கல்வி மேம்பாடு

posted in: Education | 3

இலவச கல்வி

முதலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த எல்லா இலவச கல்வி சலுகையும், பின்பு மிகவும் பின் தங்கிய மாணவர்களுக்கும், அதேபோல் தாழ்த்தப்பட்டவராக இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியவர்களுக்கும் அளித்து 1957- 58-ல் காமராஜ் அரசு ஆணையிடப்பட்டது. இதனால் மேலும் பலர் இலவச கல்வி உட்பட ஏனைய பல சலுகைகள் பெற்றனர். பின்பு ஆண்டு வருமானப் ரூ.1200 க்கு உள் இருக்கக்க்கூடிய குடும்ப மாணவர்களுக்கு உயர் கல்வி வரை இலவசக் கல்வி அளித்து 1960-ல் காமராஜ் அரசு ஆனை பிறப்பித்தது. அதுவே 1962-ல் அனைவருக்கும் உயர்நிலைப் பள்ளி வரை இலவசக் கல்வி வழங்கப்பட்டது.

கட்டாயக் கல்வி

1960-ல் மாநிலத்தின் 3-ல் 1-பகுதியில் 6- 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டாய கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1961-ல் நிலத்தின் இன்னோறு 3-ல் ஒரு பகுதியில் கட்டய கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இறுதியாக 1962-ல் மீதமிருந்த ஒரு பகுதியிலும் கட்டாய் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.

1960 முதல் கல்வித்துறை மூலகாகவே சீருடை வழங்க ஏற்பாடு செய்தார். பொது மக்கள் நல்லுதவியுடன் செயல்பட்ட சீருடைத்திட்டம் 5 ஆண்டுகளில் மும்மடங்காகியது. இதன் மூலம் பள்ளிப் பிள்ளைகளிடையே காணப்பட்ட ஏழை பணக்காரன் என்கிற ஏற்றத்தாழ்வை ஒழித்து சமதர்ம சமுதாயம் உருவாக வழி வகுத்தார்.

கல்வி மேம்பாடு

காமராஜ் ஆட்சிப் பொறுப்பேற்ற 1954-ல் 6 வயதிலிருந்து 11 வயது வரையிலான பள்ளி பிள்ளைகளிள் 45% மட்டுமே பள்ளிக்கு சென்றனர். ஆனால் 1963-ல் அதே வயது பிரிவை சேர்ந்த 80% குழந்தைகள் பள்ளிக்கு சென்றனர். இந்தியா விடுதலை பெற்ற போது அப்போதைய ஒருங்கினைந்த சென்னை மாநிலத்தில் இருந்த தொடக்கப் பள்ளிகள் எண்ணிக்கை 15,303. அதுவே தனி மாநிலமாக அமைந்த பின்னர் 1963-ல் மொத்தமாக 30,020 தொடக்கப்பள்ளிகளாக வள்ர்ச்சிப்பெற்றது. 1954-ல் 18 லட்சம் சிறுவர் மட்டுமே பள்ளிக்கு சென்றனர் என்ற நிலை மாறி 1963-ல் பள்ளிக்கு சென்ற சிறுவர்களின் எண்ணிக்கை 47 லட்சமாக (47,44,091) உயர்ந்தது. இடைநிலை கல்வியை பொறுத்த வரை 1954-ல் 1006 பள்ளிகளில் மொத்தம் 4,89,115 மாணவர்கள் பயின்றனர். இது காமராஜின் ஆட்சியில் ஏறக்குறைய இரண்டு மடங்காகியது. இரண்டு பல்கலைகழகங்கலுடன் 39 கலை, அறிவியல் கல்லூரிகளை 1954-ல் கொண்டிருந்த தமிழ்நாடு 1963-ல் அதே இரண்டு பல்கலைகழகங்கலுடன் மொத்தம் 63 கலை, அறிவியல் கல்லூரிகளுடன் உயர்ந்து இருந்தது. 1954-ல் இருந்த 141 ஆசிரியர் பயிற்ச்சிப் பள்ளிகள் காமரஜின் ஒன்பது கால ஆண்டு ஆட்சியில் 209-ஆக உயர்ந்தது.

கல்வித் துறையில் காமராஜ் செய்த புரட்சி, தமிழ் நாட்டு மக்களிடையே கல்வி கற்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் ‘ஆரம்ப பள்ளிகள் இல்லாத கிராமமே இல்லை” என்கிற நிலை காமராஜ் காலத்தில் உருவாயிற்று. தேவையான அளவு உயர் நிலை நவீன வசதிகளுடன் கூடிய உயர்நிலைப் பள்ளிகள், ஐந்து மைல் தூரத்திற்கு ஒன்றாக அமைந்தன.

ஆசிரியர் நலன்:

மாணவர் நலன்களில் அக்கரை உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டுமெனில், கற்றுதரும் ஆசிரியர்களின் மன நிறைவு முக்கியப். அதற்காக அவர்களின் நலன் காத்திட பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. முக்கியமாக ஆசிரியர்களுக்கான் மூன்று நலன் திட்டம் – (i)நிரந்தர வைப்பு நிதி, (ii)ஓய்வு கால ஊதியம் மற்றும் (iii)ஆயுள் காப்பீடு. ஆசியாக் கண்டத்திலேயே, காமராஜ் ஆட்சியில் தான் ஆசிரியர் சமுதாயத்திற்க்கு இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மேலும் சம்பள உயர்வு மற்றும் ஓய்வு பெறும் வயது 55-ல் இருந்து 58-ஆக உயர்த்தப்பட்டது.

பொது நூலக இயக்கம்

ஒரு விழிப்புற்ற சமுதாயத்தின் முன்னேற்ற வேகம் என்பது அந்த சமுதாயத்தின் வெற்றிக்கு வழிகோலாகும். இவற்றையெல்லாம் நன்கு உணர்ந்திருந்த காமராஜ் அரசு, தொடக்க கல்விக்கு அளித்த முன்னுரிமையை நூலக இயக்கத்திற்கும் அளித்தது. தங்கள் ஊர்களில் நூலகம் அமைத்து செயல்பட, நூலகத்திற்க்கு இடம், கட்டிடம், நூல்கல், பொருட்கள், ஆகியவற்றை தருவதற்க்கு பொதுமக்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, நூலகங்கள் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டில் 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்கப்பட்டன. இது தவிர நூல்களை நேரடியாகத் தரும் நோக்கில் 644 நூல் நிலையங்களும் செயல்பட்டன.

3 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *