புகழ் வேண்டாதவர்

posted in: admire, Simplicity | 1

நான் புது தில்லியில், இந்திய அரசின் கல்வி அமைச்சரகத்தில் இணைக்கல்வி ஆலோசகராக இருந்தேன். அப்போது வட இந்திய அதிகாரி ஒருவர் என் அலுவலக அறைக்கு வந்தார். ஆங்கில நாளிதழ் ஒன்றைக் கையில் கொண்டுவந்தார். அதில், எங்கோ ஒரு மூலையில் பொடி எழுத்தில் போடப்பட்டிருந்த செய்தியொன்றைக் காட்டினார். “இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

பார்புகழ் பெற்ற தலைவர்

posted in: admire, Leadership, lessons | 1

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு சேர்ந்த ஆண்டு எது? ஆயிரத்து தொள்ளாயிரத்து அய்ம்பத்தாறாம் ஆண்டு ஆகும். கன்னியாகுமரியில், ஏன்கனவே அய்ந்தாம் வகுப்பு வரை கட்டாய இலவசக்கல்விமுறை நடைமுறையில் இருந்தது. பள்ளிகளில் கஞ்சி கொடுக்கும் ஏற்பாடும் இருந்தது. அங்கே பல தொடக்கப் பள்ளிகள், அரசின் நிதி உதவியைப் பெறும் தனியார் பள்ளிகள்.

தெளிந்த காட்சியர்

posted in: admire, lessons | 2

அறுபத்து இரண்டாம் ஆண்டு, பெரியதொரு கருத்துப்போராட்டம் நடந்தது. சிற்றூர்ப் பள்ளிகளை நடத்தி வந்த மாவட்ட ஆட்சிக்குழுக்கள் எடுபட்டன. ஊராட்சி ஒன்றியங்களிடம் தொடக்கப் பள்ளிகள் ஒப்புவிக்கப்பட்டன. தொடக்கப்பள்ளிகளை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களை ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவர வேண்டுமென்பது, தில்லியிலிருந்து வந்த பரிந்துரை, மாநலக்கள் பலவும் உடனடியாக அதை ஏற்ற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின. சென்னை மாநிலம் அப்பரிந்துரையை … Continued

மாலை குவிந்தது

posted in: admire, Education | 2

சென்னை மாநிலக் கல்வித்துறை நூற்று இருபத்தேழு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதன் முதல் நூற்றாண்டு முடியும்போது, முதன் முதலாக, தமிழன் ஒருவனுக்கு – எனக்குப் பொதுக்கல்வி-இயக்குநர் பதவி கிட்டியது. பிறப்பால் தமிழனாக இருப்பதோடு, தமிழ் பேசும் தமிழனாகவும் இருப்பதால், என்னைப் பல ஊர்களுக்கும் அழைத்தனர்.

மற்றக் கட்சிகளையும் மதித்தவர்

posted in: admire, politics | 0

காமராசர் முதல் அமைச்சராக விளங்கிய காலம் தமிழ்நாட்டுக் கல்விக்குப் பொற்காலம். அக்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத பெரும் அளவு பல நிலைக்கல்லவியும் வளர்ந்தது. இருபால் ஆசிரியர்களும் ஆயிரம் ஆயிரம ஒளிகொள் வழிகளில் இறக்கை கட்டிப் பறந்தார்கள். ‘சாமி’ வந்தவர்களைப்போல ஆவேசத்தோடு கல்விப்பணி புரிந்தார்கள். பொதுமக்களும் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டுக் கல்வி தொண்டிற்குத் தாராளமாய் உதவினார்கள். … Continued