ஜனநாயகவாதி

posted in: admire, lessons | 1

இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. இங்குள்ள அரசியல்வாதிகள்தான் அதனைக் கடைப்பிடித்துக்காப்பாற்றவேண்டும். ஜனநாயக் காவல்ர்களாக அரசியல்வாதிகள் நடந்துகொள்ளும் தோதுதான் ஒரு நாட்டின் பாரம்பரியம் காப்பாற்றப்படும்.

சர்வாதிகார நாடுகளில் ஆட்சிமுறையும் அமலாக்கமும் எளிதாகிவிடும் சூழ்நிலை உண்டு. அங்கே எதிர்ப்பு நசுக்கப்படும், போராட்டம் களையெடுக்கப்படும். மாறாக ஜனநாயக நாட்டில் எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம்யாவும் இருப்பதால் எல்லாமே எதிர்ப்புக்கிடையேயும் போரட்டத்துக்கடையேயும்தான் நிறைவேறும்.

ஏதோ ஒரு எதிர்கட்சி ஆட்சிக்கு வந்தாலும்அக் கட்சியின் முதல்வரே வாக்களிக்காதவருக்கும் முதல்வராகிறார். அதை வாக்களிக்காதவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மாறாக எதிர்கட்சி வேட்பாளர்களைத் தேர்வு செய்த தொகுதி என்பதால் எந்த உதவியும் செய்யாமல் உதாசீனப் படுத்துவது ஜனநாயக மரபை மீறும் செயலாகும். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஒரு பெருமை மிக்க ஜனநாயகவாதியாகவே வளர்ந்து வாழ்ந்து மறைநூதார் என்பதில் இந்தியர்களே பெருமையடையலாம்.

ஒரு மறை நெல்லை மாவட்டத்தில் தலைவர் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கிராமம் வழியாகச் சென்றார். தெரு ஓரமாக திடீரென வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அங்கு வேலை கொண்டிருந்த விவசாயிகளிடம் போய ‘ இந்த ஊருக்கு பள்ளிக்கூடம் இருக்கிறதா?’ என்று கேட்க, அவர்கள் ‘இல்லை’ என்று கூறினார்கள்.

உடனே சுற்றுப் பயணத்தில் உடன் வந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், ‘ஐயா! தேர்தல்ல நம்ம கட்சிக்கு ஓட்டுப் போடாத ஊரய்யா இது’ என்று கூறினார்கள்.

பெருந்தலைவர் உடனே முகத்தை சற்றுக் கடுகடுப்பாக வைத்துக்கொண்டு ” தேர்தல்ல நமக்கு ஓட்டுப்போட்டாலும் போடாவிட்டாலும் இது நம்ம ஜனங்கய்யா. அவங்க விரும்புறவங்களுக்கு வாக்களிக்கிற உரிமைக்குப் பெயர்தான் ஜனநாயகம்” என்று கூறியதோடு தனது கட்சிக்கே வாக்களிக்காத ஒரு ஊருக்கு பள்ளிக்கூடம் கட்ட உடனாகவே உத்தரவிட்டார்.

இந்த அரிய குணம் இருந்ததால்தான் மக்கள் அவரை ஜனநாயக சோசலிச சிற்பி என்று புகழ்கின்றனர்.

ஒரு முறையல்ல எத்தனை மறையாமாலும் அவர்கள் ஆள்பவர்களை எதிர்த்து வாக்களிக்க மக்களுக்கு உரிமை இருக்கிறது. அதற்காக அவர்களது தொகுதி எந்த முன்னேற்றத் திட்டங்களும் இல்லாமல் ஒதுக்கப்படுமானால் அது ஜனநாயக விரும்பிகள் ஏற்கக்கூடியதல்ல.

கொட்டுவது தேளின் குணமானாலும் காப்பாற்றுவது மனித குணம் என்ற கொள்கையையே இங்கு கடைப்பிடிக்கவேண்டும்.

ஒரு நாள் ஒரு சன்யாசி (துறவி) ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு தேள் தண்ணீரில் கிடந்து தத்தளிப்பதைக் கண்டு மனம் இரங்கி அதைத் தூக்கித் தரையில் போட முயற்சிக்கும்போது அது கொட்டிவிட்டது. வலி தாங்காமல் அவரும் தண்ணீரில் போட்டு விட்டார்.

மீண்டும் மனம் கேளாது போக தேளை கையில் பிடிக்கவும் தேள்கொட்டிவிட்டது. இம்முறையும் வலி தாளாமல் கையை உதறத் தேள் தண்ணீரில் விழுந்தது.

இப்படி பலமுறை தேளைக் காப்பாற்ற முயறைசித்தும் சன்யாசி (துறவி)க்குத் தேள் கொட்டிய வலிதான் மீதி. இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது அந்த சன்யாசி மீண்டும் தேளைத் தூக்கும்போது அவரது இளந்துறவி தடுத்தார்.

” ஐயா! நீங்கள் எப்படியாவது தேளைக் காப்பாற்றிக் கரை சேர்க்கப் நினைக்கிறீர்கள். ஆனால் அதுதான் உங்களைத் தொடர்ந்து கடிக்கிறதே அதன் பின், இதப்போது மீண்டும் ஏன் தேளைத் தூக்க முயற்சிக்கிறீர்கள்?” என்று கையைத் தடுத்தார்.

உடனே சன்யாசி சிரித்தவாறே, ”இளைஞனே! தேள் கடிப்பது அதன் இயல்பு. நாம் மனிதர்கள் அடுத்தவர்களது துன்பத்தை நீக்குவது நமது கடமை” தேள் கொட்டுகிறதே என்பதற்காக வருந்திக் காப்பாற்றும் மனித குணத்தை மறக்கலாமா?” கொட்டுவது தேளின் குணம். கொட்டட்டும் காப்பாற்றுவது மனிதனின் குணம் நாம் காப்பாற்றுவோம் என்றார்.

இந்தக் கதை ஏன் இங்கே கூறப்படுகிறதென்றால், பெருந்தலைவரின் குணமும் இந்தக் கதையில் வரும் சன்யாசியின் குணமும் ஒன்றாகத் தெரிகிறது.

மக்கள் வாக்களிக்காமல் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களை வேற்று நாட்டு மக்கள் போல் ஒதுக்கி வைக்க முயல்பவர்கள் ஜனநாயகவாதிகளாக இருக்கவே முடியாது.

தனது கட்சிக்கு வாக்களிக்காமல் எதிர்க்கட்சிக்கு வாக்களித்ததால் எந்த உதவியும் செய்ய முன் வராத ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் அவசியம் படிக்க வேண்டிய பாடம் இதுவாகும்.

ஜனநாயகம் பல்வேறு கூறுகளாக நின்று செயல்படும். மரபு நிலை மீறாது எல்லார்க்கும் பொதுவாகச் செயல்படும் இடத்தில்தான் ஜனநாயகம் வாழும்.

மாங்குடி ஓர் சிற்றூர். அங்கு ஒரு நீர்த்தேக்க தொட்டி ஒது காமராஜர் வந்து தான் திறக்கவேண்டும் என்ற ஏக்கத்தில் காத்துக் கிடக்கிறது. அப்போது பெருந்தலைவர் மாங்குடி கிராமம் பக்கமெல்லாம் சுற்றுப்பயணம் செய்தார்.ஆனால் மாங்குடிக்கு மட்டும் செல்லவில்லை.

அப்போது அவ்வூர் மக்கள் ஒன்று திரண்டு அவசியம் வந்து எங்கள் மாங்குடி நீர்த் தேக்கத் தொட்டியைத் தீறந்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அப்போது காமராஜரின் செயலாளர், ஐயா மாங்குடி நிகழ்ச்சி நமது சுற்றுப் பயணத்தில் இல்லை என்று – தடுத்தார்

அப்போதும் தலைவர், ” ஒரு முக்கியமான செயலைச் செய்ய அது செயல் திட்டத்தில் இருக்கவேண்டும் என்று அவசியமே இல்லை. நிகழ்ச்சி பெரிதா, நிகழ்ச்சி நிரல் பெரிதா? என்று சிந்தியுங்கள்- என்று படபடவெனப் பொரிந்து தள்ளினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *