செயல் வீரர்

posted in: Leadership | 0

காமராஜர் கட்சியில் தலைவராக இருந்தபோது முழுநேரத் தொண்டராவே இருந்தார்.

செயல், செயல், செயல் எனச் செயலில் கரைந்ததால் கர்ம வீரர் என்று புகழப்பட்டார் காமராஜர்.

‘நாட்டுக்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்று ‘பாரதி’யின் இலக்கணம் காமராஜருக்கு மட்டுமே பொருந்தும்.

காங்கிரஸ் காரர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள்.

2. சுதந்திரத்துக்குப் பின் கட்சியில் பங்கு கொண்டவர்கள்.

காமராஜர் இளமைக் காலம் தொட்டே இந்திய தேசியக் காங்கிரசில் இணைந்து முழுநேரச் செயல் வீரர் என்னும் முத்திரைக் குத்தப்பட்டார்.

பம்பாயில் கூடிய காங்கிரஸ் மாநாடு, ‘செய் அல்லது செத்து மடி’ தீர்மானத்தை நினைவேற்றியது.

பம்பாய் காங்கிரசின் முடிவுகளை துண்டு பிரசுரங்ளாக நாடெங்கும் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது.

1942 ஆகஸ்ட் 8 – ஆம் தேதி காங்கிரஸ் கூட்டிய, இம் மாநாட்டில்தான் வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்தானம் நிறைவேறியது.

மாநாட்டுத் தீர்மானங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நாடெங்கும் விநியோகித்து மக்கள் அறியச் செய்ய வேண்டும். அப்பொறுப்பை ஏற்று, காமராஜர் அவர்கள் துண்டுப் பிரசுரங்களோடு தமிழ்நாடு நோக்கி ரயிலேறினார்.

திரு. சஞ்சீவரெட்டி அவர்களும் தலைவருடன் வந்தார். எந்நேரமும் எந்த ரயில் நிலையத்தில் வைத்தும் கைதாகலாம் என்ற நிலையில் பயணமானார்கள்.
இடையில் கைதாகி விட்டால் மாநாட்டுத் தீர்மானங்கள், மக்களை அடையாமல் போய்விடும். எனவே தனக்கிடப்பட்ட வேலையை செய்த் முடிப்பதுவரை, எக்காரணம் கொண்டும் கைதாகிவிடக்கூடாது என்று முடிவு செய்துகொண்ட தலைவர் தலைவர் காமராஜர் அவர்கள், இடையில் அரக்கோணம் ரயில் நிலையத்திலேயே இறங்கிவிட்டார்.

அன்றிரவு ராணிப்பேட்டை கல்யாணராமையர் வீட்டில் தங்கிவிட்டு ஒரு வணிகரைப்போல் தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு கோணிப் பைகளையும் தூக்கியபடி மாறூ வேடத்தில், தமிழகமெங்கும் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகிக்க உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, நேராக விருதுநகர் வந்தார் பெருந்தலைவர்.

தனக்கிடப்பட்ட செயலைத் தடையின்றிச் செய்து முடித்துவிட்டதால் தானாகவே விருதுநகர் காவல் நிலைய அதிகாரி திரு. எழுத்தச்சன் அவர்களை அழைத்துக் கைது செய்துகொள்ளும்படி கூறினார். இளமை முதலே பெற்றுக் கொண்ட செயலை எப்படியேனும் செய்து முடிக்கும் செயல் வீரராகவே கர்மவீரர் திகழ்ந்தார்கள்.

இந்தப் பயிற்சியும் பழக்கமும்தான் தமிழக அரசியலையும் இந்திய அரசியலையும் தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு வந்தபோது செயல்புரிய வாய்ப்பாக அமைந்தது.

எல்லோர்க்கும் இலவசக் கல்வி என்றதை செயலாக்கத் துணிந்தபோது கல்விச் செயலாளர்களும் திட்ட வல்லுனர்களும் செலவைக் கணக்கிட்டுக் காட்டி ‘முடியாது’ – என்று கூறி விட்டார்கள்.

அப்போது காமராஜர் அவர்கள், ”முடியாது என்று சொல்லவா நீங்கள் வந்தீர்கள் முடியும்ண்ணேன், முடிக்க என்ன வழி என்பதை மட்டும் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டார்.

செயலை முடிப்பதில் செலவைப் பார்க்க கூடாது. செயலை முடிக்கச் செயலை மட்டுமே பார்க்க வேண்டும் என்று எண்ணும் செயல்வீரரே கர்மவீரர்.

திருச்சியில் ‘பெல்’ (BELL) நிறுவனம் அமைத்ததும் கரமவீர்ரின் செயல் வீரத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பெல் நிறுவனம் அமைய, தமிழ்நாட்டில் பொருத்தமான இடம் இல்லை என்று டில்லியிலிருந்து வந்த பொறியியலாளர்கள் கூறிவிட்டார்கள். அப்போது காமராஜர் அவர்கள் ”முடியாது என்று சொல்ல வேண்டுமானால், டில்லியில் இருந்தே சொல்லிவிடலாமே! இங்கு வந்து முடியாது என்பதா? முடிக்க வேண்டும் அதற்கு என்ன வேண்டும் என்கிறீர்கள்?” என்று கேட்டார்.

‘நல்ல தண்ணீரும் பரந்த பூமியும் வேண்டும்’ என்றவர்களிடம், திருச்சியில் காவிரிப் பாய்கிறது! நிலம் நான் தருகிறேன். காவிரி நீர் தரும் நிறைவேற்றுங்கள்” என்று கட்டளையிட்டார்.

இன்று உலகமெல்லாம் உற்பத்திப் பொருளை ஏற்றுமதி செய்யும் அந்த பெல் (BELL) நிறுவனம் காமராஜரின் செயல் வெற்றி எனலாம்.
மக்கள் பணியில், செயலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார் தலைவர். முடியும் என்ற நோக்கோடுதான் செயல் பணிகளைத் தொடங்க வேண்டும். திட்டமிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பார்.

அந்த செயல் வெற்றிதான் அவர் காலத்தில் அணைக்கட்டுகளாக, மின் திட்டங்களாக, தொழிற்சாலைகளாக உருப்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *