சமூக அமைப்பின் காரணமாக காலம்காலமாக மறுக்கப்பட்ட உரிமைகளின் விளைவாய், தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள முடியாத நிலையில் மக்கள் இருந்தனர். அந்த மக்களும் சமநிலை பெற்றிட, கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டு முறை ஏற்படுத்தப்பட்டது.

சமூக நீதியில் காமராஜருக்கிருந்த அக்கறை

தமிழகத்தைப் பொறுத்தவரை, இட ஒதுக்கீடு என்பது புதிதான ஒன்றல்ல. எந்த ஒரு சாதியும் தனி முக்கியத்துவம் பெறாத வகையில் எல்லா சாதியினருக்கும் பதவிகளைப் பகிர்ந்தளிக்குமாறு, 1854-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசின் வருவாய்த்துறை கேட்டுக்கொண்டது.

இதுவே பின்னர், நீதிக்கட்சி ஆட்சியில் 16.9.1921-இல் “முதல் வகுப்பு வாரி அரசு ஆணையாக” வெளியிடப்பட்டது. இதன் வழியாக, வருவாய்த் துறையில் மட்டும் இருந்த இட ஒதுக்கீடு அனைத்துத் துறைகளுக்கும் விரிவு படுத்தப்பட்டது.

நாடு விடுதலை பெற்ற பின்னர், 21.11.1947 -ஆம் ஆண்டு சென்னை மாநில அரசு புதிய இட ஒதுக்கீட்டு முறையை அமுலுக்குக் கொண்டு வந்தது. இந்த ஆணை வேலை வாய்ப்பிலும், கல்வியிலும் கூட இட ஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்தது.

1950-ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டம் அமுல் செய்யப்பட்டது. அதன்படி சட்டத்தின் முன் அனைவரும் சம்ம் என்பதும், சாதி, மத, பிறப்பு, இருப்பிடம், மதம், இனம் ஆகிய அடிப்படையில் வேறுபாடுகளைக் காட்டக்கூடாது என்பதும் வரையறுக்கப்பட்டது.

மக்களில் வாய்ப்புகளற்று, ஒடுக்கப்பட்டவர்களாக உள்ளவர்களைப் பாதுகாத்திட, அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்த வேண்டுமென அரசியல் சாசனம் எடுத்துரைக்கிறது.

அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், பின்தங்கியோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியவர்களுக்கு, இட ஒதுக்கீடு அளித்திட வகை செய்திடும் அரசாணையை சென்னை மாநில அரசு பிறப்பித்தது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியல் சாசனத்திற்கு எதிரானது இந்த அரசாணை என்றும், அதனை திரும்ப몮 பெற வேண்டும் எனவும் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்றமும் சென்னை மாநில அரசின் இட ஒதுக்கீடு ஆணையை அரசியல் சட்டத்திற்கு எதிரானது. எனவே செல்லாது என அறிவித்தது. உச்சநீதிமன்றமும் உயர்நீதி மன்றத்தின் நிலைப்பாட்டினை ஏற்றுக்கொண்டது. இதனால், பல்லாண்டு காலம் தமிழகத்தில் இருந்த இட ஒதுக்கீடு முறை ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.

தமிழ்நாடு காங்கிரா கமிட்டித்தலைவர் என்ற முறையிலும், சமூக நீதியில்தனக்கிருந்த அக்களை காரணமாகவும், இட ஒதுக்கீட்டிற்கு வழிவகை காணப்பட வேண்டுமென்று காமராஜரும் கோரிக்கை விடுத்தார்.

இதுமட்டுமல்லாமல், பிரதமர் நேருவுடன் தொடர்பு கொண்டு, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை விளக்கியது மட்டுமின்றி, உடனடியாக அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். இதிலே காலம் தாழ்த்தினால்,நடைபெறும் எல்லாப்போராட்டங்களிலும் தானும் தமிழ்நாடு காங்கிரா கட்சியும் ஈடுபடுமெனவும் கூறினார்.

அதனை பிரதமர் நேரு ஏற்றுக்கொண்டதன் விளைவாக இட ஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்யக்கூடிய வகையில் அரசியல் சட்டத்தில் முதல் முறையாகத் திருத்தம் செய்யப்பட்டது.

இதன் வழியாக, சமூக நீதியைப் பொறுத்தவரையிலான நிலைப்பாடுகளில், கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டுதான் செயலாற்றக்கூடியவர் என்பதைக் காமராஜர் நிரூபித்தார்.

அடுத்து தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட காமராஜர் குலக் கல்வத் திட்டத்தை விலக்கிக் கொண்டார். தான் எங்கிருந்தாலும், வேண்டயவர்களே கூட செய்திருந்தாலும், சமூக அநீதியை எதிர்ப்பதில் தனக்கு இணையாருமில்லை என மீண்டும் காமராஜர் உறுதிப்படுத்தினார்.

அரிசன நலன்

ஒவ்வொரு மாதமும் 30-ஆம் தேதியை அரிசன நாளாக்க் கடைப்பிடித்த காமராஜர் ஆட்சி, அரிசன மக்களின் மேம்பாட்டிற்கான பலவேறு திட்டங்களை செயல்படுத்தியது.

தாழ்த்தப்பட்டோர் வயது, தகுதி உயர்வு

எல்லா வகை மாணவர்களுக்கும் கல்லூரிப் படிப்பிற்கு அனுமதிக்கபட்ட அதிகபட்ச வயது வரம்பு 22 ஆக இருந்தது. சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட மாணவர்களைப் பிற மாணவர்களோடு சமநிலையில் வைத்துப் பார்க்கக்கூடாது. என்பதை உணர்ந்தார் காமராஜர் அந்த வகையில், 1955-56 கல்வி ஆண்டிலிருந்து தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் அதிகபட்சமாக வயது என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

ஏழைகளுக்குக் கல்வி சென்றடைய வேண்டுமானால், அவர்கள் கற்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். எந்த வகையல், மிகவும் பின்தங்கிய நிலையில், பொருளாதார வசதிகளற்று இருந்திடும் மாணவர்கள் கல்வி பயில வேண்டுமெனில், கல்வி க்கட்டணத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும். அந்த வகையில், 1954 – ஆம் ஆண்டு, ஆகஸ்டு இரண்டாம் தேதி தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்தது. தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம், தென்ஆற்காடு மாவட்டங்ளைச் சார்ந்த வன்னிய குல சத்திரியினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்விக் கட்டணத்திலிருந்து முழுமையாக விதிவிலக்கு அளிக்கப்பட்டது. மேலே கூறப்பட்ட மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதித்தொகையை செலுத்தி வரலாமென்று காமராஜர் அரசு ஆணையிட்டது.

தீண்டாமை ஒழிப்பு

தீண்டாமை, தண்டிக்கக்கூடிய ஒரு குற்றமாக சட்டங்கள் வழியாக்க்கொண்டு வரப்பட்டிருந்தாலும், மக்களின் முழுமையான பங்கேற்போடுதான் தீண்டாமையை ஒழிக்க முடியும். சமுதாயத்தல் சமநிலை அடைய முடியும் என்பதில் காமராஜர் அரசு உறுதி பூண்டிருந்தது. அது மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட உனதவர்களை தனியே பிரித்து, சலுகைகளை மட்டுமே அளிப்பதால், சமநிலை காண்பது என்பது கேள்விக்குரியவிடும் தீண்டாமை ஒழிப்புத் திட்டங்களில் பலத்த மாறுதல்கள் கொண்டு வரப்பட்டன. தீண்டாமையை ஒழிப்பதற்கு எது சிறந்த வழி என்று டாக்டர் அம்பேத்கார் கூறும்போது “உயர்கல்வி, உயர் பதவிகள், வாழ்க்கை நடத்தக் கௌரவமான வழி ஆகியவைகளைப் பெறுவதற்கான முயற்சி செய்தால், தீண்டத்தகாதவர்களுக்கு முன்னேற்றம் விளையும். அவர்களை மற்ற சமூகத்தினர் பார்க்கின்ற கண்ணோட்டம் மாறும்” என்றார்.

எல்லா மாவட்டங்களிலும் 3 உதவி சேவக்குகளையும் 3 உதவியாளர்களையும் தீண்டாமை ஒழிப்புப் பிராச்சாரம் செய்ய காமராஜர் அரசு நியமித்தது. இவர்கள் கிராம்ம் கிராம்மாகச்சென்று ஒதுக்கூட்டங்கள், நாடகங்கள், பஜனைகள்மூலம் தீண்டாமை ஒழிப்புப்பிரச்சாரம் நடத்தி வந்தனர். மக்கள் மனதில் தீண்டாமை ஒழிய வேண்டும் என்ற சிந்தனை வளரும்படி,தீண்டாமையால் ஏற்படும் கொடுமை களை விளக்கி மாநிலம்முழுவதும் சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவை வெளியிடப்பட்டு, நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது தவிர தீண்டாமை ஒழிப்பு இயக்கம் நடத்தி வந்த தன்னார்வத்தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. அரிசன சேவை சங்கம், சென்னை தாழ்த்தப்பட்ட வகுப்பினர் லீக், சத்குரு சமரச சங்கம் உள்ளிட்ட இத்தகைய தொண்டு நிறுவனங்கள் அரிசின் நிதி உதவி பெற்று தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம் மேற்கொள்ள காமராஜர் அரசு ஊக்குவித்தது.
தீண்டாமையைப் போக்கவும் தாழ்த்தப்பட்டவர்களையும் பிற வகுப்பினரையும் ஒன்றுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் எடுக்கப்பட்ட பல புதிய முயற்சிகளை காமராஜர் அரசு மேற்கொண்டது. 1956-ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுடன் மற்ற சாதி மாணவர்களும் அரிசன நலப் பள்ளிகளில் பகலுணவு சாப்பிட அனுமதிக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட மாணவர்களைத் தனியாக ஒதுக்கி வைத்தல் கூடாது என்ற கருத்தோடு, அரசு மான்யம் பெறும் அரிசன மாணவர் விடுதிகளில், 10 சதவிகிதம் இடத்தை பிற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டது. மேலும் அரசு நடத்தும் அரிசன மாணவர் விடுதிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 75 விழுக்காடு, பிற்பட்ட வகுப்பு மாணவர்கள் 15 விழுக்காடு, உயர்சாதி மாணவர்கள் 10 விழுக்காடு என்ற அளவில் மாணவர்கள் சேர்க்கை இருந்திட வேண்டுமென நடைமுறைபடுத்தப் பட்டது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று புது காலனிகள் கட்டும்போது அதில் 10 விழுக்காடு வீடுகளை அங்கு குடியிருக்க விரும்பும் மற்ற வகுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்ய அரசு உத்திரவிட்டிருந்தது.

பொது நிதியிலிருந்து வாங்கப்பட்டு பராமரிக்கப்படுகிற எல்லா காடுகளில்மு தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடம் அளிக்கப்பட வேண்டுமென்று அரசு கொள்கையாக மேற்கொண்டது. எந்த தனிப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எவரும் தங்களுக்கென்று மட்டுமே தனியாக சுடுகாடுகளை ஏற்படுத்திக் கொள்ள தனை விதிக்கபட்டது.

தீண்டாமை ஒழிப்பதில் சிறப்புறப் பணியாற்றிய சமுதாயத தலைவரகளுக்கும், கிராமத் தலைவர்களுக்கும் தங்கப் பதங்கங்கள் வழங்கப்பட்டன. முதல் வகுப்பு தங்கப் பதக்கம், இரண்டாம் வகுப்பு தங்கப்பதக்கங்கள் வழங்கப்பபட்டன. குடிநீர்க் கிணறுகளை தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்திக் திறந்துவிடுவது, உணவகங்களில் தாராளமாக செல்ல வசதி செய்து கொடுப்பது, உயர்சாதியைச்சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட இனதவருடன் மணம் முடிக்க ஏற்பாடு செய்தவர்களுக்கு முதல் வகுப்பு தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஆலய நுழைவு தாழ்த்தப்பட்டவர்கள் காலனிகளில் சமூகப் பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகளுக்கு இரண்டாம் வகுப்பு தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது.

‘சேரி’ என்ற சொல் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ‘காலனி’ அல்லது விடுதி என்ற் சொற்கள்தான பயன்படுத்தப்ட வேண்டுமென அரசு ஆணையிட்டது.

பின்தங்கியவர்கள் இட ஒதுக்கீடு

அரசு நிதி உதவி பெறும் எல்லாக் கல்வி நிலையங்களும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 16 விழுக்காடும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25 விழுக்காடும் இடம் ஒதுக்க வேண்டுமென அரசு ஆணை பிறப்பித்தது

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மாணவர் விடுதிகளில் தங்கவும், உணவு உண்ணவும் ஆகும் செலவை அரசே ஏற்றுக் கொள்வதைப்போல, பின்தங்கிய வகுப்பினர் என்று கருதப்பட்ட, சலவைத் தொழிலாளர்களுக்கும் மருத்துவ குலத்தை சேர்ந்தவர்களுக்கும் அதே சலுகைகளை அரசு அறிவித்தது. பின்தங்கிய வகுப்பினர்களில் ஒடுக்கப்பட்ட நிலையிலுள்ள சில இனத்தவர்களை, மிகவும் பிற்பட்ட வகுப்பினர்களாக அறிவித்து, அவர்களுக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்குக் கிடைக்கும் அதே கல்விச் சலுகைகளை அளித்து 1957-58 ஆம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆலயப் பிரவேசமும் அறநிலையத்துறை அமைச்சராக தாழ்த்தப்பட்டவரும்

தாழ்த்தப்பட்டவர்களைத்தீண்டாதவர்ளாக்க்கருதி, ஆலயங்களில் நுழைவதையே அனுமதிக்காத காலத்தில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டவர்களும் நாடார்களும் நுழையக் கூடாதென்று சட்டம் இருந்தது. சட்டம் மட்டுமல்ல, சமுதாயத்தின் மேல்தட்டு மக்களிடத்திலும், தாழ்த்தப்பட்டவர்களையும், நாடார்களையும் கோயிலில் அனுமதிப்பை விரும்பாத எண்ணம்தான் தழைத்தோங்கி இருந்தது. இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கும், மக்களின் மனங்களை தூய்மைப்படுத்தவும் மதுரை ஏ. வைத்தியநாத அய்யர் தலைமையில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள், நாடார்கள் என அனைவரும் கோயிலில் நுழைவதற்கு வழிவகை காணும் சட்டம் இயற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இச்சட்டம் வருவது காலதாமதமாகிக் கொண்டே இருந்த நிலையில், 1939-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் நாள் தாழ்த்தப்பட்டவர்களும், நாடார்களும் கோயிலில் நுழையும் போராட்டம் செய்வார்கள் என்று மதுரை வைத்திய நாத அய்யர் அறிவித்தார்.

ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு எதிர்ப்பான சிலர், மதுரை மீனாட்சி கோயிலுக்கு நுழைந்தால் மதுரையில் இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஒரு பதில் அறிக்கை வெளியிட்டு நாங்கள் அரிஊன ஆலயப் பிரவேசத்தை ஆதரிக்கிறோம். நாங்களும் உடன் வருவோம் வேண்டுமானால் தடுத்துப் பாருங்கள் என்று ஆதரவுக்கரம் நீட்டினார். கூறியபடியே, குறிப்பிட்ட நாளில் அம்மன் சன்னதி வாசல் முற் தன் ஆட்களையும் ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு ஆதரவாக அனுப்பியும் வைத்தார். வைத்திய நாதர் தலைமையில் ஆலய நுழைவுப் போராட்டக்குழு வந்தபோது, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஆட்கள்மட்டுமே அங்கிருந்தனர். எதிர்ப்பாளர்கள் யாரும் இல்லை. அந்த ஆலய நுழைவுப் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த பல தாழ்த்தப்பட்டவர்களில் ஒருவராக சமுதாயப் பணியிலும், தேசப்பணியலும் தீவிரமாக ஈடுபட்ட, 1951-ல் காமராஜர் அமைச்சரவையில் இருந்த க்க்கனும் கலந்து கொண்டார். ஆலய நுழைவுப் போராட்டமும் வெற்றிகரமாக நடைபெற்றது.

அதன் பின்னர், தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயங்களில் நுழைவதற்கு வழி செய்திடும்சட்டத்தை அன்றைய ராஜாஜி அரசு வெளியிட்டது. கோயில் நுழைவுச்சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னரும், தாழ்த்தப்பட்டவர்கள் முழுமையாக்க்கோயிலில் அனுமதிக்கப்படாத்து சில ஆலயங்களில் தொடர்ந்து நடைபெற்றுத்தான் வந்தது.

இந்நிலையில், 1954-ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப்பொறுப்பேற்ற காமராஜர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை பரமேஸ்வரனை நியமித்தார். ஆலயங்களின் நுழைவிற்கே அல்ல்ல்பட்டு அஞ்சிய மக்களின் தாழ்வு நிலைக்கு விடை கொடுக்கவும், மக்கள் அனைவரும் சம்ம் என்பதை உறுதிப் படுத்தும் வகையிலும் பரமேஸ்வரனுக்கு அளிக்கப்பட்ட இந்து அறநிலையத்துறையின் பொறுப்பின் மூலம் எடுத்துரைத்தார்.

இதன் வழியாக சமூக நீதிக்கான தனது உணர்வுகளைத் தேவையான நேரத்தில் செயலில் வெளிக்காட்டிய உத்தமர் தான் காமராஜர்.

மேடையில் சமூக நீதியை முழங்கிவிட்டு திரைமறைவில் தமது சாதியை வளர்த்துக்கொள்ள விரும்புவோரையே இன்று காண முடிகிறது. “கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி நாட்டத்திற் கொள்ளாரடி -கிளியே” நாளில் மறப்பாரடி” என்று பாரதியார் பழித்துரைத்த வாய்ச்சொல் வீர்ர்கள் பேசும் சமூக நீதி போலியானது. காமராஜர் சமூக நீதியைத் தமது உயிர் மூச்சான கொள்கையாகவே கருதிக் கடையனுக்கும் கடைத்தேற்றம் கிடைத்திட உழைத்தார். இதனை வரலாறு என்றென்றும் எடுத்துரைக்கும்.