கல்வி மேம்பாடு
இலவச கல்வி முதலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த எல்லா இலவச கல்வி சலுகையும், பின்பு மிகவும் பின் தங்கிய மாணவர்களுக்கும், அதேபோல் தாழ்த்தப்பட்டவராக இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியவர்களுக்கும் அளித்து 1957- 58-ல் காமராஜ் அரசு ஆணையிடப்பட்டது. இதனால் மேலும் பலர் இலவச கல்வி உட்பட ஏனைய பல சலுகைகள் பெற்றனர். பின்பு ஆண்டு … Continued
கல்விக்கண் கொடுத்தவர்
ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர். “தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார். “எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்? உங்கள் ஊரில் … Continued
மாலை குவிந்தது
சென்னை மாநிலக் கல்வித்துறை நூற்று இருபத்தேழு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதன் முதல் நூற்றாண்டு முடியும்போது, முதன் முதலாக, தமிழன் ஒருவனுக்கு – எனக்குப் பொதுக்கல்வி-இயக்குநர் பதவி கிட்டியது. பிறப்பால் தமிழனாக இருப்பதோடு, தமிழ் பேசும் தமிழனாகவும் இருப்பதால், என்னைப் பல ஊர்களுக்கும் அழைத்தனர்.