தான் இறங்கினாலும் தரம் இறங்காதவர்

posted in: admire, Leadership, lessons | 0

சிறுசிறு அரசியல் நடவடிக்கைகளில் இறங்கி மெல்ல மெல்ல அரசியல்வாதியானவர்களும் உண்டு. தொண்டு செய்து சமூகத்துக்உ உதவும் தோள்களைப் பார்த்து தலைவர்கள் அழைத்துச் சேர்த்ததால் அரசியலுக்கு வந்தவர்களும் உண்டு. அரசியல் தலைவர்களின் உறவாய் பிறந்ததாலே அரசியல்வாதியாக ஆனவர்கள் – பணபலமும், புகழ் ஆசையும் கொண்டு அரசியலைச் சார்ந்தவர்கள்-சமூக விரோதச் செயல்களை மறைக்கவும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருக்கவும் … Continued

ஆளத்தெரிந்தவர்

posted in: admire, Leadership | 0

ஆளத்தெரிந்தவர்கள் ஒவ்வொரு ஆளையும் தெரிந்திருக்க வேண்டும் என்னும் அரசியல் சித்தாந்தத்தை உணர்ந்த உத்தமர் காமராஜர். என்றோ பார்த்து அறிமுகமான ஒருவர் கூட்டத்துக்குள் எங்கேனும் நின்றால் கூட பெயர் சொல்லி அழைக்கும் நினைவாற்றலே ஆளவந்தவர்களிடம் அவசியம் இருக்க வேண்டும். இது பெருந்தலைவரிடம் இருந்தது.

செயல் வீரர்

posted in: Leadership | 0

காமராஜர் கட்சியில் தலைவராக இருந்தபோது முழுநேரத் தொண்டராவே இருந்தார். செயல், செயல், செயல் எனச் செயலில் கரைந்ததால் கர்ம வீரர் என்று புகழப்பட்டார் காமராஜர். ‘நாட்டுக்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்று ‘பாரதி’யின் இலக்கணம் காமராஜருக்கு மட்டுமே பொருந்தும்.

கல்வித் தடை கடக்கும் வழி

posted in: Education, Leadership | 3

கல்வியே மனித மனங்களைக் கனிய வைக்கும், அறிவைத் துலக்கி அகத்துள் ஒளியேற்ற உதவும். மனிதன் கல்வியறிவு பெறும்பொதுதான் மகத்துவம் பெறுகிறான். உலகை கண்களால் காணும் முன்பே கல்வி காட்டிவிடுகிறது. எனவேதான், ”கல்வியே அறிவுச் சன்னலாகி அகவீட்டை அலங்கரிக்கிறது” என்றான் ஓர் அறிஞன்.

மக்கள் தலைவர்

posted in: Leadership | 0

மக்கள் தங்கள் மனங்களில் பத்திரப்படுத்திக் கொண்ட மகத்தான மக்கள் தலைவர் காமராஜர். இந்தியாவில் இன்று வரை உள்ள எண்ணற்ற அரசியல்வாதிகளுள் மண்ணில் எந்த மூலையிலும் ‘பத்தரம்’ பதியாத அரசியல்வாதியாக காமராஜர் வாழ்ந்ததால்தான், மக்கள் அவரைத் தங்கள் மனங்களில் பத்திரப்படுத்திக் கொண்டார்கள். யாருக்கு எது தேவை என்று தேடித் தேடி ஒசையின்றி உதவி செய்யும் உத்தமர் காமராஜர். … Continued