அரசியல் மேடை நாகரிகத்தின் எல்லை எது?

posted in: admire | 0

சென்னை மெரினா கடற்கரையில் ஒரு தடவை நடந்த பொதுக் கூட்டத்தில் காமராஜர் முன்னிலையில் முக்கியமான தலைவர்கள் பேசத் தொடங்கினர். எங்கிருந்தோ சரமாரியாக விழுந்த கற்களில் இரண்டு பேர் காயமுற்றனர். கூட்டத்தில் பரபரப்பு. காமராஜர் திரும்பிப் பார்த்தார்.

அவரிடம் காட்டுவதற்கு ரத்தம் வழிந்த தொண்டர்களைச் சிலர் மேடைக்கு அழைத்து வந்தனர். காமராஜர் கோபத்துடன் சீறினார்.இங்கே என்ன நாடகமா நடத்தறீங்க? அடிபட்டவனை ஆஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லாமல் மேடையில் என்ன ஷோ காட்டறீங்களா? போங்கப்பா…” என்றார்.

ஒரு தொண்டன் சிந்திய ரத்தத்தைக் காட்டி, கூட்டத்தில் உணர்ச்சியை ஊட்டி அரசியல் நடத்த விரும்பாத அபூர்வமான அரசியல்வாதியை அன்று பலரும் பார்த்தனர்.

அடுத்து… கவிஞர் கண்ணதாசன் பேசுவார் அறிவிக்கப்பட்டது.

ரத்தம் சிந்திய தொண்டரைப்பார்த்து கண்ணதாசன் உணர்ச்சிப் பொங்க பேசினார். அவரது பேச்சு திடீரென காவல் துறை மீது திரும்பியது.

போலீஸ் கமிஷனர் ஷெனாய் மந்திரிகளின் மனைவிமார்களுக்குப் புடவை துவைக்கப்போவது நல்லது என்று கண்ணதாசன் ஆவேசமாக கூறினார்.

அந்த பேச்சை அரசியல் மேடை நாகரிகத்தின் எல்லை மீறப்பட்டதாகக் காமராஜர் கருதினார்.
நீ பேசியது போதும்… உட்காருன்னேன் என்று சொல்லியபடி கவிஞரின் சட்டையைப் பிடித்திழுத்து உட்கார வைத்து விட்டார்.10450685_670141969720868_7232300408733352655_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *