சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியின் நூற்றாண்டு விழா. முதலமைச்சர் காமராசர் விழாவில் பங்கு கொண்டார். அவருடைய வருகையை ஆவலோடு எதிர்பார்த்து நின்றோம். யார்? கல்லூரி முதல்வர் எம்.ஆ.பெருமாளும் நானும்.

உரிய நேரத்தில், முதல் அமைச்சர் வந்தார். காரில் இருந்து இறங்குப் வேளை, இருவரும் கை கூப்பி வணங்கினோம்.

காமராசரும் கை கூப்பினார். இமைப்பொழுதில் என் பக்கம் திரும்பினார்.

“நீங்கள் சொன்னது பலித்துவிட்டது” என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்தார்.

திருதிருவென விழித்தேன். என் நிலையைச் சட்டென்று புரிந்துகொண்டார்.

“இன்று காலை, ‘தினத்தந்தி’ படிக்கவில்லையா? என்று கேட்டபடியே நடந்தார்.

‘இல்லீங்க’ என்று சொல்லி உடன் சென்றேன்.

“களத்துமேட்டு அளவையின்போதே, பகல் உணவுத்திட்டத்திற்கு மூன்றாம் அளவையைக் கொடுக்கச் சொல்லித் தூத்துக்குடியில் பேசினீர்களாம். அப்படியே செய்வதென்று நாகலாபுரத்து ஊர்க்கார்ர்கள் புனிவு செய்துவிட்டார்களாம்” என்உற சொலிக்கொண்டே நடந்தார்.

“அப்படிங்களா? நல்ல முடிவு” என்றேன்.

“அந்த ஊரை உங்களுக்குத் தெரியுமா?” காமராசர் கேள்வி.

“நகரி நாகலாபுரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை” என்றேன்.

“நான் சொல்லுகிற நாகலாபுரம் கோயில்பட்டி தாலுகாவில் இருக்கிறது. அந்த ஊர்க்கார்ர்கள் சொன்னதைச்சொன்னபடி முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள்.

“நல்ல அதிகாரிகள் கூட ‘பைல்’ பார்ப்பதில் திறமைசாலிகளாய் இருக்கிறார்களே ஒழிய, பொதுமக்களிடம் போய் நல்லதைச்சொல்ல தயங்குகிறார்கள்.

“அங்கே சொன்னதுபோல், பல ஊர்களுக்கும் போய்ச் சொன்னால், நிச்சயம் கேட்பார்கள். கேட்காத ஊர் இருந்தால், என் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்.”

இப்படிச் சொல்லும் நேரம், விழா மேடைக்கு வந்துவிட்டோம், மேடையில் அமர்ந்ததும்,

“தாங்கள் சொல்லிபடியே முயல்கிறேன்” என்று வாக்குறுதித செய்தேன்.

“அப்படியே செய்யுங்கள்” என்று கூறியபோது காமராசரின் முகம் மலர்ந்தது.

மதிய உணவுத் தொடக்கம்

மூன்று திங்கள் உருண்டன. ஒருநாள் காலை, ஏழு மணி, முதல் அமைச்சர் காமராசரே தொலைபேசியில் என்னோடு பேசினார்.

“காமராஜ் பேசுகிறேன். சும்மா இருந்தால், காலை ஒன்பது மணிக்குள், என்னை வீட்டில் வந்து பாருங்கள். அது முடியவில்லை என்றால், பதினொரு மணிக்கு மேல் அலுவலகத்தில் பாருங்கள்” இது காமராசர் ஆணை.

“தங்களுக்கு இடையூறாய் இல்லையென்றால் எட்டு மணிக்கு வீட்டில் வந்து பார்க்கிறேன்” என்றேன்.
அபடியே முதல் அமைச்சரைக் கண்டேன். நான் நாற்காலியில் உட்கார்ந்ததும், “நான் கோயில்பட்டிப் பக்கம் பயணஞ்செய்துவிட்டு வருகிறேன்ந அங்கே பத்துப் பன்னிரண்டு ஊர்களில், போதிய அளவு தானியம் வசூலித்து வைத்திருக்கிறார்கள் நன்றாக நடத்தக் கூடியவரகள். நீங்கள் வந்து பகல் உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைக்கணுமாம். அதற்காகக் காத்திருக்கிறார்கள். உங்களுக்கும் எழுதியிருக்கிறார்களாம். சீக்கிரம் போய்த் தொடங்கி வைத்துவட்டு வாருங்கள். நன்றாகத் தொடர்ந்து நடத்துவார்கள்ம என்று ஆணையிட்டார்.

“அய்யா, மன்னிக்க வேண்டும். இது பெரிய திட்டம், தாங்களே தொடங்கி வைப்பதே சரி; அப்படி வேண்டிக்கொள்ள காத்துக்கொண்டிருந்தேன் அதற்குள் கூப்இட்டு விடீர்கள். தயவுசெய்து, தாங்கள் வந்து, பகல் ஊணவுத் திட்டத்தைத் தொடங்கி வையுங்கள்” என்று வேண்டினேன்.

“நீங்கள் சொல்கிறது தெரியுது. ஆனால், கான்ஸ்தேபிள், அவங்க அதிகாரியிடந்தான் ஆணையை எதிர்பார்க்கணும்; என்னிடமல. நான் ஐ.ஜிக்குத்தான் சொல்ல்லாம்.

“பகல் உணவை நடத்தப்போவது ஆசிரியர்களே. அவர்கள் கல்வித்துறை அதிகாரிக்கே கட்டுப்படணும். அவர்கள் உங்களை எதிர்பார்ப்பதே சரி. இப்ப, நீங்கள் போய்த் தொடங்கிவிடுங்கள். வேறு ஊர்களுக்கு நான் வருகிறேன்”

“அய்யா! குறுக்கிட்டுச் சொல்லுகிறேன் என்று நினைக்காதீர்கள். நீங்கள் தொடங்கினால்தான் திட்டத்திற்கு மதிப்பு வரும். நானும் தங்களோடு வருகிறேன். விரைவில் தொடங்கி வைக்க நாள் குறிப்பிடுங்கள்” என்று வேண்டினேன்.

பல நாள் தள்ளிப் போடாமல், இரு நாள்கள் ஒதுக்கினார். முதல் நளை முதல் நிகழ்ச்சியாக, எட்டயபுரம் பரசரின் தொடக்கப்பள்ளயில், முதல் அமைச்சர் காமராசர்பகல் உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைக்க ஏற்பாடு செய்தோம். பின்னர், அய்ந்தாறு ஊர்களில் காமராசரே தொடங்கி வைக்க ஏற்பாடு.

குறிப்பிட்ட நாளைக்குநான்கு நாள் முன்னதாக முதல் அமைச்சர் மீண்டும் என்னை அழைத்தார்.

“எட்டையபுரம் ராஜாவுக்கு நம்ம தேதி சரியாக வரவில்லை. முன்னாளே வைத்துக்கொள்ளச் சொல்லுகிறார். அன்றைக்கு நான் வரமுடியாது. வேறு நிகழ்ச்சிகள் உள்ளன.

“பகல் உணவு நடத்தனும் என்று கட்டாயம் பண்ண முடியுமா என்ன? ராஜா நடத்த விரும்பினால், அவர் சௌகரியத்தையும் கவனித்துக் க ஒள்வதே முறை. நீங்கள் போய்த் தொடங்கி விடுங்கள். மற்ற ஊர்களில முன்னரே திட்டமிட்டபடி, நானே வந்து தொடங்கி வைக்கிறேன்” என்றார்.

சோகம் கவ்வியது என்னை.

“மனத்தல் குறை வேண்டா. அடுத்த இரண்டு நாள்கள், நானே உங்களோடு பல ஊர்களுக்கு வந்து இதைத் தொடங்கப்போகிறேனே. நான் சொன்னபடி செய்யுங்கள்” என்று ஆணையிட்டார். செங்கோலுக்கு முன்னே சங்கீதமா?

முதல் அமைச்சர் காமராசர் ஆணைப்படி எட்டயபுரம் மன்னர் தொடக்கப்பள்ளியில், முல் ப கல் உணவு மையத்தைத் தொடங்கி வைக்கும் நற்பேற்றினை ஏற்றுக் கொண்டேன். அவர் நினைத்தப்படி நடந்தது.

அடுத்த ந்நாள் வைப்பாற்றுப்பாலத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. முதல் அமைச்சர்காமராசர் அடிக்கல் நாட்டினார். கூட்டம் பெரியது. தடபுடலான ஏற்பாடுகள். வேட்டி ஜிப்பாவோடு சென்றிருந்த என்னைக் கண்டு அதிகாரிகள் திகைத்தார்கள்.

முதலமைச்சர் காமராசர், தமது பேச்சில் எதற்கு முதல் இடம் கொடுத்தார். பாலத்திற்கா? இல்லை. பகல் உணவுத் திட்டத்திற்கு.

“எதற்காகச் சுதந்திரம் வாங்கினோம்? எல்லோரும் வாழ. எப்படி வாழணும்? ஆடுமாடுகள்மாதிரி, உயிரோடு இருந்தால் போதுமா? மனிதர்களாக வாழணும். அதறகுப் படிப்பு வேணும். பட்டினியாக இருந்தால் படிப்பு வருமா? வராது. ஏழைகளுக்கெல்லாம், பள்ளிக்கூடங்களிலேயே சாப்பாடு போடணும். அப்பதான் படிப்பு ஏறும். இதுவே முதல் வேலை; முக்கிய மான வேலையுங்கூட.

“இதை நான் ரொம்ப முக்கியமாக் கருதுகறேன். அதனால், மற்ற வேலைகளையெல்லாம் ஒதுக்கி விட்ட, இதே வைலயாக, ஊர் ஊராகப் பிச்சையெடுக்க வருவதற்கத் தயாராக இருக்கிறேன்.” செயல் வீர்ர் காமராசரின் இந்த அருளுரையைப் பாராட்டிய கை தட்டல் ஓயப் பல மணித்துளிகள் ஆயின.

பின்னர், அன்று மூன்று நான்கு பள்ளிகளில் பகல் உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதற்கு ஆதரவு தரும்படி பொதுமக்களை வேண்டினார்.

அடுத்த நாள் காலை, செய்தித்தாள்களைப் பிரித்தோம். “மற்ற வேலைகளையெல்லாம் தூக்கிவிட்டு, ஏழைகளுக்கெல்லாம் பள்ளிக்கூடங்களிலே சாப்பாடு போடுவதற்காக, ஊர் ஊராகப் பிச்சையெடுக்கத் தயாராய் இருக்கிறேன்” என்று பேசிய அருளுரையைத் செய்தித்தாள்கள், காமராசர் இராஜினாமா செய்யப் போவதாகத் தலைப்புச் செய்தியாகத் திருத்தி வெளியிட்டன. காங்கிரசாருக்குக் கோபம் பொங்கிற்று.

அன்றைய நிகழ்ச்சிகளுக்குப் புறப்படும் நேரம் நிருபர்கள் வந்து சேர்ந்தார்கள். காமராசர் சிரித்தப்படியே,

“ஏன்? நான் முதலமைச்சராக இருப்பதில் உங்களுக்கென்ன கஷ்டம்? விட்டுவிட்டுப் போய்விட வேண்டுமென்பதில் ஏன் இவ்வளவு ஆசை?” என்று நிருபர்களைக் கேட்டுக்கொண்டே காரில் ஏறினார்.

“நிருபர்களையெல்லாம் பார்த்து, விட்டுவிடாமல் ஏற்றிக்கொண்டு வாருங்கள்” என்று எங்களிடம் பணித்தபோது, நிருபர்களின் முகங்களைப்பார்த்திருக்க வேண்டும்!

மாநில அரசின் ஆணை வருவதற்கு முன்றே, மக்கள் இயக்கமாய் வளரத் தொடங்கியது. பகல் உணவுத் திட்டம். காமராசர் மேல் உயிரை வைத்திருந்த எண்ணற்ற ஊர்களில் விரைந்து ஏற்பாடுகள் செய்தனர் முதல் அமைச்சரே அடுத்தடுத்துப் பல இடங்களுக்கு வந்து தொடங்கி வைத்து ஆதரித்தார். கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியமும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஊக்குவித்தார்.

அரசின் நிதி உதவியைப் பெறாமல், முழுக்க முழுக்க மக்கள் இயக்கமாய்ப் படர்ந்த, பகல் உணவுத் திட்டம் 4400 தொடக்கப் பிள்ளைகள் பயன் அடைந்தார்கள்; நாள்தோறும் பகல் உணவு பெற்றார்கள்.

பள்ளிக்கூடப் பகல் உணவுத் திட்டத்திற்கு எப்படிப் பொருள் சேர்ந்தது? பல சிற்றூர்களில் பணக்காரர்கள் நிறையக் கொடுத்தார்கள். ஆனால், அவர்களோ சிலர். பலரோ நடுத்தர வர்க்கத்தினர் அல்லது ஏழைகள். அவர்கள் பங்கு பெரியது மாதச் சம்பளம் பெற்றவர்கள், மாத நன்கொடை தந்தனர். குடியானவர்கள், களத்துமேட்டில், ஒப்படியின்போது அன்னதானத்திற்கு உதவினார்கள். எத்தனையோ ஆயிரக்கணக்கான ஊர்களில், நாள்தோறும் பிடிரிசி ஒதுக்கினார்கள். வாரந்தோறும் பள்ளிக்கு அனுப்பிவைத்து உதவினார்கள். குடும்பப் பெண்களே முறை போட்டுக்கொண்டு, சமைத்துதக் கொடுத்துத உதவினார்கள். ஆசிரியர்கள் உதவியை எப்படிப் பாராட்டுவோம். அவர்களே உயிர்நாடி. அவர்களே சேர்க்கும் கரங்கள், நடத்தும் கரங்கள், பதில்சொல்லும் தொண்டர்கள். வணங்குவோம் அவர்களை.

அந்நிலையில் ஆணையும் பிறந்தது. நிதி உதவியும் வந்தது. வளரச்சி மிகுந்தது. காமராசர் முதல் அமைச்சர் பதவியை உதறிவிட்டுப் போவதற்குள், முப்பதாயிரம் தொடக்கப் பள்ளிகளில் பதினாறு இலட்சம் மாணவ மாணவியர் உண்டனர். இதற்கு முன்னே யாரும் இவ்வளவு பெருமளவில் சாதிகவில்லை. ஏழை பங்காளர் காமராசர் அவர்களே, செயற்கரிய செய்த பெரியார் ஆனார். இதைப்பற்றியும் காமராசர் விளம்பரப்படுத்திக் கொண்டு புகழ் தேடிக்கொள்ளவில்லை. பெரியதொரு சமுதாப்புரட்சி இயக்கத்தை முடிக்கிவிட்ட போதிலும். அனைத்திந்தியத் தலைவர்களிடங்கூடப் பறை சாற்றிக் கொள்ளவில்லை.

பகல் உணவுத் திட்டம் வளரும் பருவத்தில், நேரு, ‘காந்தி கிராமத்தின் பத்தாம் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வந்தார். பிரமதரோடு அதே வான ஊர்தியில் வந்த இந்திய கல்வி அமைச்சகச்செயலர் திரு. சயதீன்,இவ்விவரத்தைப் பிரதமருக்குத் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் இறங்கியதும் நேரு, காமராசரை நோக்கி,

“சென்னை மாநிலத்தில் நனக்கும் அற்புத இயக்கத்தைப்பற்றி,எனக்கு கூடச் சொல்லாமல், மூடி வைத்திருக்கிறீகளே” என்றார். அதற்குப் பிறகுதான் அதுபற்றிய விவரக் குறிப்பு பிரதமர் நேருவுக்கு அனுப்பப்பட்டது.

கல்விப் பெருக்கு

காமராசர் முதல் அமைச்சராய் இருந்த காலம், தமிழ்நாட்டுக்கல்விக்குப் பொற்காம். எல்லாச் சிற்றூர்களுக்கும் தொடக்கப்பள்ளிகள் கிடைத்தன. பேரூர்களுக்கு உயர்தொடக்கப்பள்ளிகள் வந்தன. நாட்டுப்புறங்களில் உயர்நிலைப்பள்ளிகள் ஒளி விட்டன.

அதற்குமுன், ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட வளர்ச்சியை, முல் அமைச்சர் காமராசர், எட்டாண்டுகளில் சாதித்துக் காட்டினார். பதினாறு ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும் அவற்றில் பதினாறு இலட்சம் குழந்தைகளும் படித தமிழ் நாட்டிறுக்ப் பொறுப்பேற்றார் காமராசர். தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை முப்பதாயிராமாய் வளர்ந்தது. படிப்போர் எண்ணிக்கையோ நாற்பத்தெட்டு லிட்சமாய் உயர்ந்தது. அதில் பதினாறு இலட்சம் பேர்களுக்குப் பகல் உணவு கிடைத்தது.

அறுநூற்று அய்ம்பது உயர்நிலைப் பள்ளிகளைக் கொண்டிருந்த தமிழ்நாட்டில் இரண்டாயிரத்து இருநுறூக்கு மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள் வளரச்செயத பெருமை, கல்வி வள்ளல் காமராசருடையதாகும். அவர் பதவி ஏற்றபோது 3.86 இலட்சம் மாணவ மாணவியர் உயர்நிலைப்பள்ளிகளில் படித்தார்கள். அந்த எண்ணிக்கையை 13 இலட்சமாக்கி மகிழ்ந்தார்.

வளர்ச்சியில் மட்டுமா தமிழ்நாடு முன்னணியில் நின்றது? இல்லை. பிரதமர், நேருவால் பிற மாநிலங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முற்போக்குத் திட்டங்கள் தமிழ் நாட்டிலேயே தோன்றின. அக் காலக்கட்டத்தில் தோன்றின, வளர்ந்தன.

இலவசக் கல்வியும் இலவச உணவும் சிறுவர்களைக் கவர்ந்த அளவில், சிறுமிகளைப் பள்ளிக்குக கொண்டு வரவில்லை. உடைக்கொடைக்கு ஏற்கபாடு செய்தால், சிறுமிகளைப் பள்ளிகளில் சேர்ப்பது எளிதாகுமென்று தோன்றிற்று. உடைக்கொடை, சீருடைக் கொடையாய் இருந்தால் மேலும் சிறப்பு என்று கருதினோம். அரசின் ஆதரவு கிடைத்தது. பொதுமக்களின் நன்கொடைகளைக்கொண்டு, சீருடை வழங்குவிழா, பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் கடம்பூரில் அத்தகைய விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அது காலை நிகழ்ச்சி. அதில் நானும் குன்றகுடி அடிகளாரும் கலந்து கொண்டோம். அடிகளார், சற்று முன்னதாகவே விழாவிற்கு வந்தார். ஊரை நெருங்கும்போது சாலையின் இரு பக்கங்களிலும் வரிசையாக மாணவ மாணவிகள் செல்வதைக் கண்டார். காரை நிறத்தச் சொன்னார்; கீழே இறங்கினார். குழந்தைகள் வணக்கம் கூறினார்கள்.

அவர்களைப்பார்த்து, “ஏன் எல்லோரும் ஓரே மாதிரி உடையில் போகிறீருகள்?” என்று கேட்டார்.

“சாமி, எங்களைப் பாருங்கள். எவன் பணக்காரப் பையன் எவன் ஏழைப்பிள்ளையென்று அடையாளம் காட்டுங்கள்” என்று ஒரு மாணவன் கேட்டான்.

அடிகளார் அவர்களை உற்றுப் பார்த்தார்.

“வேற்றுமை தெரியவில்லையே!” என்றார்.

“சாமி! இன்னொன்று, எங்களில் பள்ள சாதப் பையன் யார்? பிள்ளைமார் வீட்டுப்பிள்ளை யார்? சுட்டிக்காட்டுங்கள்.” என்று வேண்டினான் மற்றொரு சிறுவன்.

மறபடியும் உற்றுப்பார்த்தார். “யார் எந்தச் சாதி என்று தெரியவில்லை” என்றார், அடிகளார். “எல்லோம் ஒன்றாகணும். அதற்குத்தான் சாமி சீருடை” என்ற பல மாணவர்கள் ஒரே மூச்சாகப் பதில் அளித்தார்கள். விழாவில் இதைக் குறிப்பிட்டு, அடிகளார் சீருடைக் கொடையை ஊக்குவித்தார்கள்.

அதே கடம்பூருக்கு அடுத்த முறை முதல் அமைச்சர் காமராசரோடு போனேன். போய்ச் சேர்ந்தோம். கட்டுக்கடங்காத பெருங்கூட்டம்.

முதல் அமைச்சர் காலிலேயே, நானும் மாட்ட ஆட்சித் தலைவரும் சென்றோம். விழாப்பந்தல் ஒரு திடலில், அங்கே வந்து நின்றதும், முதல் அமைச்சர் முதலில் இறங்கினார். அடுத்து நாங்கள் இறங்கினோம். கூட்டம் காமராசரை நோக்கித் தள்ளிக் கொண்டு வந்தது. நெரிசலைச் சாமாளிக்கக் காவல்துறையினர் பட்ட பாடு, பரிதாபமாய் இருந்தது.

நான்கடி நடந்ததும் காமராசர் காவல்துறையினரைப்பார்த்து, சும்மா இருக்கும்படி ஆணையிட்டார். மக்களைப் பார்த்து,

“ஏம்பா உன்னைத்தான், உங்களோடு இருந்து பேசிவிட்டுப் போகவே வந்திருக்கிறோம். அதற்குள் ஏன் ஆத்தரப்படுகிறே? பெரியவங்க வருகிறார்கள். வழிவிடு’ என்று கூறியபடியே, பொதுமக்கள் தோளைத் தொட்டு வழி விலக்கிக்கொண்டே சென்றார். இரண்டு பர்லாங்கு தூரமும் பெரியவர் பாதுகாப்பில் இடிபடாமல் போய்ச் சேர்ந்தோம்.

எங்களையும் பெரியவர்கள் என்றுசொல்லி இப்பெருந்தலைவர் ஊக்குவித்தார். எதற்காக? ஏழை எளியவர்க்கு மேலும் தொண்டு செய்வதற்காக; நாட்டின் நன்மைக்காக. விழா முடிந்து, ஒன்பதரை மணிக்கு அவ்வூரிலேயே இரவுச்சாப்பாடு. பொதுமக்கள் இயல்பை மட்டும் அல்லாது அதிகாரிகளின் இயல்பையும் உணர்ந்தவர் காமராசர்.

அலுவல்பற்றிய கூடங்களில், விதிமுறைகளைச் சுட்டிக்காட்டுவதில், முந்திரிக்கொட்டைகளாய் இருக்கும் அதிகாரிகள்கூட, அமைச்சர்களோடு விருந்துக்குப் போகும்போது, சற்றுப் பின் வாங்குவார்கள். எங்காவது ஒரு மூலையில் சிக்கிக் கொண்டு தவிப்பார்கள். இது காமராசருக்கு நன்றாகத் தெரியும். அவர் விருந்துண்ண நுழையும்போது, உடன் வந்த பெரிய அதிகாரிகளையும் உடன் அனுப்பச்சொல்வார். தாம் உட்கார்ந்த பந்தியில் அடுத்த சில இடங்களில் யாரையும் உட்கார விடமாட்டார். வந்த அதிகாரிகளை அமரச்செய்வார். பிறகு காலியுள்ள இடங்களில் யாரும் உட்காரலாம்.

அவரோடு பயணஞ்செய்யும்போதும் சரி, விருந்துண்ணும்போதும் சரி, அதிகாரிகளை அலட்சியப்படுத்த மாட்டார். தம்முடைய பண்ணையாளாகவோ, கட்சி ஊழியராகவோ கருதாமல், பொது மக்களின் மதிப்பிற்குரியவர்கள் என்பதைக் காட்டும் வகையில்தாமே மரியாதை காட்டுவார்.

அதிகாரிகளுக்கு வரும் பெருமையைக் கண்டு அழுக்காறு கொள்ளாத பண்பாளர், காமராசர், எனக்கு, முதல் அமைச்சர் காமராசரும் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியமும் அலுவல் பார்ப்பதில் முழு உரிமை கொடுத்திருந்தது உலகறிந்த சேதி.

உலகம் அஇயாத உண்மை ஒன்று உண்டு. அது என்ன? பேச்சுரிமை. அதற்கு மேலும், நீண்டு பேசும்படி இருவருமே ஊக்குவித்தார்கள்.

முதல் அமைச்சர் காமராசரோடு, மதலில் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே, தாராளமாக்ப் பேசும்படி பெரியவர் ஆணையிடார். அவரை விட அதிக நேரம் பேசியதைப் பற்றி மகிழ்ந்தார்; அவர் கலந்துகொண்டு எல்லா நிகழ்ச்சிகளிலும் நான் நீளமாகப் பேசினேன்.

பெருந்தலைவர் என்றும் முகஞ்சுளித்ததில்லை. ஒரே ஒரு முறை அவர் ஏமாந்து போனார்.

அம்முறை அவர் சாத்தூர்ப்பகுதியில், பயணஞ் செய்தார். ஒரே நாளில் பல நிகழ்ச்சிகள். முதல் நிகழ்ச்சி சாத்தூரில் அது கல்விபற்றியது. காமராசரும் நானும் கலந்துகொண்டோம். அவர் பேசினார். அடுத்து நான் பேசவேண்டும். என் பேச்சைக் கேட்டுவிட்டு, அடுத்த அரசியல் நிகழ்ச்சிகுப் போகலாம் என்றார். மாவட்டப் பெரியவர்கள், பல நிகழ்ச்சிகள் இருப்பதால், உடனே புறப்பட வேண்டினார்கள். அவர் இணங்கவில்லை.

அவர் வேலைக்கு உதவியாக இருப்போமென்று கருதி, அரை மணியில் என் பேச்சை முடித்துவிட்டேன்.

“என்ன இப்படிப் பண்ணிவிட்டீர்கள்? இன்னும் நீளமாகப் பேசியிருக்கலாம்” என்றார். ஆனால் கோபிக்கவில்லை.

இமயமலை, பரங்கிமலையைக் கண்டா பொறாமைப்படும்.

பள்ளிச் சீரமைப்பு இயக்கம்

அந்த அந்த ஊர்மக்களின் உழைப்பையும் நன்கொட்களையும் சேர்த்து, உள்ளூர்ப் பள்ளிக்கூடங்களின் நிலையைச் சீராக்கும் ‘பள்ளிச் சீரமைப்பு இயக்கம்’ தமிழ் நாட்டில்தான் தோன்றிற்று. அதன் புகழோ, பாரதம் முழுவதும் பரவிற்று. இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திரப் பிரசாத் பள்ளிச் சீரமைப்பு மாநாடு ஒன்றைக் காண விரும்புவாதாகத் தகவல் வந்தது. கூடிய வரையில் சென்னைக்கு அருகில் இருந்தால், நல்லது என்று குறிப்பும் இருந்தது.

முதல் அமைச்சர் காமராசர் என்னை அழைத்தார்; செய்தியைச் சொன்னார். அத்தகைய மாநாட்டை எங்கே ஏற்பாடு செய்யலாம் என்று கேட்டார்.

“குடியரசுத் தலைவர் வருவது வேலூர் கிறித்துவ மருத்துவ மனையின் பொன்விழாவிற்கு என்று கேள்வி. அப்படியாயின் வேலூரிலேயே பள்ளிச் சீரமைப்பு மாநாட்டை நடத்தலாம்.

“வேலூரில் ஏற்கனவே அத்தகைய மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துவிட்டுத் தங்கள் தேதிக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். தாங்கள் விரும்பினால் குடியரசுத் தலைவரை அதில் பங்கு கொள்ளச் செய்யுங்கள்” என்றேன்.

“அது நல்ல யோசனை. முடியுமானால், வேலூர் வட்டத்தோடு பக்கத்து வட்டங்களையும் சேர்த்து பெரிய மாநாடாகவே நடத்திவிடுங்கள்” என்றார்.

ஒப்புக்கொண்டேன். வரவேற்புக் குழுப் பொறுப்பை யாரிடம் கொடுக்கலாமென்று கேட்டேன்.

“நீங்கள் சொல்லுங்கள்” என்றார்.

அம்மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பெயர்களைச் சொன்னேன். “திரு முகம்மது அன்வர் எம்.பி.யைத் தலைவராகவும்,திரு. வி.கே.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ வைச் செயலாளராகவும் போடலாம். அதைப் பக்குவமாக ஏற்பாட செய்ய முடியுமா?” என்று கேடார்.

“ஆகட்டும்” என்றேன்.

முதல் அமைச்சர் ஆதரவு இருக்கிற துணிவில், வேலூர் பெரியவர்கள் கூட்டமொன்றைக் கூட்டி, அவர் விரும்பியபடியே ஏற்பாடு செய்துவிட்டேன்.

சில நாள்கள் சென்றன. வேலூர் பள்ளிச் சீரமைப்பு மாநாட்டிற்குக் குடியரசுத் தலைவரே வர இருந்ததால், பந்தல் ஏற்பாடுகளை நேரில் தாமே முடிவு செய்ய விரும்பினார். முதல் அமைச்சர் காமராசர். குறிப்பிட்ட நாளான்று, காமராசர் வேலூர் கோட்டை மைதானத்தைப் பார்வையிட்டார். அப்போது பொதுப்பணித் துறையின் தலைமைப் பொறியர், சில பெரிய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியாளர், நான் ஆகியோர் உடன் இருந்தோம். பரந்த மைதானத்தில் பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்தார், காமராசர்.

நான் மாற்றுக் கருத்தைக்கூறினேன்.

“பதினாறு ஆயிரம் நன்கொடையாளர்களுக்கும் நுழைவுச் சீட்டுக் கொடுக்கிறோம். தாம் வர முடியாவிட்டால், வேறு யாருக்காகிலும் கொடுத்தனுப்புவர். பத்தாயிரம் ஆசிரியர்களுக்குக் குறையாமல் எதிர்பார்க்கலாம். பொதுமக்கள் சில ஆயிரம் பேர்களாவது வந்துவிடுவார்கள். அவர்களைத் தடுக்க முடியாது. ஆகவே, முப்பதாயிரம் பேருக்கு இடம் இருந்தால் நன்றாக இருக்கும்”. என்றேன்.

நாலுபேர் முன்பு மறுத்துப் பேசிய என்மேல் சினந்தாரா? இல்லை. சிரித்துக்கொண்டே,

“அவருக்கு ஏன் கூறை? முப்பத்தைந்தாயிரம் பேர் இருக்கிற அளவுக்கு கொட்டகை போட்டுக் கொள்ளுங்கள்”, என்உ தலைமைப் பொறியருக்கு ஆணையிட்டார். அப்படியே நடந்தது.

மாநட்டன்று, நிகழ்ச்சிக்கு இரண்டு மணி முன்னதாகத் தடீரென் காமராசர் ப்தலுக்கு வந்தார். நானும் பிற கல்வி அதிகாரிகளும் அங்கு இருந்தோம். திடீரென வந்தாரே, ஏதோ, என்னவோ என்று பதற்றத்தோடு ணங்கினோம். இளகையோடு பந்தலை ஒருமறை கண்ணா சுழன்று பார்த்தார். நன்கொடையாளர்கள், ஆசிரியர்கள் பகுதி அப்போதே நிறைந்திருந்தது. மாநாடு களை நட்துதவிதில் பெரும் பட்டறைஉடைய அவருக்கு மகிழ்ச்சி. என்னைப்பார்த்து, “உங்கள் கணக்கு சரிஏ, பொதுமக்கள் பிரிஉம் சீக்கிரம் நிரம்பிவிடும்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

மாநாட்டு நேரத்திற்கு, குடியரசுத் தலைவரோடு வந்தார். மேடைக்கு இருமருங்கிலும் நீண்ட, ஆறுபடி ‘தாலரி’ களில் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கல்விக்கூடங்களுக்கான பொருள்களைக் கண்டு வியந்து நின்றார். அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாடக் கருவிகளையும் பிறவற்றையும் கண்டு, இராசேந்திரபிரசாத் வியப்போடு, “எவ்வளவு மதிப்பிருக்கும்?” என்று கேட்டார்.

நிதி அமைச்சர், “ஆறு, ஏழு இலட்ச ரூபாய் பெறும்” என்று சொல்லி முடிப்பதற்குள், உடன் இருந்த காமராசர், ஆங்கிலத்தில்,

“இல்லை; இல்லை; இயக்குநரே, தகவல் கொடும்” என்றார்.

நான், “பன்னிரண்டு இலட்சம் பெறும்” என்று சொன்னபோது, மீண்டும், காமராசர்
“அதுவே சரி” என்று உறுதிப்படுத்தினார்.

இராசேந்திரபிரசாத், தமது உரையில்,

“மகாத்மா காந்தியும் நானும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதில் பீகாரில் செய்ய முயன்ற முயற்சியில் -நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் மக்களை ஈடுபடுத்தும் முயற்சியில் -தமிழ்நாட்டில், கல்வித்துறையல் சிறந்த வெற்றி பெற்றுவிட்டீர்கள். அதற்காக என்னுடைய பாராட்டுதல்” என்று கூறியபோது, காந்தியின் சிறந்த வாரிசாகிய கறுப்புக் காந்தி காமராசர் மனம் எவ்வளவு மகிழ்ந்ததோ! முகத்திலும் மகிழ்ச்சி ஒளிவிட்டது.

மூன்று நன்மைத் திட்டம்

முன்பு, சென்னை மாநிலத் தொடக்கப் பள்ளிகளுள், அரிசன்ப பள்ளிகளை மட்டும் அரசே நேரடியாக நடத்தி வந்தது. அவை சொற்பம். பெரும்பாலானவை. தனியார் அல்லது நகராட்சி அல்லது மாவட்ட ஆணைக்குழுவால் நடத்தப்பட்டவை.

உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றிய சில ஆயிரம் பேர்களுக்கு ஓய்வுகால ஊதியம் உண்டு. மற்ற இலட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு அது இல்லை. பிராவிடண்ட் பண்டு பணமே உண்டு.

காமராசர் முதல் அமைச்சரானதும் இதை மாற்றி அமைத்துவிட்டார். நான் இயக்குநராய் முதன்முறை அவரைக் கண்டபோதே, “எல்லா ஆசிரியர்களுக்கும் பென்ஷன் கொடுக்க வேண்டும். அதற்கு ஒரு திட்டம் தீட்டிக்கொடுங்கள். இது உங்களோடு இரகசியமாய் இருக்கட்டும். அலுவலகத்திற்குக்கூடத் தெரியவேண்டா” என்று ஆணையிட்டார்.

இராசகோபாலாச்சாரியார் முதல் அமைச்சராய் இருந்தபோதிலும் இப்படியொரு திட்டம் போட்டுத் தரும்படிக் கேட்டார். அப்போதிருந்த அதிகாரிகள் கலந்து ஆலோசித்தார்கள். அப்படிச் செய்ய இயலாது என்று பதில் எழுதிவிட்டார்கள்.

நானே வழி வகைகளைச் சிந்தித்தேன். கல்வித்துறையின் முதற்படியிலிருந்து வாழ்க்கையைத் தொடங்கியது அப்போது உதவிற்று. எந்தெந்தத் தகவல்கள் எதில் எதில் கிடைக்குமென்று எனக்குத் தெரியும். அவற்றின் உதவியால் நானே ஆசிரியர்களுக்கான, ‘மூன்று நன்மைத் திட்ட மொன்றைத் தீட்டினேன். செலவு மதிப்பீட்டை ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்துக்கொண்டேன்.

திட்டம் ஆயத்தமாயிருப்பதை முதல் அமைச்சரிடம் சன்னேன்.

“சரி!சரி! கல்வி அமைச்சர் அதுபற்றி உங்களிடம் பேசுவார்,” என்றார்.

அப்படியே கல்வி அமைச்சரிடமிருந்து அழைப்பு வந்தது. திட்டத்தோடு சென்றேன். அதற்கு அடிப்படையான புள்ளி விவர வெளியீடுகளையும் என்னுடன் கொண்டுபேனேன்.

கல்வி அமைச்சர், நிதித்துறைச் செயலரை அழைத்தார், அமைச்சர், திட்டத்தை என்னிடம் இருந்து வாங்கிப் பார்த்தார்; பிறகு செயலரிடம் கொடுத்தார். அவர் தணிக்கை செய்துவிட்டு, “கணக்கு சரி” என்றார்.

மூவரும் முதல் அமைச்சரிடம் சென்றோம்.

“மதிப்பீட்டுக் கணக்கு சரியாக இருக்கிறதா?” என்று நிதித்துறைச்செயலரைக் கேட்டார், காமராசர்.

“ஆம்” என்றார் செயலர், டி.ஏ. வர்கீஸஃ.

“அப்படியானால், இது நம் நால்வரோடு இரகசியமாய் இருக்கட்டும். அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தை ஆலோசிக்கும் வரையில் இரகசியமாய் இருக்கட்டும். அப்போதும் நீங்களே தனியாக என் கவனத்தற்கு கொண்டுவாருங்கள்.” என்று நிதித்துறைச் செயலருக்கு முதல் அமைச்சர் ஆணையிட்டார்.

வரவு செலவுத் திட்ட ஆலோசனையின்போது அச்சில் ஏறிய திட்டங்களைப்பற்றி முடிவு செய்தபிறகு நிதித்துறைச்செயலர்.

“இயக்குநர் புதியதொரு திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் போட்டுள்ள செலவு கணக்கு சரியாக உள்ளது” என்றார்.

நான் திட்டத்தை விளக்கினேன். “ஏற்கனவே பெற்றுவரும் பிராவிடண்ட் பண்டோடு, ஓய்வு கால ஊதியம் கொடுக்கவேண்டும். ஆசிரியர் ஒவ்வொருவரும் கட்டாயமாக ஆயுள் காப்பு ஒப்பந்தம் செய்துகொள்ள ஏண்டும்” என்று விளக்கினேன்.

பல அதிகாரிகள் குறுக்கிட்டார்கள், ஆசிரியர்களைப்போலவே, ஓய்வுகால ஊதியம் இல்லாமல் பல துறைஇலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் துன்பப்படுகிறார்கள். கொடுக்கும் உதவியை எல்லோருக்கும் கொடுக்கவேண்டுமென்று வாதாடினார்கள்.

பொறுமையாகக் கேட்டார் காமராசர்.

“நீங்கள் சொல்வதில் தவறில்லை. எல்லோருக்கும் நியாயம் வழங்க வேண்டும். அதை எங்காவது தொடங்க வேண்டும். அப்புறம் அது எல்லோருக்கும் எட்டும்.

“இவ்வாண்டு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களோடு தொடங்குவோம்” என்றுமுடிவு செய்தார், முதல் அமைச்சர் காமராசர்.

1-4-1955 முதல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மூன்று நன்மைத் திட்டத்தைப் பெற்றார்கள். 14-41958இல் அது உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் கிடைத்தது. அடுத்து, கல்லூரி ஆசிரியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்தியாவில் இப்படியொரு திட்டத்தைக் கொண்டுவந்த முதல்மாநிலம் தமிழ்நாடாகும். கல்வி கொண்டுவந்தத முதல் மாநிலம் தமிழ்நாடாகும். கல்வி பரவலாக ஏழை எளியவர்களுக்குப் போதிக்க வேண்டி, ஆசிரியர்களை ஊக்குவிப்பதற்காக, காமராசர் இந்த மூன்று நன்மைத் திட்டங்களையும் அமுல்படுத்தினார். என்னே அவரது வள்ளல் தன்மை.

வேலை நிறுத்தம்-காமராசரின் திட்டம்

1956ஆம் ஆண்டு, அக்டோபர் 2ஆம் நாள, இந்தியா, மொழிவழி மாநிலங்களாகச் சீரமைக்கப்பட்டது. பன்மொழி மாவட்டங்கள் மொழி அடிப்படையில் பிரிக்கப்படும்போது எல்லைத் தகராறுகள் ஏற்படுவது வியப்பல்ல.

அவ்வாண்டின் தொடக்கத்தில், தமிழ்நாட்டுக்கும் கேரளத்திற்கும் இடையே அத்தகைய சிக்கல் எழுந்தது.

தேவிகுளம், பீர்மேடு ஆகியபகுதிகளில் வாழ்ந்தவர்களுள் தமிழர்கள் பெரும்பாலோர். எனவே, அப்பகுதிகளைத் தமிழ்நாட்டோடு சேர்க்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது. அதன்பால், இந்திய அரசின் கவனத்தை ஈர்த்து, தமிழர்களின் உணர்வினை வெளிப்படுத்த வேண்டிய நிலை உருவாயிற்று.

தேவிகுளம், பீர்மேடு போராட்டத்திற்காகப் பல கட்சிகளை உள்ளடக்கிய குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் தலைவராக, சர்.பி.டி. இராசன் இருந்தார்

1956ஆம் ஆண்டு பிப்பரவரி 20ஆம் நாள், தமிழ்நாடு முழுவதும் கதவடைப்பு, வேலை நிறுத்தம் முதலியவற்றிற்கு ஏற்பாடு செய்யும்படி, குழுவின் சார்பில் அறிவிப்பு வந்தது. மாணாக்கரும்அவ்வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுத்தமிழகத்திற்குரிய நிலத்தை மீட்க உதவும்படி கோரப்பட்டார்கள்.

வேலை நிறுத்த அறிவிப்பு வந்த இரணொடொரு நாள்களில் அன்றைய தமிழக முதல்வர் மாணபுமிகு காமராசர் தலைமைச் செயலகத்தில், ஆலோசனைக் கூட்டமொன்றைக் கூட்டினார்.

அக்கூட்டத்தில், நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியமும் உள்துறை அமைச்சர் மீ. பக்தவச்சலமும் கலந்து கொண்டார்கள்.

அதிகாரிகள் சார்பில், தலைமைச்செயலர், காவல் துறைச் செயலர், கல்வித்துறைச் செயலர், காவல் துறைத் தலைவர், பொதுக்கல்வி இயக்குநர் ஆகிய நானும் கல்ந்து கொண்டோம்.

“தேவி குளம், பீர்மேடு விவகாரம் ஆழ்ந்த உணர்வின் அடிப்படையில் கிளம்புவது. அதைப்பக்குவமாகச் சமாளிக்க வேண்டும்”

“பொதுமக்களுக்கும் பொதுச்சொத்துக்கும் கேடல்லாமல் எப்படிச் சமாளிக்கலாம்?

“காவல் துறைத் தலைவரின் திட்டமென்ன?”

மேற்கூறியவாறு, காமராசர் கலந்துரையாடலைத் தொடங்கினார்.

காவல் துறைத்தலைவர் பதில் வருமாறு;

“முன்பு நடந்த வேலை நிறுத்தங்களின்போது, கல்வி நிலையங்களை மூடும்படியும் மாணக்கர்களை வேலை நிறுத்தம் செய்யும்படியும் வேண்டுகோள் விடுப்பதில்லை. இம்முறை மாணாக்களைரக் குறிப்பிட்டுத் தனியாக வேண்டுகோள் விடுத்திருப்பதால், எங்கள் நிலை சங்கடமாகியுள்ளது.

மற்ற நேரங்களில் அந்தந்த ஊரிலுள்ள சமூக விரோதிகளை முன்னதாகவே காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்துபூட்டி வைப்போம். அரசியல்வாதிகள் மட்டும் வெளியில் போராட்டம் நடத்தும்போது, வயது வந்த அவர்களைச் சமாளிப்பது தொல்லையல்ல. இம்முறை இளம்பிள்ளைகள்-மாணாக்கர்-கூட்டத்தோடு சேர்ந்து ஊர்வலம் போனால், ஆர்ப்பாட்டம் செய்தால், அவர்களைப்பிடித்து வைத்துக்கொண்டால்கூட விபரீதமாகிவிடலாம்.

“மாணாக்கரைப்பொறுத்தமட்டில், அவர்கள் பொதுமக்களோடு சேர்ந்து ஊர்வலம் போகாமல் இருந்துவிட்டால், அமைதியைக் காத்துவிடுவோம். மாணவர்களைத் தனிமைப்படுத்தப் பொதுக்கல்வி இயக்குநரே உதவ்வேண்டும்.”

முதல்வர்காமராசர் என் பக்கம் திரும்பி, “உங்கள் யோசனை என்ன?” என்றார்.

“தாங்கள் எப்படி ஆணையிட விரும்புகிறீர்கள் என்று தெரிந்தால், அதற்கேற்பத் திட்டம் தீட்டலாம்” என்றேன்.

“அப்படியா! எனக்குத் தோன்றியதைச் சொல்லுகிறேன். அதுவே சரியாக இருக்குமென்று சொல்லவில்லை. கலந்து பேசுவதற்குகாகக் கூறுகிறேன்.

“பீர்மேடு, தேவிகுளம்பற்றிப் பொதுமக்கள் மட்டுமல்ல, படித்தவர்கள்கூட உணர்ச்சி வயப்படலாம். அது,பறி எரியச் செய்துவிடக்கூடது. அடங்கி வெளிப்பட்டால் தப்பில்லை; நல்லதுங்கூட.

“நீங்கள் உடனே திட்டமிட்டு ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகருக்கும் செல்லுங்கள். ஆங்காங்கே அம்மாவட்டத்தின் கல்லூரி முதல்வர்கள், உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,பள்ளித் தலைமை ஆசிரியைகளைக் கூட்டிப் பேசுங்கள்.

“அவர்களிடம் தைரியமாகச் சொல்லுங்கள். இப்போரட்டத்திற்கு ஆதராவான உணர்வினை நீங்கள் கொண்டிருந்தால், அதை நாங்கள் குற்றமாக கொள்ள மாட்டோம்.

“கல்வி நிலையங்களை -மாணாக்கரை வழி நடத்த வேண்டியவர்கள் முதல்வர்களும் பள்ளித் தலைவர்களுமே. ஆகவே, நீங்கள் அடுத்து வரும் ஒவ்வொரு நாளும், பொதுக்கிளர்ச்சிகளில் மாட்டிக் கொள்ள வேண்டாமென்று, மாணவர் கூட்டத்திலோ மாணவத் தலைவர்கள் வழியாகவோ நிதானப்படுத்தட்டும்.

“அது பலிக்காது என்று தோன்றினால், கல்வி நிலையத் தலைவரே முன்வந்து, நாமெல்லாஓரும் சேர்ந்து, கலவி நிலையத்திற்குள் ஊடி, பீர்மேடு, தேவிகுளத்தைத் தமிழ்நாட்டோடு சேர்க்கும்படி தீர்மானம் போட்டு அனுப்புவோம் என்று சொல்லிப் பார்க்கட்டும். அதற்கு உடன்பட்டால் சொற்பொழிவுகள் இல்லாமல் கல்வி நிலையத் தலைரே முன்னின்று தீர்மானம் போட்டு உங்களுக்கும் மற்றவர்களுக்கும் அனுப்பபச் சொல்லுங்கள்.

“அதுவும் முடியாத இரண்டொரு இடங்களில் மாணாக்கர் வேலைநிறுத்தம் செய்துதான் தீர்வோம் என்றால், ஊர்வலத்தில் சேராமல், வீடுகளிலேயே இருந்துவிடும்படி தலைவரே சொல்லிப் பார்க்கட்டும்.

“இப்படிச் செய்ய முடியுமா?” என்று காமராசர் வினவினார்.

“அய்யா! இதில் சிக்கல இல்லை. நாளையே தொடங்கிவிடுவேன். ஒரே ஒருபாதுகாப்பு தேவை.”

“எந்தக் கல்லூரி முதல்வர் பேரிலாவது, தலைமை ஆசிரியர் பேரிலாவது, மாணாக்கர்களைத் தீர்மானம் போடத் தூண்டினார், வீட்டில் நின்றுவிட முடுக்கினார் என்றுபுகார் வந்தால், அவற்றின் பேரல் நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்றால் கல்லூரி முதல்வர்களும், மாணாக்கர்களைத் தனிமைபடுத்திவிடலாம்” என்று நான் கூறினேன்.

“ஆமாம்! ஆமாம்! நான் சொல்லித்தான் அவர்கள் அவ்வளவு உரிமை எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் பேரில் இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டாம என்று காமராசர் கூறிவிட்டு, காவல்துறைத் தலைவரைப் பார்த்து,

“போதுமில்லையா?” என்றார்.

“சரியா இருக்குங்க” என்று அவர் பதில் கூறிய பின், கூட்டம் கலைந்தது.
நான் உடனே செயல்படத் தொடங்கினேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்லூரி முதல்வர்களையும் உயர்நிலைப்பள்ளித் தலைவர்களையும் கூட்டிக் கலந்துரையாடினேன். காமராசர் திட்டத்தைக் கூறினேன்.

அனைவரும் பூரித்தனர்; தெம்பு கொண்டனர்.

“இப்படிஎங்களுக்கு இதுவரை யாரும் பக்கபலமாய் நின்றதில்லை. மாணாக்கர்களால்தொல்லை ஏற்படாதபடி பார்த்துக்கொள்வோம்” இது ஒருமித்த முடிவு.

எதிர்பார்த்தப்படி நடந்ததா? ஆம், மாணவர்கள் வேலைநிறுத்தம் செய்யவில்லை; ஊர்வலங்களில் கலந்துக்கொள்ளவில்லை. எந்த அளவிற்குக்காமராசர் வெற்றி பெற்றார் தெரியுமா?

கல்விநிலையங்களும் மாணவர்களும் நீங்கலாக மற்றவர்கள் எங்களோடு எல்லைப்போராட்டத்தில் ஒத்துழைத்தார்கள்” என்று இரத்தினச் சுருக்கமாக, சர்.பி.டி. இராசன், போராட்ட நாறையடுத்து அறிவித்தார்.

காமராசரின் அணுகுமுறை இளம்பிஞ்சுகளைக் கிளர்ச்சித்தீயில் தள்ளாமல் காப்பாற்றியது. கல்வி கற்கும் மாணவர்கள் அரசியல் கிளர்ச்சிகளில் தீவிர ஈடுபாடு கொண்டால் அவர்களின் முன்னேற்றம் பாதிக்கும் என்பதை உணர்ந்திருந்தார், காமராசர்.