மற்றக் கட்சிகளையும் மதித்தவர்

posted in: admire, politics | 0

காமராசர் முதல் அமைச்சராக விளங்கிய காலம் தமிழ்நாட்டுக் கல்விக்குப் பொற்காலம். அக்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத பெரும் அளவு பல நிலைக்கல்லவியும் வளர்ந்தது. இருபால் ஆசிரியர்களும் ஆயிரம் ஆயிரம ஒளிகொள் வழிகளில் இறக்கை கட்டிப் பறந்தார்கள். ‘சாமி’ வந்தவர்களைப்போல ஆவேசத்தோடு கல்விப்பணி புரிந்தார்கள். பொதுமக்களும் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டுக் கல்வி தொண்டிற்குத் தாராளமாய் உதவினார்கள். அதற்கான காரணங்கள் சில, அவற்றுள் முதலானது, உயிர் நாடியானது, ஒன்று உண்டு. அது எது?

கல்விக் கொள்கைகளையும் கல்வித் திட்டங்களையும் கல்வி பற்றிய கருத்துகளையும் கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கையகளையும் கட்சி அரசியல் சிமிழுக்குள் அடைக்காத்தே.

கல்வி, சில நாள் பயிரன்று; பல நாள் பயிருமன்று. பல்லாண்டுப்பயிர். நல்ல கல்வி முயற்சிகள் பலன் அளிப்பது, பல்லாண்டுகளுக்குப் பிறகே. அரச மரத்தைச்சுற்றி வந்ததும் அடிவயிறை தடவுவோருக்கு, அங்கே இடம் இல்லை. தவறான கல்விப்போக்கால் ற்படும் கேடும் பலாண்டுகளுக்கத்த தடரும்ந எனவே, கல்வித் திட்டத்தை, முறையை வகுக்கும் உருமையை ஆளும் கட்சியின் தனியுரிமையாக ஆக்கிக்கொள்ளவில்லை, காமராசரின் நல்லாட்சி. மாறாக, கலவிக்கொள்களைகளைமுடிவு செய்யும்போது, கட்சி அரசியலை அப்பால் நிறுத்திவிட்டே, முடிவு செய்தது, அன்றைய ஆட்சி, பல பேர்களும் சேர்ந்து, சிந்தித்து, பேசி முடிவு செய்ய வேண்டும் என்று கருதியது தொலைநோக்குடைய அந்த ஆட்சி. எனவே, அனைத்துக் கட்சிகளும் கொண்ட கல்வி ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு பல முறை கூடி, ஆழமாக ஆலசி, முடிவுகளை எடுத்தது. அப்போதும் ‘கட்சித்தலைவர்கள் சொன்னால் சொன்னதுதான்’ என்று வாலறிவுக்கு உரிமை கொண்டாடவில்லை. கருத்துத் தொகுப்புகளை ஆசிரிய மையங்கள் அனைத்திற்கும் அனுப்பினோம். ஆசிரிய சமுதாயத்தின் பரவலான கருத்தை அறிந்த பின்னரே கடைசிமுடிவுகள் எடுக்கப்பட்டன. எல்லோரையும்கலந்து பனிவு எடுத்ததால், எல்லோர் ஆதரவும் ஈடுபாடும் எளிதில் கிடைத்தன. எனவே, இன்றுநினைக்க்கூட அஞ்சவேண்டிய அருஞ்செயல்களை, அன்று மாநிலம் முழுவதிலும், அரசியல் பொம்மலாட்டம் ஆட்டத் தெரியாத, என்னைப்போன்ற எளிய கலவித்தொண்டன்கூட எளிதாகச்செய்ய முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published.