பாராட்டை விரும்பாத பாமரர்

posted in: admire, lessons | 1

பாராட்டு என்பது வளர்பவர்களுக்கு ஊட்டச்சத்து போன்றது. ஆனாலும், பாராட்டில் மயங்குபவர்களுக்கு அப்பாராட்டே புகழ்க் கொல்லியாகிவிடும். பாராட்டை விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள் என்று நாம் படித்திருந்தாலும், பாராட்டை விரும்பாத பாமரர் ஒருவர் இருக்கிறார் என்பதை இப்போது படிக்கிறோம்.

மேடைகளில் தலைவரை வைத்துவிட்டுப் பேசும்போது யாரேனும் அதிகமாகப் புகழ ஆரம்பித்தால், உடனே அவர்களை உட்கார வைக்கும் உயர் பண்பு உடையவர் பெருந்தலைவர். தன்னை தன் முன்னாலே புகழும்போது அருவருப்படைந்தவர் அரும்பெரும் தலைவர் காமராஜர் அவர்கள்.
மரபுப்படியான பாராட்டையும் புகழையும் மாலை மரியாதையையும்கூட மறுத்தவர் பெருந்தலைவர். எளிமையாக வந்து எளிமையாக்க் கூடி எளிமையாகப் பேசி எளியவராகவே வாழ்ந்த தலைவர்தான் காமராஜர்.

பாராட்டைச் செவிமடுக்காது பாமரர்கள் பிரச்சனைக்களுக்கு செவிமடுகப்பார். ஆளுயரப் போஸ்டர், அலங்கார மேடை, வழியெல்லாம் வரவேற்க்க் கூட்டம், வளைவுகள், எயி நெடுகத் தொடரும் கார் ஊர்வலம் எதுவும் இல்லாமல் மக்கள் தொண்டையே மகத்தானத் தொண்தாக்க் கருதிய கர்மவீரர் இவர்.

‘நீங்கள்தான் உண்மையான மக்கள் தலைவர்’ என்று வினோபாவே காமராஜரைப் பாராட்டினார்.

ஏழைப் பங்காளர் என எல்லோரும் போற்றும் புகழுக்கு பாத்திரமானவர். தன்னைப் பாமரனிலும் மாமரனாய்ப் பாவித்தார்.

தூத்துக்குடி சட்டமன்ற இடைத் தேர்தலின் போது ஒரு கிராமத்திற்கு நண்பகல் போய்ச் சேர்ந்தார். மண்டையைப் பிளக்கும் வெயில்.

ஒரு குடிசையின் முன் திண்ணையில் அமர்ந்தவாறே ‘அம்மா காங்கிரஸ்க்கு ஓட்டுப் போடுங்க, நீச்சத்தண்ணி (நீராகாரம் ) இருந்தா தாம்மா” என்று ஏட்டு வாங்கிக் குடித்துவிட்டுத்தான் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

பாராட்டை விரும்பாத பாமரனாக அவர் இருந்தாலும், பத்திரிகையாளர்களால் பல வகைகளிலும் பாராட்டப்பட்டார்.

காமராஜர் முதலமைச்சரானதும், ‘ நாள் முழுக்க உழைக்கும் ஏழைகளை வேலைக்காரன், கூலிக்காரன் என்று குறை கூறுகிறார்கள். சுய உழைப்பே இல்லாது பிறர் உழைகெகால் வாழும் சோம்பேறிகளை மகராசன் என்கிறார்கள். நானோ ஏழைகளின் துயர் நீங்கவே முதலமைச்சராய் பதவி ஏற்றுள்ளேன். இல்லையேல் இப்பதவி எனக்குத் தேலை இல்லை” என்று பேசினார்.

அவரது பேச்சும் செயலும் தன்னை எளியவராகவும் எளியவரின் தொண்டராகவும் எடுத்துக்காட்டின. எந்தக் கொள்கையானாலும் திட்டமாமாலும் அதுபற்றி ஆலோசிக்கும் போது, அத்திட்டத்தால் ஏழைகளுக்கு நன்மை வருமா? என்பது பற்றியே சிந்திப்பார்.

1956-இல் தமிழகத்தோடு இணைந்த கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக்கூட மாற்றங்கள் பற்றி பேச சென்றிருந்த திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்களிடம் திருவிதாங்கூர் மன்னர், ‘உங்கள் முதல்வர் ஏழைகளிடம் எல்லையற்ற அன்பு கொண்டவர் எந்நேரமும் ஏழைகள் முன்னேற்றம் பற்றியே சிந்திப்பவர் ‘ என்று புகழந்துரைத்துள்ளார்.

காமராஜர் அவர்கள் தம்மைப் புகழ்வதை விரும்பாதவரானாலும் அவரைப் புகழ்ந்தவர்கள் அதிகம்.

அதனால்தான் அவர் இறந்ததும், ஆச்சாரியா கிருபாளினி அவர்கள் சுதந்திரம் வந்த பிறகும் எளிமையாக வாழ்ந்த ஏழைத் தலைவர் காமராஜர் ஆவார். அவர் மறைவினால் நம்நாடு ஒரு சிறந்த தேசபக்தரை இழந்துவிட்டது’ என்றார்.

பாமரனாகப் பிறந்து பாமரனாக் வாழ்ந்து பாமரனாகவே மடிந்த மாமேபை போல் அரசியல் தலைவர்கள் உருவாக வேண்டும். அப்படியாமால்தான் பகட்டு அரசியலுக்கு முடிவுகட்ட முடியும்.

பாராட்டில் மெய்மறந்தாலோ பகட்டு அரசியலின் பகடைக் காயாக மாற்றிவிடுவார்கள். பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக திட்டமிடுவதும் இல்லை அப்படிப்பட்ட திட்டத்தை நிறைவேற்றுவதும் இல்லை. மக்களுக்குப் பயன்படவேண்டும் என்பதே நோக்கமாயிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *