யார் தலைவர்?
தலைவர்கள், கட்சித் தலைவர்கள் என்ன வித்தியாசம்? அடுத்த தேர்தலைப் பற்றி கவலைப்படுபவர்கள் கட்சித் தலைவர்கள். அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பவர்கள் தலைவர்கள்! காமராஜர் – தலைவர்
தலைவர்கள், கட்சித் தலைவர்கள் என்ன வித்தியாசம்? அடுத்த தேர்தலைப் பற்றி கவலைப்படுபவர்கள் கட்சித் தலைவர்கள். அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பவர்கள் தலைவர்கள்! காமராஜர் – தலைவர்
காமராஜர் தமிழகத்தின் முதல்வராக இருந்த போது நெல்லையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தார். காரில் அவருடன் உதவியாளரும் இருந்தார். அன்றைய தினம் பகல் 11 மணியளவில், கார் கோவில்பட்டி அருகே வரும் போது, வழியில் 12 வயது சிறுவன் ஒருவன் மாடுகள் மேய்த்து கொண்டிருந்தான்.
அவர் பேச தொடங்கினார், பொது கூட்டத்தில். அமைதியான குரல், அக்ராசனாதிபதி என மற்றவர்களை பொலச்சொல்லாமல், தலைவர் அவர்களே என ஆரம்பித்தார். நேரம் ஆக ஆக தமிழன்னை அவர் நாவிலே நடனமாடத் தொடங்கினாள். வரலாறு கூறினார், தமிழரின் பண்பாட்டை உரை நடையில் பாடினார், நாடாண்ட தமிழினம் ஏன் தலை தாழ்ந்தது என அடுக்கடுக்கான விளக்கங்கள். நேரம் போவதே … Continued
கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் காமராஜ். மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் … Continued
1954-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளன்று முதல்வர் பொறுப்பையேற்கப் புறப்பட்டார் காமராஜ். திருமலைப் பிள்ளை வீதி திமிலோகப்பட்டது. அனைவரிடமிருந்தும் விடைப் பெற்று வெளியே வந்து 2727 என்ற காரில் ஏறினார். திடீரென முன்னாலிருந்த காவலர் வண்டியிலிருந்து “சைரன்” என்ற மிகுவொலி எழுந்தது. புறப்பட்ட காரை நிறுத்தச் சொன்னார். முன்னாலிருந்த வண்டியிலிருந்த காவல் துறை அதிகாரியை அழைத்தார். … Continued