அவர் பேச தொடங்கினார், பொது கூட்டத்தில். அமைதியான குரல், அக்ராசனாதிபதி என மற்றவர்களை பொலச்சொல்லாமல், தலைவர் அவர்களே என ஆரம்பித்தார். நேரம் ஆக ஆக தமிழன்னை அவர் நாவிலே நடனமாடத் தொடங்கினாள். வரலாறு கூறினார், தமிழரின் பண்பாட்டை உரை நடையில் பாடினார், நாடாண்ட தமிழினம் ஏன் தலை தாழ்ந்தது என அடுக்கடுக்கான விளக்கங்கள். நேரம் போவதே தெரியவில்லை. ஐம்பது பேராக இருந்த கூட்டத்தில், சிறிது நேரத்தில் ஆயிரம் பேர் சூழ்ந்துவிட்டனர்.
இத்த மனிதர் பேசியதெல்லாம் நடந்தால் தீண்டாமை, அறியாமை, கல்லாமை, பொறாமை இருக்காது. திராவிட இறையாண்மை, இனப்பெருமை, ஆரியர் என்ற அன்னியரின் நாட்டான்மை இல்லாமை அனைத்து அமையுமென்று நம்பினான். இப்படித்தான் ஜெர்மனியில் ஹிட்லர் என்ற தனி மனிதன் பேசத் தொடங்கி பததினோறு ஆண்டுகளில் அந்த நாட்டையே நாசப்படுத்தி தற்கொலை செய்து மாண்டான் என்ற வரலாறு அவனுக்கு அப்போது தெரியாது. மறுநாளே திராவிடர் கழக உறுப்பின்னானான். “திராவிட நாடு” இதழில் காமராஜர் பற்றிய அசிங்கமான கட்டுரைகள் வந்த போது மகிழ்த்தான். திரு.கருணா நிதி காமராஜரை வசைபாடி பேசும்போது இன்பத்தேன் வந்து காதில் பாய்வது போன்று அகமகிழ்ந்தான்.
…
…..
……..
திராவிட நாட்டைப் பிரிப்போம் என முழங்கிய வீரர்கள் அனைவரும் மாலையில் பொதுக்கூட்டங்களில் முழங்குவதும், மற்ற நேரங்களில் மாடர்ன் தியேட்டர்ஸ் என்றும், கோடம்பாக்கம் என்றும் திரையுலகிலே தஞ்சம் புகுந்து திரைப்பட வசன எழுத்துக்களில் திராவிட நாட்டை தேடிக் கொண்டிருக்கிறார்கள், மதுக்கோப்பைகளிலே தங்கள் குடியிருப்பை அமைத்துக்கொண்டு விட்டனர் சிலர் என்ற சேதி அவனுக்கு மெல்ல எட்டின. லெனின், கரிபால்டி, மாஜினி, எமிலி ஜோலா, ரூஷோ, வால்டர், மாசேதுங், ஆபிரகாம் லிங்கன், ஜார்ஜ் வாஷிங்டன், சிவப்பேறும் சீனா, ருஷ்யப்புரட்சி, பிரஞ்சுப்புரட்சி, அமெரிக்கப்புரட்சி பற்றியெல்லாம் பேசியவர்கள் கடைசியில் கோடம்பாக்த் திரை உலகை சுற்றிலும்தான் இவை இருக்கின்றன என்று தேடுகிறார்கள் என்றவுடன் தன் பொன்னான இளமை புண்ணகிப் போயிற்றே என்று வருந்தத் தொடங்கினான். ஆனாலும் விட்டு விலகவில்லை.
1954ம் ஆண்டு சூரிய வெப்பத்தின் கடுமையை தீர்க்க குற்றாலம் சென்றான். உடுத்தி இருந்தது கறுப்பு/சிவப்பிலான கழக உடை. திடீரெனக் குளிக்கும் கூட்டத்தில் சலசலப்பு, முதலமைச்சர் காமராஜ் வந்திருக்கிறாராம் குளிக்க என முணுமுணுப்பு.
அதற்கு முந்தின ஆண்டில் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம் அவனுக்கு நெஞ்சில் ஊசழாடியது. இரண்டணாக்கள் கொடுத்து சிற்றருவியில் குளித்துக் கொண்டிருந்தவன் முதுகில் ஏதோ ஒன்று குத்த திரும்பிப் பார்த்தபோது அது துப்பாக்கியின் ‘பயனட்’ கத்தி முனை என தெரிய, என்ன என்று அந்த துப்பாக்கி ஏந்திய காவலரை கேட்க, இந்து அற நிலையத்துறை அமைச்சர் திரு.வெங்கிடசாமி வந்திருக்கிறார். அவர் குளித்து செல்லும் வரை அனைவரும் வெளியேர வேண்டும் என அவர் கூற, ” நான் காசு கொடுத்து குளிக்கிறேன்…என்னை வெளியே போகச் சொல்ல உனக்கு உரிமையில்லை” என்று அவன் வாதிட, காவலரோ வன்முறை பிரயோகித்து அனைவரையும் வெளியேற்ற, “மக்கள் காலில் விழுந்து வாக்கு கேட்டு வெற்றிப்பெறும் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களானவுடனே குட்டி மன்னர்கள் போல நடந்து கோள்கிறார்களே. இதை தட்டிக் கேட்க மக்களுக்கேன் வீரமில்லை” என் கூறிக்கொண்டே வெளியேறுகிறான்.அமைச்சரோ, ஒரு நண்பருடன் பேசிக் கொண்டே உள்ளே நுழைந்து அருவி பூராவையும் அரைமணி நேரம் ஆக்கிரமித்துக்கொண்டு குளித்தார்.
அந்த கதைதான் இன்றும் நடக்கவிருக்கிறது. பொன வருடம் தன் உரிமையை தட்டி பறித்தவர் ஒரு சாதாரண அமைச்சர், ஆனால் இன்று வருவதோ நாட்டின் முதலமைச்சர். நிச்சயமாக வெளியேற்றப்படுவோம் என் உறுதி செய்து கொண்டாண். அவன் நினைத்தது பொலவே காவலர்கள் வந்தார்கள். துப்பக்கி கத்தியை காட்டி மிரட்டினர். எல்லோறும் வெளியேரினர். இடுப்பில் துண்டு கட்டி, கூட ஒருவருடன் படிக்கட்டிலிருந்து இறங்கி வரும் காமராஜரை கண்ட வண்ணமிருந்தனர்.
அருகில் வந்த காமராஜர் கோபத்துடன் அந்த காவலரை நோக்கி பேசத் தொடங்கினார். “ஏய்! நான் மேலிருந்து பார்த்துக்கிட்டுத்தான் இருந்தேன்னென். நீ இந்த வேலை செய்யத்தான் முன்னாலேயே வந்தியான்னேன். இவங்க எல்லோரையும் வெளியேத்திட்டு நான் மட்டும் குளிக்கனுமான்னேன், போ மேலே…இங்க இருக்காதேன்னேன்” என்று உத்தரவிட்டு விட்டு ஒதுங்கி நின்ற எங்களையெல்லாம் பார்த்து ‘வாங்க..வாங்க… எல்லொறும் வாங்க. ஒண்ணாக் குளிக்போம்” என்றார்.
அந்த இளைஞனுக்கு இக்காட்சியை நம்பவே முடியவில்லை.
“எழைப் பங்காளர் என்றார்களே அது எவ்வளவு பொருத்தம்? தலைவரென்றால் இவரல்லவா தலைவர். அய்யோ! சொற்சிலம்பர் பேச்சைக் கேட்டு ‘இந்த பண்பின் இமயத்தின் மீது எவ்வளவு தவறான எண்ணம் கொண்டிருந்தோம். இந்தத் தலைவன் காலைத்தொட்டு வணங்க வேண்டுமே” என்று எண்ணிக் கொண்டே அவர் குளிக்கும் இடம் அருகே நின்றான். கீழே குனிந்து கால்களைத் தேய்ப்பது போல் அவர் பாதங்களை தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டான்.
இவர்தான் இனி தன் தலைவர். சாகும்வரை இவர் காலடியிலே கிடப்பேன் என சங்கற்பம் எடுத்துக் கொண்டான்.
காலம் ஓடியது.
தலைவரோடு அவர் தன்னத்தனியராக இருக்கும் போது பல விஷயங்களில் உரிமையோடு சென்று வாதிடுவான்.
kaliraja.t
One or two spelling mistakes must be corrected
with thanks
kaliraja thangamani
nayakam
DATES MUST BE CORRETED
M.Mohamed hanifa
he is a great leader.. and good man.
M.Mohamed hanifa
Please Give also how may kilometer Road newly deveop.. and other all statics
saimurugesh
we can not get a leader like Kalvi Kanthirantha Karunaiveerar Kamarajar. He is a man like prodigy.
lotus
காமராஜர் முதல்வராக இருந்தது ஒன்பது ஆண்டுகள் தான் ஆனால் அவருடைய புகழ் இன்னும் இருக்கிறது .. ஆனால் கலைஞர் அரை நுற்றாண்டை அரசியலிலேயே வாழ்ந்தும் அவரால் மக்கள் மனதில் நிலைக்க முடியாது ………….
praveena
we want a leader like kamarajar
sathish
What a great leader? Now he is leader of caste (nadar). It is for shame of tamilians. Symbol os simplicity…………symbol of honesty………….symbol of leadership……….. Ayya, with out rule in tamilnadu, there is no education in tamils. don’t forget.
ganesh kumar
காமராஜர் பற்றிய மிகச்சிறந்த தொகுப்பு. நன்றாக உள்ளது. உங்களுக்கு நன்றி.
rajasekar
காமராஜர் பற்றிய மிகச்சிறந்த தொகுப்பு. நன்றாக உள்ளது. உங்களுக்கு நன்றி.
Vinoth
Mr satish
you r 100% corrrect, not only kamaraj the great leaders like Muthuramalingam, Ambedkar are all r now cast leader, its shame for us, if these legends think about the caste now we cannot perform like this.
murali
it is help to know kingmaker…he always live in my heart
Padmapraveen
What a great leader.we must follow like these legends.this site s very useful to know about them.thank u.
Thangadurai
July 15 today is , this karmaveerar birthday..we should remember his selfless thoughts..thinking for all peoples, unlike today’s so called leaders..opportunistic leaders thinking only for their families……Unnai Pol Thalaivarundo Uzhappale Uyarnthavare…Jai Hind
abigupta
i want some more informations about tamilnadu under congress rule
Raj
Kamaraj enru oru manithan intha pomiyela valathan antha mannile namum valkirom enbathe , namaku perumai.he is gr8 leader , when u rate selfishness ,decipline , he above gandjiji. I am truly inspired by him . to remember him , i can do only follow his principles.
sujatha
all political people must follow his way what a super man really proud of our kamarajar sir
anto
காமராஜர் போல ஓர் தலைவர். மீண்டும் இம்மண்ணில் உருவாக வேண்டும். அவருடைய பண்புகளை என்னுள் வாழவைப்பேன்.
வாழும் போது சாதியை மறுத்த இந்த உண்மையான தலைவர்கள் இறந்த பின் சாதியின் வலையில் பீடிக்கபட்டிருக்கிறார்கள். நம் இளைஞர்கள் கண் திறக்கப்படும் காலத்தை காண காத்திருக்கிறேன். காமராஜரே எங்களுக்காக மன்றாடுங்கள் நீங்கள் இணைந்திருக்கும் இறைவனிடம்…
Arun
egapaata pizhai. thiruthhi veliyudungal. padikka siramamaga irukkirathu. nanri.