சிந்தனைத் தெளிவு
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அய்ம்பத்து நான்காம் ஆண்டு ஆகஸ்டு பன்னிரண்டாம் தேதி அப்போதைய தலைமைச் செயலர் திரு. ராமுன்னிமேன்ன் அய்.சி. எஸ். முல் அமைச்சரிடம் சென்றார். “ஆந்திரப் பிரதேசத்தில், திருப்பதியில் ஒரு பல்கலைக் கழகம் நிறுவப்போகிறார்கள். அதன் வேந்தர் தலைமை நீதிபதி திரு கே.சுப்பராவிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது.