ஆளத்தெரிந்தவர்

posted in: admire, Leadership | 0

ஆளத்தெரிந்தவர்கள் ஒவ்வொரு ஆளையும் தெரிந்திருக்க வேண்டும் என்னும் அரசியல் சித்தாந்தத்தை உணர்ந்த உத்தமர் காமராஜர். என்றோ பார்த்து அறிமுகமான ஒருவர் கூட்டத்துக்குள் எங்கேனும் நின்றால் கூட பெயர் சொல்லி அழைக்கும் நினைவாற்றலே ஆளவந்தவர்களிடம் அவசியம் இருக்க வேண்டும். இது பெருந்தலைவரிடம் இருந்தது.

செயல் வீரர்

posted in: Leadership | 0

காமராஜர் கட்சியில் தலைவராக இருந்தபோது முழுநேரத் தொண்டராவே இருந்தார். செயல், செயல், செயல் எனச் செயலில் கரைந்ததால் கர்ம வீரர் என்று புகழப்பட்டார் காமராஜர். ‘நாட்டுக்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்று ‘பாரதி’யின் இலக்கணம் காமராஜருக்கு மட்டுமே பொருந்தும்.

வழி விட்ட வள்ளல்

posted in: admire, lessons | 0

‘பதவியை நீ தேடிப்பொனால் பதவிக்குகப் பெருமை. பதவி உன்னைத் தேடி வந்தால் உனக்குப் பெருமை’ – என்ற உயர்ந்த அரசியல் இலக்கணத்துக்கு ஏற்றாற் போல, உலகம் போற்ற வாழ்ந்தவர் கர்மவீரர் காமராஜர். அவர் எப்போதுமே பதவியைத் தேடிப் போனதே இல்லை. மாறாக பதவிதான் காமராஜரைத் தேடிப் போனது. அதனால்தான் அவர் வகித்த பதவிகள் எல்லாம் இன்றளவும் … Continued

கல்வித் தடை கடக்கும் வழி

posted in: Education, Leadership | 3

கல்வியே மனித மனங்களைக் கனிய வைக்கும், அறிவைத் துலக்கி அகத்துள் ஒளியேற்ற உதவும். மனிதன் கல்வியறிவு பெறும்பொதுதான் மகத்துவம் பெறுகிறான். உலகை கண்களால் காணும் முன்பே கல்வி காட்டிவிடுகிறது. எனவேதான், ”கல்வியே அறிவுச் சன்னலாகி அகவீட்டை அலங்கரிக்கிறது” என்றான் ஓர் அறிஞன்.

தீண்டாமை தீர்த்தவர்

posted in: lessons, Untouchability | 1

‘தீண்டாமை என்பது பாவச் செயல்’ என்றார் காந்தி. எனவே அவரைத் தொடர்ந்து அவர் வழியில் வந்த கருப்புக் காந்தியான காமராஜர் அவர்களும் தீண்டாமையை வெறுத்தார். தீண்டாமையை அகற்றப் பாடுபட்டார். அரசியலில் பெருந்தலைவர் என்ற பெயரும் புகழும் பெற்றபின் தீண்டாமையை வெறுத்தவர் அல்லர். பிள்ளைப் பருவம் முதலே காமராஜர் தீண்டாமையை எதிர்ப்பதில் தீவிரவாதியாகவே இருந்திருக்கிறார்.