மாணவர்களுக்கு அறிவுரை

மாணவர்களுக்கு நான் ஏதாவது அறிவுரை சொல்ல வேண்டும் என்று கேட்கிறார்கள். நான் மெத்தப்படித்தவனோ அறிவாளியோ அல்ல. அதனால் நானாக எந்த அறிவுரையும் கூறமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் ஒன்றும் மட்டும் சொல்வேன். மகாத்மா காந்திஜியின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு மாணவரும் திரும்பத்திரும்ப படிக்க வேண்டும். ஒவ்வொருமுறை படிக்கும்போதும் ஒவ்வொரு விதமான புத்திமதி கிடைக்கும்.

எதையுமே காந்தி அடிமைப்பட்டு கிடந்த நமது தேசத்துக்கு சுதந்திரத்தை வாங்கிக்கொடுத்தார். இவ்வாறு தாம் சுதந்திரம் வாங்கிகொடுத்த சாதனைக்காக நமது தேசத்திடம் மக்களிடம் கைமாறு எதிர்பார்த்தாரா? இல்லை.

அவர் நினைத்திருந்தா சுதந்திர பாரத்த்தில் பெரிய பதவிகளை வகித்திர முடியும் அதை அவர் விரும்பவில்லை.

அவ்வளவு ஏன்? சுதந்திர பாரத்த்தில் அவர் உயிர் வாழ்த்துகூட சுகம் பாரத்த்தில் அவர் உயிர் வாழ்ந்து கூட சுகம் அனுபவிக்க நினைக்கவில்லை.

பாராட்ட வேண்டாம்- பின்பற்ற வேண்டாம்

மகாத்மா காந்தி பிறந்த நாள் திருவிழாவில் மகாத்மா காந்தியின் சேவைகளைப் பற்றிப் பலர் பாராட்டிப் பேசினார்கள். மகாத்மா காந்தியின் சேவைகளைப் பாராட்ட வேண்டியதுதான். புகழ வேண்டியதுத்தான். ஆனால் வற்றை யெல்லாம் விட முக்கியமான கடமை மகாத்மா காண்பித்த வழியில் நம்மை நாமே கொண்டு செலுத்துவதுதான். நமது சுதந்திர பூமிக்கு நாம் ஆற்றக்கூடிய கடமை ஏதாவது இருக்கிறது என்றால் மகாத்மா காந்தியையம், அவருடைய பொன்மொழிகளையும், அவருடைய வழிகாட்டுதலையும் மறக்காமல் இருப்பதுதான்.

பகட்டு வேண்டாம்- பண்பு வேண்டும்.

இந்தக் காலத்தில் கொஞ்சம் படித்துவிட்டாலும் சிலர் பகட்டாக – படோடோபமாக இருப்பதுதான் படிப்புக்கு அழகு என்று நினைப்பதாகத் தோன்றுகிறது.

மகாத்மா காந்தி படிக்காத படிப்பா? அவர் எப்படி வாழ்த்தார்? ஒரு ஏழை விவசாயி போல உடம்பிலே சட்டைடகூடப் போட்டுக்கொள்ளாமல் தமது வாழ்நாள் முழுவதையும் கழித்தார். அந்த அவருடைய எளிய தோற்றம் தான் பாமர ஏழை மக்களுக்கு அவர்மீது ஆழ்ந்த நம்பிக்கையைத் தோற்றுவித்தது.

காந்திஜியின் பேச்சு

மகாத்மா காந்திஜியின் பேச்சு எல்லோராலும் விளங்கிக் கொள்ள முடிவதாக இருந்தது. அவருடைய பேச்சை இந்தி மொழி தெரிந்த ஒரு படிக்காத விவசாயி கூட முழு அளவுக்கு அர்த்தத்தோடு தெரிந்து கொண்டான். மகாத்மாவின் பேச்சை யார்வேண்டுமானாலும் வேறு மொழியில் மொழி பெயர்த்துக் கூறிவிடலாம். அவ்வளவு எளிய மொழியாக அது இருந்தது இந்தி அலது ஆங்கில மொழி தெரியதவர்கள் கூட அவர முகபாவத்தை வைத்து அவர் பேசும் மொழியைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவ்வளவு எளிய மொழியில் – சாமானிய மொழியில் – பாமர மக்களின் மொழியில் அவர் பேசி வந்தார்.

என்ன மொழியில் பேசினேன்?

காந்திஜியை சந்திக்கும்போதெல்லாம் நான் அவருடன் என்ன மொழியில் பேசினேன் என்று பலர் கேட்பதுண்டு.

மகாத்மாவுடன் பேசுவதற்கு மொழி தெரிந்தாக வேண்டும் என்று அவசியமில்லை. அவர் பேசுவதை நம்மால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

கடவுளும் காந்திஜியும்
கடவுளை மனத்தில் நினைத்துக் கொண்டு எந்தச் செயலைச் செய்தாலும் அது இடையூறு இன்றி நிறைவேறிவிடும் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அதைப் பற்றி எனக்குச் சரியாகத் தெரியாது. ஆனால் அரசியலில் காந்திஜியை மனத்திலே நினைத்துக் கொண்டே செயற்பட்டால் அதன் விளைவுகள் சரியாகவும் ஒழுங்காவும் இருக்கும் என்பதை அனுபவபூர்வமாக நான் உணர்ந்ததுண்டு.

கலையும் சோறும்

ஒரு நாட்டில் கலையும், இலக்கியமும் அதிகமாக வளர்ந்தால் தான் அங்கே முன்னேற்றம் நிலவும் என்று சிலர் சொல்லுகிறார்கள். அதனை இல்லை என்று நான் கூறவில்லை. ஆனால் நமது நாட்டின் கதையே வேறு என்றுதான் கூறுகிறேன். நமதுநாட்டில் லட்சக்கணக்கான மக்களுக்கு இன்னும் வயிறார சோறு கிடைக்கவில்லை. வயிறு நிறைய எல்லோருக்கும் சோறு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வது தான் ஓர் அரசாட்சியின் முக்கியமான கடமை என்று எனக்குத் தோன்றுகிறது.

பண்பும் ஒழுக்கமும்

ஏழை மக்களிடம் பண்பும் ஒழுக்கமும் சரியாக இல்லை என்று சிலர் பேசுகிறார்கள். அந்த மக்களுக்கு வயிறு நிறைய சோறு கிடைக்க வழி செய்து விட்டு அதற்குப் பிறகுதான் அவர்களிடம் பண்பும் ஒழுக்கமும் அமைகிறதா என்று கவனிக்க வேண்டும். லட்சக்கணக்கான மக்கள் பட்டினியாக்க்கிடக்கும்போது அவர்களிடம் உயர்ந்த் குணங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?

உழைப்பாளிக்கு வேலை

நமது நாட்டில் ஏராளமான ஏழை மக்கள் உழைக்கத் தயாராக இருக்கிறார்கள். கண்ணியமான எந்த வேலையைக் கொடுத்தாலும் அவர்கள் கடுமையாக உழைக்கத் தயாராக இருக்கிறார்கள். என்றாலும் வேலை கிடைக்கவில்லை என்பதற்காக அவர்கள் ஒரு வித கூக்குரலும் போடுவதில்லை. ஆனால் உழைக்கத் தயாராக இல்லாதவர்கள் தான் அதிகமாக வேலையில்லாத் திண்டாடம் பற்றி கூச்சல் போடுகிறார்கள். உழைக்கத் தயாராக இருப்பவர்களுக்கு ஏதாவது வேலை கொடுத்து அவர்கள் நிம்மதியாக வாழ வழி செய்தாக வேண்டும்.

கற்றுக்கொள்ளவேண்டும்

கஷ்டப்படுகிற ஏழை ஜனங்கள் தாங்கள் படுகிற கஷ்டங்கள் பற்றி அரசாங்கத்துக்கு நேரடியாகத் தெரிவிக்க ஏதாவது வழிமுறைகளைக் கையாள வேண்டும். அரசாங்கத்திலிருப்பவர்களும் கஷ்டப்படுகிற ஜனங்களின் குறைகளை வலியச்சென்று தெரிந்து கொண்டு அவைகளை நீக்க முயலவேண்டும். இந்த மாதிரியான ஏழை ஜனங்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையே நெருக்கமான தொடர்பு இல்லாத காரணத்தால் தான் சந்தர்ப்ப வாதிகளின் பொய்ப்பிரசாரங்களுக்கு ஏழை மக்கள் இரையாகி அனாவசியமான கிளர்ச்சிகளில் ஈடுபடும் நிலை உருவாகி விடுகிறது.

சாதி, மத சச்சரவு!

சாதியின் பெயராலும் மத்ததின் பெயராலும் சில சமயம் சச்சரவுகள நிகழ்வைத்ப் பார்க்கிறேன். இந்த மாதிரி சச்சரவில் ஈடுபடுவோர் சுதந்திரப் போராட்டைத் பற்றி நினைத்துப் பார்க்கவேண்டும். சாதி, மதங்களின் பெயரால் சகோதர்ர்களான நமக்குள்ளே சண்டை போட்டுக் கொண்டிருந்ததனால் தேசம் வெள்ளைக்கார்ர்களுக்கு அடிமையானது. மகாத்மா காந்தி சாதி, மத வேறுபாடுகளை அகற்றி எல்லோருமே இந்திய மக்கள் என்ற உணர்வை உண்டாக்கியதால் தான் தேசம் சுதந்திரம் பெற்றது. மறுபடியும் நமக்குள்ளே சண்டை சச்சரவுகளை உண்டாக்கிக் கொண்டோமானால் நமக்கு கிடைத்த சுதந்திரமும் பறிபோய்விடும்.

ஏரிநீரும் குவியும் செல்வமும்

ஏரியில் ஏராளமான நீரை மழைக்காலத்தில் சேர்த்து வைக்கிறோம். மழை பெய்யாத விவசாயம் செய்கிறோம். இவ்வாறு செய்யாமல் தேக்கி வைத்த நிரைப் பயன்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டால், என்ன ஆகும்? நீர் பாசிபிடித்து நாற்றமெடுத்து, அழுகி சாதாரண ஆடுமாடுகள் குடிக்கக்கூட லாயக்கற்றதாக ஆகிவிடும் இதுபோல பெரும் செல்வத்தைச் சேர்த்து வைப்பவர்களை தங்கள் செல்வத்தின் ஒரு பகுதியை ஏழை மக்கள் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்த வேண்டும். தனக்கும் பிரயோசன்புடாமல், பிறருக்கும் உதவாமல் செல்வம் குவிந்து கிடக்கும்போது நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது.ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு அந்தச் செல்வமும் மதிப்பிழந்து விடுகிறது.

வரி போடுவதன் நோக்கம்.

அரசாங்கம் வரி போடுகிறதே என்று வசதி படைத்தவர்கள் பலர் குரல் எழுப்புகிறார்கள்.

வரிவிதிப்பு என்பது நீர்த்தேக்கத்திலிருந்து நீரைப் பாசன வயல்களுக்குக் கொண்டு செல்ல வாய்க்கால் அமைப்பது போன்றதாகும்.

வசதி படைத்தவர்களுக்கு வரி விதிப்பது என்பது நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வயல்களுக்குச் சென்று பாய்வதுபோல எல்லாப் பொதுமக்களுக்கும் பொதுவான நன்மை கிடைபதற்குத்தான்.

ஏழைவீட்டுப் பிள்ளையும் பணக்கார வீட்டுப்பிள்ளையும்

ஏழைவீட்டுப்பிள்ளைகள் முட்டாள்களாக இருக்கிறார்கள். பணக்கார வீட்டுப்பிள்ளைகளை புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.

மூளையை கடவுள் எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் அமைத்திருக்கிறார். ஏழைக்கு ஒரு மூளை- பணக்காரர்களுக்கு வேறு மூளை என்று அமைக்கவில்லை.

விஷயம் இதுதான். ஏழைகளை வீட்டுப்பிள்ளைகளுக்கு வயிற்றுப் பாட்டை நிரப்புவதே கஷ்டமாக இருக்கிறது. வேளா வேளைக்கு சோறுகிடைக்கும் என்று நிச்சயமில்லை. சின்ன வயதிலேயே இவர்கள் ஏதாவது வேலைசெய்து வருமானம் தேட வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில் அவர்கள் படிப்பைப் பற்றி சிந்திக்க எங்கே நேரம் இருக்கிறது?

ஏழைப் பிள்ளைகளுக்கும் வேளா வேளைக்கு சோறு போட்டு ஒழுங்காகப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினால் அவர்களுந்தான் படித்துப் பெரிய அறிவாளியாக ஆவார்கள்.

அரசாங்கம் நன்மை செய்யவில்லை.

அரசாங்கம் அப்படியொன்றும் நன்மை செய்யவில்லை என்று சிலரிடமிருந்து கூச்சல் எழுவதை நான் கவனிக்கிறேன். நிச்சயமாக ஒருவேளை சோற்றுகு வழியில்லாமல் கஷ்டப்படுவோர் வட்டாரத்திலிருந்து இந்த மாதிரி கூச்சல் எழுந்தால் அதனை என்னால் விளங்கிக்கொள்ள முடியும். அரசாங்கம் கொடுக்கும் சலுகைகளையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு நல்ல லாபமடைந்து வசதி வாய்ப்புடன் வாழ்பவர்களிடமிருந்து இந்த மாதிரி கூக்குரல் எழுவதுதான் எனக்கு விளங்கவில்லை. இது ஓர் அதிசயந்தான்.

பள்ளிகளும் பயன்களும்

கிராம்ப்புறங்களில் ஏராளமான பள்ளிகளை மிகவும் சிரம்ப்பட்டு அமைக்கிறோம். ஆனால் அமைக்கப்பட்ட பள்ளிகளுக்கு மாணவர்கள் வரமாட்டேன் என்கிறார்கள் என்பதாக குறைசொல்லுகிறார்கள்.

பள்ளிக்குப்பிள்ளைகள் வரவில்லை. என்பதை வைத்து அவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் இல்லை என்று எண்ணிவிடக்கூடாது. வீட்டில் வேளாவேளைக்குச் சாப்பிட சோறு இல்லை. சாப்பாட்டுக்காகச் சின்ன வயிதிலேயே வேலை செய்ய வண்டியிருக்கிறது. அவர்களுக்குப்பள்ளிக்கூடம் வர எங்கே நேரமிருக்கிறது.?

அதனால்தான் பள்ளிகளிலேயே மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த வசதியை கிராமத்து மக்கள் தக்கவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு படிக்க அனுப்பத் தறக் கூடாது. சின்னப்பிள்ளைகளை வேலைக்கு அனுப்பக்கடாது. குழந்தைப் பருவம் என்பது படிப்பதற்கான ஒரு பருவமே தவர வேலை செய்வதற்கான பருவம் அல்ல.

கல்வியும் செல்வமும்

குழந்தைகளுக்கு ஏதாவது செல்வம் சொத்துக்கள் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகிறார்கள்.

இது நியாயமான ஆசைதான். ஆனால் கிராம்ப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பணம் காசு சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படக்கூடாது. பணம் காசு, ஒரு குறிப்பிட்ட காலதில் செலவாகிவிடக்கூடும். தங்கள் மக்களுக்குக் கல்வி என்ற செல்வத்தைத்தான் சேர்த்து வைக்க முயல வேண்டும். பெற்றோர் மிகவும் சிரம்ப்பட்டு தங்கள் மக்களை நன்றாகப்படிக்க வைத்துவிட்டால் எதிர்காலத்தில் அவர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்வார்கள்.
வெறும்பணத்தை சேர்த்து வைத்து கல்வியறிவை அளிக்காவிட்டால் நீங்கள் சேர்த்து வைத்த பணத்தைத்தவறான வழிகளில் செலவிட்டு விட்டு பிற்காலத்தில் திண்டாடிக்கொண்டிருப்பார்கள்.

கல்விக்கு அதிக வசதி

ஏழை மக்களின் குழந்தைகள் ஒரு சங்கடமும் இல்லாமல் கல்விப்பயிற்சி பெறுவதற்கு அரசாங்கம் எல்லா வசதிகளையும் செய்தளித்திருக்கிறது. ஒரு காசு கூட செலவிடாமல் உயர்கல்வி வரைகூடப் பெறமுடியும். இந்த உண்மை பல கிராமத்துப் பெற்றோர்களுக்குச் சரியாகத் தெரியாது. இதனால் குழந்தையைப் படிக்க வைக்கவில்லையா என்று யாராவது கேட்டல் என்னால் எபடிப்ப பிள்ளையைய்ப படிக்க வைக்கமுடியும்? எனக்கு வசதியேது? பணம் ஏது? என்று கூறுகிறார்கள். இத்தகைய பெற்றோருக்க்உ உண்மை நிலையைச் சரியாக எடுத்துக்கூறி விளக்க வேண்டியது அரசாங்க அதிகாரிகளின் கடமையாகும்..

கடவுள் நம்பிக்கை

ஜனங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டியது முக்கியம்தான். அது கூடாது என்று நான் கூறவில்லை. ஆனல் உழைக்காமல் கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால் கடவுள் சோறுபோட்டு விடுவாரா? ஏழைகளுக்குஉழைப்புதான் தெய்வம். எந்த அளவுக்கு நாம் வயிறார உண்ணமுடியும். நல்ல துணிமணிகள் உடுத்த முடியும். குழந்தைகளுக்கு அணிமணிகளை வாங்கிக் கொடுக்க முடியும். சந்தோஷமாக நிம்மதியாக வாழ முடியும்.

ஒற்றுமையாக இருக்க முடியாதா?

சுதந்திரப் போராட்ட காலத்தில் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் ரே குரலில் பேசியதால் தான் மிகுந்து பலசாலியான வெள்ளைக்கார அரசாங்கத்தை நம்மால் விரட்டியடிக்க முடிந்தது. சுதந்திரப் போராட்டத்தின்போது நம்மால் ஒற்றுமையாக இருக்க முடிந்திருக்கின்றபோது சுதந்திர பாரத்த்திலும் ஏன் நம்மால் ஒற்றமையாக இருக்க முடியாது?

ஜனநாயம் என்றால் என்ன?

ஜனநாயகம் என்றால் ஜனங்கள் தங்கள் இஷ்டம்போல் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்று அர்த்திமில்லை. ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு நாகரிகமாக தங்கள் கருத்துக்களை வெளியிடுவதும் செயற்படுவதும்தான் ஜனநாயகம். நான் எது வேண்டுமானாலும் செய்வேன். நீ கேட்க்க் கூடாது. இதுதான் ஜனநாயகம் என்று ஒருவன் சொன்னால் அவன்தான் ஜனநாயகத்தின் விரோதி.

எல்லோருக்கும் வாழ்வு வேண்டும்

அரசாங்கத்திடம் போராட்டம் நடத்தும் சிலர் எங்களுக்கு மட்டும் உயர்வும் வாழ்வும் தரவேண்டும் என்று கேட்கிறார்கள். மக்கள் எல்லோரும் சுகமாக வாழ வேண்டும். என்று யாரும் கேட்கக்காணோம். இது தவறு. மக்களில் சிலர் வாட்டமுற்று கிடக்க சிலர் மட்டும் சுகபோக வாழ்வு நடத்தினால் சமுதாயத்தில் குழப்பம்தான் ஏற்படும்.

ஊருக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயியைப் பற்றி அதிகமாகப் பேசுவோர் யாரும் இல்லை. விவசாயியின் நலன்குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. ஒரு வேளை சோறு கிடைக்காவிட்டால் மனிதன் என்ன பாடுபட வேண்டியிருக்கிறது! ஊதிய உயர்வு, உரிமைகள் தேவை என்றெல்லாம் கிளர்ச்சி செய்பவர்களின் கோரிக்கைகளில் நியாயமிருக்கத்தான் செய்கிறது. ஆனால் விவசாயிகள் முன்னேற்றம் குறித்தும் நாம் கவலைப்பட வேண்டும் என்ற எண்ணம வர வேண்டும்.

கிராமங்கள் முன்னேற வேண்டும்

நகரங்களில் தொழிற்சாலைகளும், வியாபார நிலையங்களும் அரசாங்க அலுவலகங்களும் சினிமா கொட்டகைகளும் அமைந்துவிடுவது தேச முன்னேற்றமாகி விடாது. கிராமங்கள் முன்னேறியாக வேண்டும். கிராமத்து குடியானவர்கள் முன்னேறியக வேண்டும். கிராமங்களின் அபிவிருத்தியை ஒட்டித் தான் நமது தேசத்தின் முன்னேற்றம் சாத்தியமாகும்.

விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு என்பது ஒருதேசத்தின்பொருளாதார முன்னேற்றத்தின் அறிகுறி என்பது சரிதான். ஆனால் வியாபராம் செய்யும் சகோதர்ர்கள் திட்டமிட்டு செயற்கையாக விலைகள் உயர்த்துவதை அனுமதிக்க முடியாது. அதிக லாபம் கிடைக்கவில்லை என்று வியாபாரிகள் விலைகளை உயர்த்தினால் சாமானிய மக்கள் எவ்வளவு தூர்ம் நஷ்டம்மு கஷ்டம்மு பட வேண்டியிருக்கும் என்பது குறித்து யோசித்துப் பார்க்கவேண்டாமா?

வேலை கிடைக்கவில்லையா?

வேலை கிடைக்கவில்லை என்று படித்தவர்கள் கூறுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உழைப்பை அடிப்படையாக்க் கொண்ட கிராமத்து மனிதர்கள் வட்டாரத்தலிருந்துகூட வேலை கிடைக்கவில்லை என்ற பேச்சு இப்பொழுதெல்லாம் எழத் தொடங்குகிறது. வேலை ஓரேயடியாக்க் கிடைக்கவில்லை என்பது சரியல்ல. அதிகம் உடலுழைப்பில்லாத மெலுக்கான வேலை கிடைக்கவில்லை என்று சொன்னால் ஒருவேளை அது சரியாக இருக்கும்.

கதர் – கிராமக் கைத்தொழில்

நூல் நூற்ப்பது, சாமானி கிராமக் கைத்தொழில்களைச் செய்வதன்மூலம் ஒரு குடும்பம் பிழைக்க முடியும். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால் நான்கு பேரும் சோம்பல் இல்லாமல் நாள் முழுவதும் ராட்டை மூலம் நூல் நூற்றால் அவர்கள் வயிற்றுப் பாட்டுக்க வருமானம் கிடைத்துவிடும். நூல் நூற்கும் அளவுக்கு நான் கேவலமாகிவிட்டேனா என்று கேட்பதனால் தான் பிரச்சினையே உருவாகிறது.

குழந்தைகள் உருப்பட

குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் கல்வி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்வது மட்டும் போதாது. அவர்களுக்கு உழைக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும். படித்து விட்டாலே உடல்உழைப்பு தேவையில்லை. என்ற ஒரு தப்பான மனோபாவம் நமது இளைஞர்களிடம் பரவியிருக்கிறது. இது சரியல்ல. நாம்பெறுகின்ற கல்வியாவது நமது உழைப்பினைச் செம்மைப்படுத்துவதற்கு உதவுவதாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் கடமை

பெரிய படிப்பு படித்து கல்லூரிகளிலிருந்து வெளிவரும் மாணவர்கள் தங்கள் பொறுப்பில் ஓர் ஐந்து கல்வியறிவு இல்லாத முதியவர்களுக்காவது கல்வி கற்றுத்தர வேண்டும் என்ற ஒரு கடமையினை மேற்கொள்ள வேண்டும். வேலை கிடைக்காத பட்டதாரி மாணவர்கள் முதியோர் கல்வியையே ஒரு முழு நேர வேலையாக மேற்கொள்ள முனைந்தால் அரசாங்கம் கூட நிச்சயமாக உதவும்.

நேரு காண்பித்த பாதை.

நேருஜி நமது தேசம் மற்ற உலக தேசங்களுக்கு சம்மாக முன்னேறுவதற்கு பல திட்டங்கள்தீட்டி செயற்பட்டிருக்கிறார்.இருந்தும் சுதந்திரம் பெற்று இத்தனைக்காலம் ஆகியும் நாட்டில் சுபீட்சம் நிலவவில்லையே என்று சிலர் கேட்கிறார்கள்.

தேசம் கொஞ்சங் கொஞ்சமாக சுபீட் நிலையை நோக்கி முன்னேறித்தான் வருகிறது. நாம் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை நம்மாலேயே புரிந்துகொள்ள முடிவதில்லை. எப்போதுபார்த்தாலும் அதிருப்தி பட்டுக்கொண்டும் குறை கூறிக்கொண்டும் இருப்பதுதான் அரசியல் என்று நினைப்பதால் நம்மை நானே ஏமாற்றிக் கொள்கிறோம். மற்றபடி நேருஜி வகுத்தளித்த பாதையில் நாடு முன்னேறுக்கொண்டுதான் வருகிறது.

மாணவர்களும் அரசியலும்

மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா என்று கேட்கிறார்கள். என்னைக் கேட்டால் ஈடுபடலாம் என்று சொல்வேன். ஆனால் நான் சொல்லக்கூடிய அரசியல் வேறு. அரசியல் என்றால் கட்சி, சண்டை என்று ஏன் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்? அரசியல் என்றால் பொது நல சேவை என்று ஏன் நினைக்கக்கூடாது. மாணவர்கள் படித்த நேரம் போக தங்களால் இயன்ற அளவு அக்கம்பக்கத்து ஏழை எளிய ஜனங்களுக்கு உதவி செய்வதைக் கடமையாக்க் கொள்ள வேண்டும். மாணவர்கள் எதைச் செய்வதாக இருந்தாலும் அவர்களுடைய கல்விக்கு அது ஊறுவிளைவிப்பதாக இருக்கக் கூடாது.

அகிம்சை வழி

மகாத்மா காந்தி அடிக்கடி அகிம்சை என்று சொன்னார். அகிம்சை என்றால் ஏதோ புரிந்துகொள்ள முடியாத விஷயம் என்பது போல் எண்ணுகிறார்கள். எந்த விஷயத்தையும் சகிப்புத் தன்மையுடன் அணுக வேண்டும். மனத்தாலும் பிறருக்கு தீங்கு நினைக்கக் கூடாது. பிறர் நமக்கு இழைக்கும் தீங்குகளை மறந்து அவர்களுக்கு நன்மையே செய்தால் தீங்கு இழைத்தவர்களும் திருந்தி விடுவார்கள். நான் புரிந்து கொண்ட அகிம்சை இதுதான். ஆனால் அகிம்சையைப் பற்றி இதுதான் தீர்மானமான அர்த்தம் என்று எண்ணிவிடக்கூடாது.

நட்பை வளர்க்கவும்

இளைஞர்கள் பிறருடம நட்பை வளர்த்துக் கொள்வதை ஒரு லட்சிய நோக்காக்கொண்டு செயற்பட வேண்டும். ஒருவனை விரோதித்துக்கொள்வதை வட அவனுடன் நட்புடன் பழகுவது மிகவும் சுலபமான செயல். காந்திஜி நமக்கு எவ்வளவோ தொல்லை தொந்தரவுகளைச் செய்த வெள்ளையர்களை என்றுமே விரோதியாக பாவித்ததில்லை. அவர்களை எப்போதுமே நண்பர்களாகத்தான் கருதினார். அதனால்தான் பிரிட்டிஷ் ஆட்சியின்பிடிப்பிலிருந்து விலகிக்கொண்டு விட்ட பிறகும் பிரிட்டிஷ் ஆட்சி நமக்கு பலவித்த்தில் உதவியும் ஒத்துழைப்பும் தந்து கொண்டிருக்கிறது.

கிராமமும் நகரமும்

கிராமத்தில் வாழும் மக்கள் நகரங்களிங் நிலவும் பகட்டான வாழ்க்கை நிலையைப் பார்த்துவிட்டு அது தான் உயர்ந்த வாழ்க்கை என்று எண்ணி அதைக் காப்பியடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கிராமத்தின் வளங்களையெல்லாம் சுரண்டித்தான் நகரங்கள் மினுக்குகின்றன என்ற உண்மை கிராமத்து மக்களுக்கு தெரியாது. கிராம்ம் இல்லாவிட்டால் நகரங்களின் பகட்டே இல்லை. இதுதான் உண்மையான நிலை.

சோவியத் யூனியனில்.

அவரவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வேலையை அவரவர்கள், கவனத்துடனும் செய்துகொண்டிருப்பதை சோவியத் யூனியனில் கண்டேன். நமது மக்கள் கற்றக்கொள்ள வேண்டிய பண்புகளில் இதுவும் ஒன்று என்று எனக்குத் தோன்றுகிறது.

கட்சியும் ஆட்சியும்

எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சி ஆட்சி செய்த நன்மைகளை முதலில் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறகு குறை இருந்தால் கூற வேண்டும். ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் யார் என்று தனிப்பட்ட நபர்களைக் கவனிக்காகமல் அந்த அரசாங்கம் என்ன சாதித்திருக்கிறது என்பதைக் குறித்துத்தான் கணக்குப்போட வேண்டும்.

நமது வலிமை

பாகிஸ்தான் இரண்டு முறை நம்மீது படையெடுத்தபோது அவர்கள் முயற்சியை முறியடித்து நமது வல்லமையைக் காட்டினோம். சீனா படையெடுத்தப்போதும் நமது பலத்தை நிரூபித்தோம். நமக்கு வலிமை இருக்கிறது. என்பதற்காக நமது தேசம் எல்லோரிடமும் சண்டையிடும் என்று எண்ணக்கூடாது.

நம்முடம் வந்து மோதியவர்களே நமது நட்பினை நாடிப் பின்னால் வந்ததைப்பார்த்தோம். வலிமை வாய்ந்த நாடான சீனாவும் நம்முடன் நட்புறவுடன் வாழ விரும்புவதாக்க கூறுகிறது. இதற்குக் காரணம் நமக்கு யாரிடமும் பகைமை உணர்ச்சி இல்லை. இதுதான் மகாத்மா நமக்குக் கற்றுத்தந்த பாடம்.

சுயமுயற்சி தேவை

இளைஞர்கள், எல்லவாவற்றுக்கும் அரசாங்கத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது.

நமது தேசத்தில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் அரசாங்கம் தனித் தனித்தனியாக கவனித்து உபசரிக்கும் என்று இளைஞர்கள் எண்ணிவிடக்கூடாது. தங்களுக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஒவ்வொரு இளைஞரும் திட்டமிட்டு முயற்சிக்க வேண்டும். தங்கள் முனேற்றத்துக்கு ஆட்சியின் உதவியை இரண்டாம் பட்சமாகத்தான் எதிர்பார்க்கவேண்டும்.

காந்திஜி கற்றுக்கொடுத்தது.

மகாத்மா காந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார் என்ற ஒன்றை மட்டும் தான் நமது இளைஞர்கள் தெரிந்து வைத்திர்க்கிறார்கள். காந்திஜி வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்துக்கும் வழிகாட்டியிருக்கிறார் என்பது பலருக்கத் தெரியாது. அதனால்தான் இளைஞர்கள் மாணவர்கள் ஒரு தடவையாவது மகாத்மாகாந்தியின் சுயசரிதையைப் படிக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

பத்திரிக்கைகள் கடமை

சுதந்திரப்போராட்டம் நடந்த காலத்திலும் ஒரு சில பத்திரிகைகள் இருந்தன. ஆனால் இக்காலத்தில் இருப்பது போல் அவ்வளவு அதிகமான பத்திரிகைகள் இல்லை. இருந்தாலும் அந்த மிகவும் குறைவான அளவு பத்திரைகளை செய்த அடக்கமான சேஐயை இந்தக் காலப் பத்திரிகைகள் செய்கின்றன என்று கூறமுடியாது.

இன்றைய பத்திரிகைகளைக் குறை கூறுவதற்காக இதனைக் கூறவில்லை. இன்றைய சூழ்நிலை வேறு. அன்றைய சூழ்நிலை வேறு. இன்று வெறும் பொழுது போக்குக்காகவே பத்திரிகைகள் சில உள்ளன.

அந்தக் காலத்தில் ஏதாவது லட்சிய நோக்குடன் தான் செயல்பட்டன. இன்றும் பத்திரிகைகளால் எவ்வளவோ சாதிக்கமுடியும். பத்திரிக்கைகளை எந்த நோக்கத்துடன் வெளியிட்டாலும் ஓரளவுக்காவது மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை இருக்க வேண்டும். மிகவும் சிறந்த முறையில் தொண்டாற்றும் பல பத்திரிகைகள் இன்றும் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் இன்னும் பல பத்திரிகளும் இடம் பெற வேண்டும்.

பெரியோரைப் பின்பற்றுக

வாழ்க்கையில் அரிய சாதனைகள் செய்து உயர்ந்திருக்கும் யாராவது ஒரு தலைவர் மகான், விஞ்ஞானி போன்றவர்களை வழிகாட்டிகளாக்கொண்டு மாணவர்கள் தங்கள் அறிவை – லட்சியத்தை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுதுதான்ஒவ்வொரு இளைஞரும் ஏதாவது ஒரு வழியில் வாழ்க்கையில் துரிதமாக முன்னேற முடியும்.

நினைப்பதையே பேச வேண்டும்.

நாம் நினைப்பது ஒன்று பேசுவது ஒன்று என்று இருப்பது நம்மை என்றோ ஒருநாள் அபாயகரமான நிலைக்கு உள்ளாக்கிவிடும். நாம் மனதில் நினைப்பதையே வாய்விட்டுப் பேசும்போது நமக்குச் சிரம்மாக இருப்பதில்லை. ஆனால் நினைப்பது வேறு பேசுவது வேறு என்று பேசும்போது நமக்குச் சிரம்மாக இருக்கும்.

மந்திரிப் பதவியும் மக்களும்

மந்திரி பதவி போன்ற உயர் பதவியில் இருப்பவர்களைக் கண்டு சாமானிய மக்கள் மிரண்டு விலகிச் செல்ல நினைக்கிறார்கள்.

மந்திரிகள் போன்றவர்களை மக்களின் சேவகர்கள் தான் என்பதையும், அவர்கள் தாங்கள் செய்யும் பணி குறித்து பொது மக்களுக்கு விவரம் தெரிவிக்கக் கடமைப்பட்டவர்கள் என்பதையும் சாமானிய மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இளைஞர்களுக்கு அரசு உதவி

மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் உதவுவதற்கு அரசாங்கம் எவ்வளவோ திட்டங்களை வகுக்கிறது. செலவுக்கு பணத்தை ஒதுக்குகிறது. ஆனால் அந்தத் திட்டங்களும் பணமும் நியாயமான முறையில் செலவிடப்பட முடியாமல் போய்விடுகிறது. இதற்கு அரசாங்கத்தைக் குறை சொல்லிப் பயனில்லை. மாணவர்களும் இளைஞர்களும் முன் வந்து முயற்சியெடுத்து அரசாங்க உதவிகளைப் பயன்படுத்திக் கொள்வதில்லை. இந்தக் குறைபாட்டை இளைஞர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

உழைப்பும் பயனும்

உழைத்துப் பாடுபடுபவர்கள் தங்கள் உழைப்புக்கான பலனைப் பெற முடியாமல் போனால் அதற்கு யார் காரணமாக இருக்கிறார்களோ அரவ்களைச் சமூகத் துரோகிகள் என்று கருத வேண்டும்.

உழைப்பவர்கள் தங்கள் உரிமைகளையும் பயனையும் அடைய முடியாத நிலை ஓர் அரசின் நிர்மவாகத்தில் இருக்கிறது என்றால், அந்த அரசு சரியாக செயற்படவில்லை என்று கருதப்பட வேண்டும்.

சோம்பேறிப் பொழுதுபோக்கு

சோம்பேறித் தனமாகப் பொழுது போக்க யாருக்குமே உரிமை கிடையாது. முக்கியமாக இளைஞர்களுக்கு உரிமை கிடையாது.

சோம்பேறிகளாக தான் வாழ்வோம் என்று யாராவது சொன்னால் உங்களுக்குச் சோறு போட யாருக்கும் அக்கறை இருக்கவில்லை என்று திட்டவட்டமாக்க் கூறிவிட வேண்டும்.

சோம்பேறித் தனமாகப் பொழுது போக்குவதை ஒரு குற்றம் என்று அறிவித்து அதற்குத் தண்டனை கொடுப்பது கூட நியாயம் என்று எனக்குத் தோன்றுகிறது.

கலை, இலக்கியம்

கலைகள் குறித்தும் இலக்கியங்கள் குறித்தும் பலர் பேசுகிறார்கள். இவை பற்றி நுணுக்கமாக என்னால் பேசமுடியாது. ஆனால் சிலர், கலைகளும் இலக்கியமும் மக்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லாமல் வெறும் பொழுது போக்கிற்காக மட்டுந்தான் பயன்படுத்த முடியும் என்று பேசுவதை என்னால்புரிந்துக் கொள்ள முடியவில்லை.

மக்களுக்குப் பிரயோசனப்படாத ஒன்று உலகத்தில் இருந்து என்ன பயன்? கலைகளும் இலக்கியங்களும் மக்களுக்கு ஏதாவது ஒரு வித்த்தில் புத்தி சொல்ல்லுவனாக இருக்க வேண்டும். வழிகாட்டுவனவாக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.

சுயநலம் கூடாது.

நீங்கள் உங்கள் வாழ்க்கைக்காக என்று எந்தத் தொழிலைச் செய்தாலும், அல்லது எந்த்த் துறையில் ஈடுபட்டாலும் , சமுதாயத்தில் நான் மட்டும் தனியான மனிதர்கள் அல்ல என்பதை மறந்து விடக்கூடாது. எனக்காக மட்டுமே வேலை செய்கிறேன். – எனக்காக மட்டுமே சம்பாதிக்கிறேன் என்ற சுயநல நோகம் கூடாது.

நம்மால் முடிந்த அளவுக்குப் பிறருக்கு உதவு வேண்டும் என்ற மனிதாபிமான உணர்வு நமக்கு இல்லாவிட்டால் வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லாது போய்விடும். சமூக வாழ்க்கையில் சுய நலத்துக்கே இடமில்லை.

பிடிவாதம் கூடாது.

எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும் சரி, அல்லது பெரிய பிரச்சினையாக இருந்தாலும் சரி. தன்னுடைய கருத்தே முடிவான கருத்து என்று யாரும் பிடிவாதமாக இருக்கக்கூடாது. சகிப்புத் தன்மையும் விட்டுக்கொடுத்து விவாதிக்கும் பண்பும் அமைய வேண்டும்.

காந்தியிடம் அமைந்திருந்த மிகவும் உயர்ந்த குணங்களில் இம்மாதிரி விட்டுக்கொடுத்துவிவாதிக்கும் முறை குறிப்பிடத்தக்கதாகும். காந்திஜியிடம் பலர் பலவிதமான கருத்துக்கள் குறித்து விவாதிப்பதுண்டு. எல்லாவற்றையும் அவர் ஏற்றுக்கொள்கிறார் என்பதல்ல, ஏற்க முடியாதவற்றையும் மரியாதையுடன் தெரிவிப்பார். அளவற்ற சகிப்புத்தன்மை இருந்ததுதான் இதற்குக்காரணம்.