங்கள் கூட குறைவான நிலையில், பிற மாநிலங்களி கையேந்தக்கூடிய நிலை இருந்தது.

இரும்பு, நிலக்கரி போன்றவைகளை பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வருவதற்கான சாலை வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே, முதலமைச்சராக பொறுப்பேற்ற காமராஜர் தொழிற் வள்ர்ச்சிக்கு இசைந்த சூழ்நிலையை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தினார். பரந்த அளவில் மின்மயமாக்குதல், சாலை வசதிகளைப் பெருக்குதல், திறமை வாய்ந்த ஊழியர்களை உருவாக்குதல், ஆடசயில்நிறையான தன்மை, திறமையான மாநில நிர்வாகம், உள்ளூர் இடு பொருட்களைக்கொண்டு செயல்படும் தொழிற்சாலைகளுக்கு ஊக்கமளித்தல, இப்படி தொழில் வளர்ச்சிக்கு தேவையான உகந்த சூழ்நிலையை காமராசர் ஆட்சி ஏற்படுத்தியது. அதன்முதல் கட்டமாக சிறுதொழில் வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்தல, பெருந்தொழில் வளர்ச்சிக்கு உரிய ஆதார கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவை முதலில் மேற்கொள்ளப்பட்டன.

சிறுதொழில்

சிறுதொழில் ஈடுபடுவோர் கொண்டிருக்கும் திறமையைப் பயன்படுத்துவதற்குரிய வசதிகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்திதந்தல், அவர்கள் சிறப்பாக வளர்ச்சி பெற முடியும் என்று நோக்கடன், பல்வேறு சிறப்பு செயல்முறைகளை காமராஜர் அரசு மேற்கொண்டது. சிறுதொழில் புரிவோருக்கு கையாள்வதற்குரிய தொழில் நுணுக்க ஆலோசனைகள், மூலப்பொருட்களை வழங்குதல், மின்சக்தியை குறைந்த விலையில் அளித்தல், பொது வசதி பட்டறைகளைப் பல இடங்களிலும் அமைத்து செப்பனிடுவதற்குரிய வசிதகளை ஏற்படுத்தித்தருதல், போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தொழில் பகுதிகள்

தொழில் வளர்ச்சிக்கென உருவாக்கப்பட்ட திட்டங்களில் மிக முக்கியமானது தொழிற்பேட்டைகளை நிறுவியதாகும். அந்த வகையில் மாநிலம் முழுவதும் கிண்டி, மதுரை, விருது நகர், மார்த்தாண்டம், ஈரோடு, காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 19 தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டன. இது தவிர, அம்பத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, கோவில்பட்டி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், தேனி, நாகர்கோயில், கும்பகோணம் மற்றும் சிவகங்கை ஆகய இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் துவங்க காமராஜர் அரசு முயற்சி மேற்கொண்டது. மேலும் செராமிக் தொழிற்சாலைகளுக்கென்றே விருத்தாசலத்தில் தோல் தொழிற்சாலையும், சென்னையில் உள்ள மாதவரத்தில் தொழிற்பேட்டைகளம் துவங்க காமராஜர் அரசு திட்டமிட்டது. இதுதவிர தனியாரும், கூட்டுறவு அமைப்புகளும் தொழிற்பேட்டைகள் ஏற்படுத்திக்கொள்ள ஆக்கமும் ஊக்கும் அளிக்கப்பட்டது. மாநிலத்தில் தகுந்த இடங்களில் பெருவாரியான நிலம் கையகப்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்டன. இத்தகைய மனைகள் தொழிற்சாலைக் கட்டிடங்கள் கட்டவும் புதிய தொழிற்சாலைகள் தொடங்கவும் நிபந்தனையின் பேரில் ஒதுக்கப்பட்டன.

மத்திய அரசின் பெரும் தொழில்கள்

மத்திய அரசினுடைய தொழில் நிதிக் கழகம் மற்றும் தொழில் முதலீட்டுக்கழகம் ஆகியவற்றிலிருந்து பெருமளவில் தொழில் துவங்குவதற்கு நிதி பெறப்பட்டது. பெற்றிருந்தது அதைப்போலவே மாநில அரசு சார்பில் தொழில் முதலீட்டுக்கழகம் துவங்கப்பட்டது.

புள்ளியை வைத்து வட்டம், அதைப்போல பெரிய தொழிற்சாலைக் உருவாக்கம். அது பல சிறிய தொழிற்சாலைகள் பெருக்கத்திற்கு வழிவகை செய்யலாம் என்பதை அறிந்து, மத்திய அரிசின் பல பொதுத்துறை நிறுவனங்களை தமிழகத்திற்கு கொண்டு வர பல முயற்சிகளை காமராஜர் ஆட்சி மேற்கண்டது. அதன் காரணமாக சென்னை கிண்டியில் அறுவை சிகிச்சை கருவிகள் தொழிற்சாலை, நீலகிரியில் கச்சா பிலிம் தொழிற்சாலை, சென்னை கிண்டியில் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, துப்பாக்கி தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரிச்சுரங்கள், சேலம் இரும்பு உருக்ககாலை, சென்னையில் உள்ள ஆவடியில் ராணுவதளவாடங்கள் தொழிற்சாலை, பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை, அரக்கோணத்தில் இலகுரக ஸ்டீல்பிளாண்ட் தொழிற்சாலை ஏற்படுத்தப்பட்டன.

விவசாயம் சார்ந்த தொழில்கள்

விவாசாயம் சார்ந்த தொழில்களில் சர்க்கரை ஆலை முன்னுரிமை பெற்றது. 1953-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்த புகலூர், நெல்லிக்குப்பம் பாண்டியராஜபுரம் ஆகிய மூன்று சர்க்கரை லைகள் இயங்கி வந்தது. மொத்தமாக ஒரு நாளைக்கு 3,500 டனகள் மட்டுமே இருந்தது. காமராஜர் ரசின் முயற்சிகளின் காரணமாக புதிய கூட்டுறவு சர்க்கரை லைகள் துவங்கப்பட்டது. தனியார்துறைகள் வேகப்படுத்தப்பட்டது. ஆமராஜர் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது மூன்றாக இருந்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை 1962-ல் எட்டாக உயர்ந்தது. அதுமட்டுமின்றி 1963-ஆம் ஆண்டில் மேலும் எட்டு சர்க்கரை ஆலைகள் தமிழ்நாட்டி துவக்கப்பட்டது. 1963-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தமாக 14 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வந்தது. கரும்பு சார்ந்த பல புதிய தொழில்களும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டன. திருச்சியில் 20 இலட்சம் சக்தி கொண்ட எரிசாராய உற்பத்தி தொழிற்சாலை துவக்கப்பட்டது.

பிற தொழில்கள்

தமிழ்நாட்டில் 159 நூற்பாலைகள், 30 இலட்சம் நூற்புகதிர்கள், 8,000 துணி நூற்பு பாவுகள், 4 இரும்ப தொழிற்சாலைகளும், 4 மிதிவண்டி தொழிற்சாலைகளும், 6 உரத்தொழிற்சாலைகளும் 2 சோடா உப்பு தொழிற்சாலைகளும், 21 தோல் பதனிடும் தொழிற்சாலைகளும், 5,16,086 கைத்தறி அகங்களும் இது தவிர, அதிக எண்ணிக்கையில் தீப்பெட்டி தொழிற்சாலைகளும் காமராஜர் ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்டன. சென்னைக்கு அருகில் வண்டலூரில் ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் நிறுவனம் சார்பாக ஆண்டுக்க 3,000 கார்கள், 1500 டிரக்குகள் தொழிற்சாலை, டீசர் எஞ்சின்கள் மற்றும் வாகனங்கள் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்காக சிம்சன், இந்தியா பிஸ்டன்ஸ், டி.வி.எஸ். மற்றும் பணியன் கம்பெனி ஆகிய தொழிற்சாலைகளும் குறிப்பிட வேண்டியவை.

சிற்றூர்களிலும் துவக்கப்பள்ளிகள்

கல்வி வளர்ச்சி மட்டுமே மனிதனை உணர்த்துவதோடு நாட்டையும் மேம்படுத்தும் என்பதை நன்கறிந்தவர் காமராஜர். 14 வயதிற்குட்பட்ட அனைவருகும் இலவச கட்டாயக் கல்வி அளித்திட வேண்டுமென்று அரசியல் சாசனமும் கூறுகிறது.

இந்த நிலையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட காமராஜர், 300 -ம் அற்குமேற்பட்ட மக்கள்தொகை கொண்ட எல்லா சிற்றூர்களிலும் துவக்கப்பள்ளிகள் துவங்க ஆணையிட்டு செயல்படுத்தினார். இந்த வகையில் நமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற துவக்கப்பள்ளிகள் துவங்கப்பட்டு, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் 300ம் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட சிற்றூர்களில் கூட பள்ளிகள் உள்ளது என்று நிலையை காமராஜர் உருவாக்கினார்.

இவ்வளவு பள்ளிகள் துவங்கப்பட்ட போதிலும், கல்இ கற்க வருகை தருவர் எண்ணிக்கை என்பதோ எதிர்பார்த்த அளவு இல்லை. வறுமை காரணமாக மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை எனபது குறைவாக இருந்த பெற்றோர்களின் வறுமையும், குழந்தைகளின் பள்ளிச்சேர்க்கைக்கு மிகப்பெரிய தடையாக இருந்தது. தங்களின் வயல்வெளி வேலைகளில் தங்கள் குழந்தைகளைப் பயன்படுத்தி, ஆடு, மாடுமேய்க்க வைத்து குடும்ப வருமானக குறை பெற்றோர்கள் சரிக்கட்டி வந்தனர். அதையும மீறி எந்தவொரு குழந்தையாவது பள்ளிக்கு வந்தால் மதிய உணவின்றி பட்டினியாய் இருந்திட வேண்டிய நிலை நிலவியது. கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை என ஔவையார் குறிப்பிட்டது போல பசிக் கொடுமையால் வறுமையில் துன்புறும் குழந்தைகளிடம் வேறு சிந்தனையும் எதிர்பார்க்கமுடியாது. கல்வியும் ஏறாது. இதனால், பள்ளிபடிப்பைப் பாதியிலே கைவிடுவதுதான் பெருமளவு இருந்தது.

இவற்றையெல்லாம் எண்ணிப்பார்தத முதலமைச்சர் காமராஜர் இளமையில் வறுமையும் களையப்பட வேண்டும் குழந்தைகளுக்கு கல்வியில் ஈடுபாடும் ஏற்பட வேண்டுமென சிந்தித்தார்.

மதிய உணவுத் திட்டத்திற்கு முன்னோடி

அந்தக் காலத்தில் நடைபெற்று வந்த அரிசன நலத்துவக்கப் பள்ளிகளிலும், சென்னை மாநகராட்சியின் பளிக் கூடங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படது. ஆனால் மதிய உணவு வழங்குவதால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகுமா? ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கூடங்களிலிருந்து நின்று விடும் நிலை போகுமா? என்ற கேள்வியும் அவர் மனதில் தோன்றியது. அப்போதைய பொதுக்கல்வி இயக்குநரான நெ.து. சுந்தரவடிவேலு அதற்கு முன்னர் சென்னை மாநகராட்சிக் கல்வி அதிகாரியாக இருந்தவர். எனவே, மாநகராட்சிப் பள்ளிகளில் பகல் உணவு போடுவதால்தான் மாணவர்கள் அதிகமாக வருகிறாகளா? என நெ.து. சுந்தரவடிவேலுவிடம காமராஜர் கேட்க, அவரும் அதை உறுதிப்படுத்திவிட்டு, சனிக்கிழமை பாதிநாள் பளிக்கூடம் இருப்பதால் மதிய உணவு அளிப்பதில்லை என்பதால் சனிக்கிழமைகளில் வருகை குறைகிறது என்று கூறினார்.

மதிய உணவுத்திட்டத்திற்கு காமராஜரின் விளக்கம்

மதிய உணவு அளிப்பதால், பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்தது என்பதை உறுதி செய்தவுடன், ஏழைக் கழுந்தைகள் கல்விக்கு அதுதவே வழி செய்திடுமென்பதை காமராஜர் பின்வருமாறு கூறினார்.

“அத்தனைபேரும் படிக்கணும். வயிற்றிலே ஈரமில்லாதவன் எப்படி படிப்பான்? அவனும்தானே நம் இந்தியவிற்குச் சொந்தக்காரன். ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்திலேயே சோறு போட்டு படிக்க வைக்கணும். இதைத் தள்ளிப்போட முடியுமா என்ன? இது மிக முக்கியம் என்பதால் உடனடியாகத் தொடங்கிவிடணும். பணத்திற்கு எங்கே போவது? இப்படிக் கேட்பீர்கள். வழி இருக்குது, தேவைப்பட்டால், பகல் உணவிற்கென்று, தனியாக வரி போடத் தயங்க மாட்டேன். எப்படியும் எல்லா ஏழைகளும் படிக்கணும். அவர்களுக்குத்தான் தேசம்”.

அதிகாரிகளின் எதிர்ப்பும், காமராஜரின் உறுதியும்

காமராஜர் கொண்டிருந்த உணர்வு பூர்வமான சிந்தனைக்கு இதைவிட ஆணித்தரமான பேச்சு இருந்திட முடியாது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் மதிய உணவுத திட்டத்தை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி மறைத்த கதையாக, முதலமைச்சர் ஆணித்தரமாக அறிவித்தாலும், நிதிப்பற்றாக்குறை என்று முதலில் மதிய உணவு திட்டத்திற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அடுத்ததாக, அரிசனப் பள்ளிகளில் செயல்படும் மதிய உணவுத் திட்டத்தை ஒப்பந்தக்காரர்களிடம் விடுவதால், அவர்கள் முறைகேடாக கொள்ளை இலாபம் பெறவும், ஆசிரியர்கள் சாப்பாட்டை எடுத்துப் கோகவும்தான் பயன்படுகிறதே தவிர, மாணவர்களக்கு இதனால்நன்மை இல்லை என்றும் எடுத்துரைத்து மதிய உணவுத் திட்டத்தையே எதிர்த்தார்கள். பொறுமையாக எல்லாவற்றையும் கேட்ட காமராசர் இத்திட்டத்தை ஒப்பந்நக்கார்கள் மூலம் நடத்தக் கூடாது என்பதை இப்போதே குறித்துக்கொள்ளுங்கள். பொதுமக்கள் குழவே பகஙல் உணவுத் திட்டத்தை நடத்த வேண்டும் என்றும், ஆசிரியர்களும் பள்ளிக்கூடத்திலேயே குழந்தைகளோடு உட்கார்ந்து சாப்பிடலாம் என்றும் பாணையிட்டு, இந்த முடிவையும எழுதிக்கொள்ளுங்கள், என்று உறுதியாக கூறினார் காமாரஜர். தன் காரணமாக இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டப் பரிந்துறையில் மதிய உணவும இணைக்கப்பட்டது.

தன்னார்வத் திட்டமாக மாற்றம்

இருப்பினும் அரசின் நிதி என்ற நிலையிலேதான் இத்தனைத் தடைக்கற்கள் இருக்கிறது என்பதை உணர்ந்த காமராஜர், இதையே அந்தந்தப் பகுதி மக்களின் நிதியைக் கொண்டு நடைபறும் தன்னார்வத் திட்டமாக செயல்படுத்துவதுதான் மதிய உணவுத் திட்டத்தின் உடனடி அமுலாக்கத்திற்கு வழிவகையாக அமைந்திடும் என்ற காமராஜர் முடிவு செய்தார்.

அதன் பயனாய், 1956 ஜூலை மாதம் மாநிலப் பொதுக்கல்வி இயக்குநரத்தின் மேற்பார்வையில் முழுக்க முழுக்க பொதுமக்களின் அன்பளிப்பில் தன்னாவத்திட்டமாகத் துவக்கப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களக்கு மதிய உணவு அளித்திடும திட்டம் டைமுறைப்படுத்தப் பட்டது. அன்னதானம் அளிப்பதை கொள்கையாகக் கொண்ட தமிழக மக்கள் அதிக ஆர்வமுடன், இலவச மதிய உணவுத் திட்டத்தில் போட்டி போட்டுக் கொண்டு பங்கேற்றனர் . ஆயிரம் கோயில் கட்டுவதை விட ஒரு ஏழைக்குக் கல்வி அளிப்பது சிறந்தது என்ற பாரதியார் பாடலுக்கு ஒப்ப, தன்னார்வத் திட்டமானது தமிழ் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

தமிழக அரசின் நிதி உதவி

முழுக்க முழுக்க தன்னார்வத் திட்டமாகத் துவங்கப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை, ஓராண்டு காலம் நடைமுறையில் சீர்தூக்கி ஆராய்ந்த பின்னர், 1957 – ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தமிழக அரசின் நிதி உதவியுடன் செயல்படக்கூடிய, அதே சமயம், சமுதாயப் பங்கேற்புடனும் கூடிய இலவச மதிய உணவுத் திட்டமாக மாநிலம் முழுவதும உள்ள எல்லாப் பள்ளிகளுக்கும் நடைமுறைப்படுத்தி அறிவிப்பு வெளியிடப் பட்டது. இதன்படி, இத்திட்டத்திற்கு தேவையான சமையல் பாத்திரங்கள் போன்ற நிலையான பொருட்களை உள்ளூர் மக்களே அளித்திட வேண்டும். இலவச உணவு அளித்திடத் தேவையான செலவினங்களில் 60 விழுக்காட்டை அரசும், 40 விழுக்காட்டை உள்ளூர் சமுதயாமும் என்ற அளவில் பங்கேற்பு இருந்திடும். ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென உள்ள குழுக்களிடம் காலாண்டுக்கான தனது பங்கினை அரசு முன்னரே அளித்திடும்.

இலவச மதிய உணவுக் குழுக்களுக்கு அனுமதி அளிப்பதற்கு எளிய நடைமுறைகள், அரசின் நிதியுதவி ஆகியவை உள்ளரூ மக்களின் மேற்பார்வையில் நடைமுறைப்படுத்தப்பட்டதால், மிக விரைவாக எல்லாப் பள்ளிகளிலும் செயல்படுத்தக்கூடிய திட்டமாக இத்திட்டம் உருப்பெற்றது.

மதிய உணவுத்திட்டத்தின் மகத்தான வெற்றி

இத்திட்டத்தின் வெற்றயை கீழ்க்கண்ட பட்டியல் தெளிவாக விளக்கும்.

வறுமையில் கோரப்பிடியில்சிக்கி, பள்ளிக்கு வருவதை தர இயலாமல் போன இலட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிகளில் சேர்ந்து படித்திடவும், பள்ளியில் சேர்ந்த குழந்தைகள் படிப்பை பாதியல் கைவிடுவதைத் தடுத்திடவம்,பசிக்கொடுமை காரணமாக பாடத்தில் கவனம் செலுத்தாத நிறை மாறி, பாடத்தில் கவனம் செலுத்தக்கூடிய வகையிலும், மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

“செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்”

என்றார் திருவள்ளுவர். செவிக்கு உணவாகிய அறிவை – கல்வியை-முதன்மைப்படுத்தி வயிற்றுக்குரிய உணவை அறபமானதாக அவர் கருதினார். ஆனால் தாழ்வுற்று வறுமை மிஞ்சி வாட்டமுற்ற மக்கள் வயிற்றுக்கு உணவு பெற்று உடல் நலம் படைத்தால்தான் சிறப்பாகப் படிக்கமுடியும் எனப்பாரதியார் கருதினார். எனவே “வயிற்க்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் பமனிதர்க்கெல்லாம் பயிற்றிப் பலகலை தந்து பின்பு பாரில் உயர்ந்திட வேண்டும்” என்று பாரதியார் பாடினார். பாரதி காட்டிய வழியில் காமராசர் வகுத்த பாதையே மதிய உணவுத்திட்டம் எனில் மிகையன்று.