மக்களில் ஒருவர்

posted in: admire, politics, Simplicity | 29

1954-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளன்று முதல்வர் பொறுப்பையேற்கப் புறப்பட்டார் காமராஜ். திருமலைப் பிள்ளை வீதி திமிலோகப்பட்டது. அனைவரிடமிருந்தும் விடைப் பெற்று வெளியே வந்து 2727 என்ற காரில் ஏறினார்.

திடீரென முன்னாலிருந்த காவலர் வண்டியிலிருந்து “சைரன்” என்ற மிகுவொலி எழுந்தது. புறப்பட்ட காரை நிறுத்தச் சொன்னார். முன்னாலிருந்த வண்டியிலிருந்த காவல் துறை அதிகாரியை அழைத்தார். “அது என்னையா சத்தம்?” காமராஜ்.

“ஐயா, இது முதலமைச்சர் செல்லும் போது போகுவரத்தை உஷார்படுத்த எழுப்பப்படும் ஒலி. முன்னால் முதல்வர்கள் பிரகாசம் ஐயா, ஓமந்தாரையா, குமாரசாமிராஜா ஐயா, ராஜாஜி ஐயா எல்லோர் காலத்திலுமிருந்து வருகிற சம்பிரதாயம்” என்றார் காவல்துறை அதிகாரி. “இதோ பாருங்க… இதுக்கு முன்னால இந்த சம்பிரதாயமெல்லாம் இருந்திருக்கலாம்… எனக்கு இதெல்லாம் வேண்டாம்னேன். சத்தம் போடாமப் போங்க” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

அடுத்த கோடம்பாக்கம் பெருவீதி – நுங்கம்பாக்கம் பெரு வீதி சந்திப்பில் போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருந்த காவலர் இவர் சென்ற வண்டியை நிறுத்தி பின் இவரது வண்டி செல்ல அனுமதியளித்தார். ஆனால் அவர் காருக்கு முன் நின்ற காவல்துறை மேலதிகாரிகளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன். ஆனால் காமராஜரோ அந்த நடுத்தெருக் காவாலரின் கடமையாற்றலைக் கண்டு உள்ளம் புளகித்தார்.

காவலரைத் தாண்டி இவரது கார் செல்லும் போதுதான் காவலருக்கு விஷயமே புரிந்தது. நடு நடுங்கிப் போனார். முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமெ என்று பத்றிப்போனார். காவல்துறை மேலதிகாரிகளின் சினத்துக்கு ஆளாகி விட்டோமே என கலங்கினார்.

அன்று மாலை காமராஜர் வீடு திருப்பியபோது கலவரத்துடன் வாசலில் காத்து நின்று மன்னிப்புக் கேட்ட காவலரை தட்டிக்கொடுத்த காமராஜ் அவரது கடமை உணர்வை பாரட்டியபோது தான் காவலரின் உள்ளம் சாந்தியுற்றது.

காமராஜ் முதலமைச்சராக இருந்தவரை அவருக்கு பாதுகாப்பாகச் சென்ற காவல்துறை வண்டிகள் ஒலி எழுப்பியதே இல்லை. தன்னை தலைவராக எண்ணிக்கொள்ளாமல் மக்களில் ஒருவராகவே தன்னைப் பாவித்துக் கொண்டார்.

29 Responses

 1. M.Mani

  Nowadays what we see? When Minister/CM scheduled to visit some place in the afternoon, police personnel are standing in the road side from morning itself and that too from Chennai to the scheduled place of visit. Mere waste of money and man power.

 2. Priya

  Really amazing ,he is a man of himalayan achievement with the great qualities of simplicity , faith & straightforwardness.

 3. lotus

  we cant get again like him … nobody believe he was 1985 dec 18th its noneother than me

 4. lotus

  அவர் தான் கிங் மேக்கர் அவரை போன்ற அரசியலில் தூய்மை உள்ள தலைவர் இனியும் பிறக்க போவதும் இல்லை பிறந்தாலும் அப்படி இருக்க இந்த சமுதாயம் இருக்கவும் விட போவதும் இல்லை …. அவரை போன்ற தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் பிறக்கவில்லை என்ற ஏக்கம் இந்த காலத்தில் பல இளைஞர்களுக்கு உண்டு அவரை போன்ற திறமையும் தூய்மையும் மனித நேயமும் மக்களுக்காகவே வாழ்பவர்களும் இந்த தமிழ் நாட்டுக்கு என்றும் கிடைக்க போவதில்லை

 5. MARIYAL NATARAJAN

  அவர் தான் கிங் மேக்கர் அவரை போன்ற அரசியலில் தூய்மை உள்ள தலைவர் இனியும் பிறக்க போவதும் இல்லை பிறந்தாலும் அப்படி இருக்க இந்த சமுதாயம் இருக்கவும் விட போவதும் இல்லை …. அவரை போன்ற தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் பிறக்கவில்லை என்ற ஏக்கம் இந்த காலத்தில் பல இளைஞர்களுக்கு உண்டு அவரை போன்ற திறமையும் தூய்மையும் மனித நேயமும் மக்களுக்காகவே வாழ்பவர்களும் இந்த தமிழ் நாட்டுக்கு என்றும் கிடைக்க போவதில்லை – MARIYAL NATARAJAN, PANCHAYAT WARD MEMBER, SITHALAPAKKAM FIRST GRADE PANCHAYAT, PUNITHA THOMAYAR MALAI PANCHAYAT UNION, KANCHEEPURAM DISITRICT – 9940417253

 6. Mahalakshmi.P

  Kamarajar the great person. its a similicity man of the world. What he is ambition. his future plan. its more details need my future TamilNadu.
  This Generation developed by next Kamarajar whos that?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *