தேதி, கிழமை போன்றவை நேரத்தைக் கணக்கிடுவதற்கான ஒரு கருவி மட்டுமே என்று குறிப்பிட்டு வந்த காமராஜர், முதன் முதலில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது, தமிழ்ப் புத்தாண்டு தினத்தைத் தேர்ந்தெடுத்து பதவி ஏற்றுக்கொண்டார். இதுவே காமராஜரின் தமழ்ப் பற்றினை முதல் நோக்கிலேயே வெளிப்படுத்திய செயலாகும்.

1947-ல் இந்தியா விடுதலை பெற்றபோது இந்தியா முழுமையும் ஆங்கிலமே ஆட்சி மொழியாகவும், ஆங்கில வழி மூலம் மட்டுமே நிர்வாகம் மேற்கொள்ள இயலும் என்ற நிலையும் இருந்தது. விடுதலை பற பிறகு மாநில நிர்வாகத்தில், அந்தந்த மாநில மொழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற தாக்கம் இருந்தாலும், அதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்படாமலும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாமலும் இருந்தது.

1948-ல் இருந்த காங்கிரஸ் ஆட்சியில், இதற்கான முதல் முயற்சியாக, திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தில் தமிழ்மொழி சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் அந்த முயற்சி வெற்றியடையவில்லை. தொடர்ந்து தமிழில், கலைக்களஞ்சியம், தமிழ்க்கழகம் போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அவைகளும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

ஆட்சி மொழியாக தமிழ்

1954-ஆம் ஆண்டு, முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டா காமராஜர் இதற்கான முயற்சியில் தீவிரமாகச் செயல்பட்டார்.

1956 நவம்பர் 1-ஆம் தேதி அன்றுமொஇழவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டவுடன் தமிழர்கள்மாநிலமான சென்னை மாநிலத்தில், 1957- ஜனவரி 23-ஆம் தேதியன்று தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. 1957-58 ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் வரவு செலவு திட்டம் முதன்முறையாக தமிழில் வழங்கப்பட்டது. 24-02-1961-ல்அப்போதிருந்த சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டு வந்ததை மாற்றி தமிழ்நாடு என்று அழைக்கப்படுமென சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

ஆட்சி மொழித் தகுதி அளிக்கப்பட்டாலும் தனை நடைமுறைப்டுத்துவதிலுள்ள சிக்கல்களை உணர்ந்த காமராஜர் அதனைக் களைவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

* 1957-ல் தமிழ் ஆட்சிமொழி அமுல்படுத்தும் குழுவை ஏற்படுத்தினார்.

* 1958-ல் ஆட்சிமொழி குழு சிறப்பு அலுவலர் (ஆய்வு) மற்றும் ஆட்சிமொழி குழு சிறப்பு அலுவலர் (மொழியாக்கம்) என்ற இரு பதவிகள் ஏற்படுத்தப்பட்டன. அவர்கள் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழ் ஆட்சிமொழி செயலாக்கம் பற்றி ஆய்வு செய்து, அமுல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அறிந்து ஆய்வின் போதே அறிவுரைகள் கூறி குறைகளை களைவது, அகராதியில் இல்லாத சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை தேவைப்படும் இடங்களில் உடனுக்குடன் எடுத்துரைப்பது மற்றும் தாங்கள் செல்லுகின்ற அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் எளிய அலுவலக தமிழ் சொற்களை கோர்த்து ஆட்சிச்சொல் அகராதிகளை ஏற்படுத்துவது.

* எல்லாத்துறைகளிலும் உபயோகிக்கக்கூடிய வகையில் ஒவ்வொரு துறைக்கும் தமிழ் ஆட்சிமொழி அகராதியையும் அதற்கு இணையான ஆங்கிலச்சொல் அகராதியையும் வெளியிடப்பட்டு, அனைத்து அரசு துறைகளுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

*எல்லாச் சட்டங்களையும், தமிழாக்கம் செய்து வெளியிடுவதற்கான முஉழ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டடன.

தமிழ் வளர்ச்சிக்குழு

தமிழ்மொழியின் தொன்மையையும், பன்முக வளர்சியையும் ஆராய்ந்து மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளவும, தமிழகத்தின் ஆட்சிமொழியாக தமிழைமுழுமையாகப்பயன்படுத்தும் வழிமுறைகள்ளைத் தெரிவிப்பதற்காகவும் திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் அறிஞர் அண்ணா,நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பல்வேறு தமிழறிஞர்கள், தலவர்கள் உட்பட 39 பேர் கொண்ட தமிழ் ஆராய்ச்சிக்குழு 1959-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

பயிற்று மொழி

கல்லூரிகளில், பயிற்றுமொழியாகத் தமிழை அறிமுகப்படுத்த, காமராஜர் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கும், 1960-61 -ஆம் ஆண்டிலிருந்து கல்லூரிகளில் தமிழைப் பயிற்று மொழியாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கல்லூரித் தமிழ்க்குழு என்ற அமைப்பினை காமராஜர் அரசு உருவாக்கியது.

கலைக்களஞ்சியம்

1957- ஆம் ஆண்டு தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் முதல் தொகுப்பு வெளியிடப்பட்டது. பின்னர் ஆண்டுக்கொரு கலைக்களஞ்சியத் தொகுப்பாக, 1963-ஆம் ஆண்டு வரையில் ஒன்பது தொகுப்புகள் வெளியிடப்பட்டன. இந்தியாவிலேயே இந்திய மொழிகளில், இத்தகைய கலைக்களஞ்சியத் தொகுப்பு வெளியிடப்பட்டது தமிழில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் அறிவியல் நூல்கள்

தமிழில் பன்னாட்டு அறிஞர்களின் கருத்துக்கள் வர வேண்டமென விரும்பி, அதற்கான முயற்சிகளில் காமராஜர் அரசு செயல்படுத்தி வந்தது. அந்தத் திட்டத்தின்படி, நூல்களை வெளியிட இயலாதவர்கள் தங்களிடமுள்ள கையெழுத்துப் பிரதியைக் கொடுத்தாலும், அதற்கும் பரிசு அளித்து, வெளிவர ஏற்பாட செய்யப்பட்டது.

பச்சைத் தமிழர்

இப்படிப் பல்வேறு வகையிலும் முயற்சிகளை மேற்கொண்டு 200 ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சியால் நணிந்து போன தமிழ் மொழியை செம்மைப்படுத்தி நிர்வாகத்திலும், நடைமுறையிலும், கல்லூரிகளில் பயிற்று மொழியாகவும் ஆக்கிட அரும்பாடுபட்டவர் காமராஜர்.

இன்று, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கோஷம் தமிழகமெங்கும் ஒலிக்கிறது என்றால் அதற்குக் காமராஜரின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதன் காரணமாகவே, தமிழர்களால் ‘பச்சைத் தமிழர்’ என்று அழைக்கப்டுகிறார் காமராஜர்.