மாலை குவிந்தது
சென்னை மாநிலக் கல்வித்துறை நூற்று இருபத்தேழு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதன் முதல் நூற்றாண்டு முடியும்போது, முதன் முதலாக, தமிழன் ஒருவனுக்கு – எனக்குப் பொதுக்கல்வி-இயக்குநர் பதவி கிட்டியது. பிறப்பால் தமிழனாக இருப்பதோடு, தமிழ் பேசும் தமிழனாகவும் இருப்பதால், என்னைப் பல ஊர்களுக்கும் அழைத்தனர்.
மற்றக் கட்சிகளையும் மதித்தவர்
காமராசர் முதல் அமைச்சராக விளங்கிய காலம் தமிழ்நாட்டுக் கல்விக்குப் பொற்காலம். அக்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத பெரும் அளவு பல நிலைக்கல்லவியும் வளர்ந்தது. இருபால் ஆசிரியர்களும் ஆயிரம் ஆயிரம ஒளிகொள் வழிகளில் இறக்கை கட்டிப் பறந்தார்கள். ‘சாமி’ வந்தவர்களைப்போல ஆவேசத்தோடு கல்விப்பணி புரிந்தார்கள். பொதுமக்களும் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டுக் கல்வி தொண்டிற்குத் தாராளமாய் உதவினார்கள். … Continued
சிந்தனைத் தெளிவு
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அய்ம்பத்து நான்காம் ஆண்டு ஆகஸ்டு பன்னிரண்டாம் தேதி அப்போதைய தலைமைச் செயலர் திரு. ராமுன்னிமேன்ன் அய்.சி. எஸ். முல் அமைச்சரிடம் சென்றார். “ஆந்திரப் பிரதேசத்தில், திருப்பதியில் ஒரு பல்கலைக் கழகம் நிறுவப்போகிறார்கள். அதன் வேந்தர் தலைமை நீதிபதி திரு கே.சுப்பராவிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது.
காங்கிரஸ் செயலாளரானார்
1932 – ம் ஆண்டு பாரதமெங்கும் சட்டசபைத் தேர்தல்கள் நடத்துவது என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்து அதற்கான ஆயத்தங்களைச் செய்யத்துவங்கியது. நேருஜி அப்பொழுது அகில இந்தியக்காங்கிரஸ் தலைவராக இருந்தார். காங்கிரஸ் கட்சித் தேர்தலில் போட்டியிடுவதை அவர் விரும்பவில்லை. எனினும் பெரும்பான்மையினர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவான கருத்தை தெரிவித்ததால் நேருஜி அதனை ஏற்றுக்கொண்டார்.
பிள்ளைப்பருவ அற்புதங்கள்
காமராஜ் பின்னாளில் அரசியலில் மிகவும் புகழும் செல்வாக்கும் பெற்ற காலத்திலும் முண்டியடித்துக்கொண்டு தனக்காகப் பதவிகளைத் தேடியலைந்ததில்லை இந்த இயல்பு சின்ன வயதிலேயே அவரிடம் பொருந்தியிருந்தது. என்பதற்கு பள்ளிப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சியொன்று சான்று பகர்கின்றது. கமராஜ் கல்வி பயின்ற க்ஷத்திரய வித்தியாசாலையில் ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியை விமர்சையாக்க் கொண்டாடுவார்கள்.