மக்கள் தலைவர்

posted in: Leadership | 0

மக்கள் தங்கள் மனங்களில் பத்திரப்படுத்திக் கொண்ட மகத்தான மக்கள் தலைவர் காமராஜர். இந்தியாவில் இன்று வரை உள்ள எண்ணற்ற அரசியல்வாதிகளுள் மண்ணில் எந்த மூலையிலும் ‘பத்தரம்’ பதியாத அரசியல்வாதியாக காமராஜர் வாழ்ந்ததால்தான், மக்கள் அவரைத் தங்கள் மனங்களில் பத்திரப்படுத்திக் கொண்டார்கள். யாருக்கு எது தேவை என்று தேடித் தேடி ஒசையின்றி உதவி செய்யும் உத்தமர் காமராஜர். … Continued

நலிவு தவிர்க்கும் நகைச்சுவை

posted in: lessons | 0

நகைச்சுவை என்பது சிரிக்க வைத்துவிட்டு கலைந்து போவதல்ல. கேட்கும்போது உள்ளத்தைக் கிள்ளி உதடுகளை விரித்து இழுந்து விழுந்து சிரிக்க வைத்தால் அதற்குப் பெயர் நகைச்சுவை என்கிறோம். தவறு. சரியான நகைச்சுவை என்பது சிரிக்க வைத்து சிரித்தவனை சிந்திக்கவும் வைக்கவேண்டும்.

கருணை மறவர்

posted in: admire, lessons | 0

நேர்மை, நாணயம், நம்பிக்கை மட்டும் அரசியல்வாதிகளிடம் இருந்தால் போதாது. அவர்கள் சிறந்த மனிதாபிமானியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் செயலில் தூய்மையும், செய்கையில் தெளிவும் பிறக்கும். தான் ஒரு சமுதாயக் காவலன் என்ற உள்ளுணர்வு தோன்றும். கட்டுப்பாடு மட்டும் அரசியல்வாதியை உயர்த்தாது. அவர்களிடம் கருணையும் இருக்கவேண்டும். இத்தகைய கருணை மறவராக காமராஜர் திகழ்ந்ததால்தான் இந்திய அரசியல்வானின் இளைய … Continued

விளம்பரத்தை விரும்பாதவர்

posted in: admire, Leadership, lessons | 0

விளம்பரம் இல்லாத பொருள் விற்பனையாவதில்லை. விற்காத பொருள்கூட விளம்பர, உக்தியால் விற்றுத் தீர்ந்து தீர்ந்து போகிறது. அலங்கார வளைவு என்றும், ஆள் உயர மாலை என்றும், கையடக்க நோட்டீஸ்கள், சுவரெங்கும் போஸ்டர்கள் என்றும் சுற்றிச் சுற்றி எங்கு பார்த்தாலும் விளம்பரம்தான்.

மாற்றார் மீதும் மதிப்புடையவர்

posted in: admire, politics | 0

அரசியலில் எதிர்க்கட்சியினர் எதிரணியினர்தானே தவிர எதிரிகள் இல்லை. இந்த உயர்வு இருந்தால் அதைத்தான் ஆரோக்கியமாஉ அரசியல் என்று கூறலாம். அந்த ஆரோக்கியமான அரசியல் நடத்தியவர்தான் காமராஜர். கொள்கையினைப் பகைக்கலாமே தவிர அதைக் கொண்டவர்களைப் பகைக்கக்கூடாது எனும் உயர்ந்த சித்தாந்திகளுடன் உறவாடியவர் இவர். ஆதலால், பெருந்தலைவர் ஓர் உயர்ந்த அரசியல் ஞானியாகவே வாழ்ந்தார்.