சிந்தனைத் தெளிவு

posted in: admire, lessons | 0

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அய்ம்பத்து நான்காம் ஆண்டு ஆகஸ்டு பன்னிரண்டாம் தேதி அப்போதைய தலைமைச் செயலர் திரு. ராமுன்னிமேன்ன் அய்.சி. எஸ். முல் அமைச்சரிடம் சென்றார்.

“ஆந்திரப் பிரதேசத்தில், திருப்பதியில் ஒரு பல்கலைக் கழகம் நிறுவப்போகிறார்கள். அதன் வேந்தர் தலைமை நீதிபதி திரு கே.சுப்பராவிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது.


“சென்னை மாநிலத்தில் பொதுக்கல்வி இயக்குநராய் இருக்கும் திரு. கோவிந்தராசலு நாயுடைவை, துணை வேந்தராக நியமிக்க விரும்புகிறாராம். வரை அனுப்பி வைக்க முடியுமா? என்று கேட்டிருக்கிறார். என்ன பதில் எழுத என்று கேட்டுக் கொண்டுபோக வந்திருக்கிறேன்” என்று தலைமைச் செயலர் கூறினார்.

“கொடுக்காவிட்டால், பிரிந்துபோன மாநிலத்திற்கு உதவியை மறுக்கிறோமென்று நினைப்பார்கள். நாயுடைவை விட்டு இட்டால், நாம் சமாளிக்க முடியுமா என்பதை நீங்களே சொல்ல வேண்டுன்” இது காமராசர் பதில்.

“அதையும் பார்த்தேன். இயக்குநர் பதவிக்கு உரியவர்கள் இரு துணை இயக்குநர்கள் மட்டுமே உள்ளனர். இரண்டு பேரும் இளைஞர்கள் மட்டுமே உள்ளனர். இரண்டு பேரும் இளைஞர்கள்; நாற்பத்து இரண்டு வயது. யாரைப் போட்டாலும் பதின்மூன்று ஆண்டுகளுக்கு இருப்பார்கள். அது நல்லதா என்பதே கேள்வி” என்று புதிர் போட்டார் தலைமைச் செயலர்.

“இரண்டு பேரையும் விட்டுவிட்டு, வேறு யாரை யாவது நியமிக்க வழி இருக்கிறதா?” காமராசரின் கேள்வி.

“அதைப்பற்றிச் சிந்தித்தேன். யாராவது, அய்.சி. எஸ்., அய்.ஏ.எஸ். அதிகாரிகள் யாராவது இருந்தால், சொல்லுங்கள்” என்றார் காமராசர்.

“அப்படியொருவரும் இல்லை. நாம்பார்த்துப் போட்டால், மறுக்கமாட்டார்கள். அதிகாரிகளிடம் அந்த அளவிற்கு ஒழுங்கு இருக்கிறது” இது தலைமைச் செயலருடைய பதில்.

“கட்டுப்பாட்டிற்காகப் போகிறவர், மூன்று ஆண்டு எப்ப முடியும் என்றுபார்த்துக்க கொண்டேயிர்ப்பார். காலம் ஓடுமே ஒழிய, வேலை ஓடாது. இயக்குநர் பதவிக்கு ஆசைப்படுகிற, இந்திய சர்விஸ் அதிகாரிகள் இல்லாவிட்டால், கல்வித்துறையில் உள்ள இருவருள் ஒருவரைப் போட்டுங்க. அவராவது மகிழ்ச்சியாக வேலை செய்வார்.” என்று கோடு காட்டினார் காமராசர்.

“யாரைப் போடலாம்?” என்று வினவினார் தலைமைச் செயலர்.

“அதை நீங்கதானே சொல்லணும். இது சீனியாரிடி பதவியா செலக்ஷன் பதவியா?” இது காமராசரின் கேள்வி.

“செலக் ஷன் பதவியே” இப்படிக் கூறினார், தலைமைச் செயலர்.

“அப்படியானால், இரண்டுபேர் ரிகார்டுகளையும் பாருங்கள். யாருடையது அதிகம் நன்றாக இருக்கிறதோ, அவரை நியமித்துவிடலாம்” என்று காமராசர் ஆணையிட்டார்.

“அதையும் ஒரு மாதிரி பார்த்துக்கொண்டுதான், வந்திருக்கிறேன். நெ.து.சு. வின் ரிகார்டு முதலில் நிற்கிறது.”

“அப்படின்னா, அவரைப் போட்டுடுங்க.”

“இல்லை. எதற்கும் இரண்டு ரிகார்டுகளையும் சர்வீஸ் கமிஷனுக்கு அனுப்பி, அவங்க கருத்தையும் கேட்டுக்கொள்ளலாம்.”

“சட்டம் அப்படிச் சொன்னா, அவங்களையும் கேட்டு முடிவு செய்யுங்கள். இல்லாவிட்டால், நீங்கள் சொல்லும் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்ளுகிறோம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்புறம் உங்கள் விருப்பம்.” என்று முடிவு செய்தார் முதலமைச்சர்.

“எதற்கும் கமிஷனுடைய கருத்தையும் கேட்டு விடுகிறேன்.” என்று தலைமைச் செயலர் கூறினார். காமராசர் இசைந்தார்.

இரண்டு நாட்களுக்குப் பின், இச்செய்தி என் காதில் வீழ்ந்தது. அன்றுமுதல், முடிவு தெரியும் வரை, ‘பதுங்கிக்கொண்டேன். சென்னையில் போயிருக்க வேண்டிய, அமைச்சர் கலந்துகொண்ட பல நிகழ்ச்சியகளுக்குச் செல்லாமல் நின்றுவிட்டேன்.

என்னை நியமித்ததற்காக்கல்வி அமைச்சருக்கு நன்றி சொன்னபோது,அவர், ‘இரு திங்களாக தலைமறைவாகிவிட்டீர்களே, என்று சிரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *