மக்களுக்கு முதல் மரியாதை செய்யுங்கள்

posted in: admire, lessons | 11

“எனக்கு மாலை கிடைக்குமா, மரியாதை கிடைக்குமா” என்று ஆண்டவன் வாழும் ஆலயத்திறகுச் சென்றால் கூட காத்துக்கிடக்கும் மக்கள் அதிகமாகி விட்டார்கள். அரசியல் பொதுக்கூட்டத்திற்கு வரும் அரசியல் தலைவர்கள் கூட எனக்கு ஆள் உயர மாலை வேண்டும் என்று அதிகாரம் செய்யும்நிலைதான் இன்றும் உள்ளது. மாலை வாங்க காசு கொடுத்து ஆட்களைத் தயார்படுத்தும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். காமராஜர் … Continued

காலம் தவறாமல் கடமை ஆற்றுங்கள்

posted in: admire, lessons | 2

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய முடியாமல் இருப்பவர்கள் பலர். பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி அரசியல் கூட்டங்களுக்குக் கூட சரியான நேரத்தில் வராத தலைவர்களும் உண்டு. கூட்டத்திற்கு தாமதமாக வந்தால்தான் பார்வையாளர்களின் கவனத்தையும் கவர்ந்து இழுக்க முடியும் என்ற எண்ணத்தோடு கூட்டத்திற்கு வருபவர்களும் உண்டு.

பொறுமையைக் கடைப்பிடியுங்கள்

posted in: admire, lessons | 4

இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் பலர் மக்களிடம் உங்களுக்கு நான் அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று சொல்லி தேவையில்லாத வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். தேவையான செயல்களைக்கூட செய்ய மறுக்கிறார்கள். அவசரப்பட்டு சில செயல்களைச்செய்து அவமானத்திலும் அமுங்கிப் போகிறார்கள். அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலங்களாக சில அரசியல் தலைவர்கள் இருப்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும்.

கல்விக்கண் கொடுத்தவர்

posted in: admire, Education | 22

ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர். “தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார். “எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்? உங்கள் ஊரில் … Continued

செருக்கற்ற சீலர்

posted in: admire, Simplicity | 7

நான், சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரான முதலாண்டு, புது தில்லியில் நடந்த கூட்டமொன்றிற்குச்சென்றேன். திரும்புகையில், விமான நிலையத்தில் பெருந்தலைவர் காமராசரைக் கண்டேன். இல்லை, எதோ சிந்தனையில்மூழ்கியிருந்த என்னை அவர் பார்த்துவிட்டார். பெரியவர்கள் சூழ வந்த அவர், என் முன்னே வந்து நின்று “எப்ப வந்தீங்க?” என்று கேட்டார். எழுந்து, வணங்கிவிட்டுப் பதில் கூறினேன். அவர் … Continued