பெருந்தலைவர் சிந்திய முத்துக்கள் திருக்குறளைப் போல் ரத்திண சுருக்கமாய்:

posted in: lessons | 0

1. ”ஏழைகளுக்குச் சாப்பாடு போட்டால் அவன் பரம்பரையாகச் சாப்பிட்டானா என்று கேட்பது நியாயமா? ஏழைகளின் குழந்தைகளை வாட விடுவது முறையா? அவர்களைப் படிக்க வைத்தால் தானே முன்னுக்கு வருவார்கள். பணக்காரப் பையன்கள் படிக்கவா நான் முதல் மந்திரியாக இருந்து ராஜாங்கம் நடத்தறேன்?”
2. ”பள்ளிக்கூடங்களைத் திறப்பது பெரிய காரியமில்லை. குழந்தைகளுக்கு நல்ல கல்வி அறிவை ஊட்டித் திறமைசாலிகளாக்க வேண்டும். அதற்குத தகுந்த ஆசிரியர்கள் பொறுப்புடன் நல்ல முறையில் கல்வி புகட்டினால் குழந்தைகளின் அறவு வளரும் பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பித் தான் குழந்தைகளை அனுப்புகிறார்கள்.

3. ”ஒரு யானை அதற்கு ஏற்றபடி சாப்பிடுகிறது. அது சாப்பிடும்பது ஒரு கவளம் சிந்திவிடுகிறது. அந்த ஒரு கவளம் லட்சக்கண்க்கான எறும்புகளுக்கு ஆகாரமாக்க் கிடைக்கிறதே! யானைக்கு ஒரு கவளம் அதன் சாப்பாட்டில் குறைவதால், அது கவலைப்பட வேண்டியதில்லை.
அதே போலத்தான் பணக்கார்ர் கொஞ்சம் வரிப் பணம் கொடுத்தால், அதனால் ஒன்றும் குறைந்து போய் விடாதே! அரசாங்கம் பணக்கார்ர்களுக்கு போடுகிற குறைந்த அளவு வரியைக் கொண்டே, சோற்றுக்குக் கூட இல்லாமல் பிடுங்குகிறோம் என்று பீதியைக் கிளப்ப வேண்டாம்.
பலபேர்களின் பட்டினி தீர அவர்தம் நலவாழ்வுக்கு வழி செய்ய அந்த வரிப்பணம் பயன்படுமே!
4. ”பொருளாதாரத் துறையில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து முன்னேறி இதற்குத் தொழிலும், விவசாயமுமு நல்ல முறையில் வளர்ச்சிப் பெற வேண்டும். அப்போதுதான் தொழில் வாய்ப்புகள் பெருகி, மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.”
5. ”நாட்டில் கவலையற்ற சமுதாயத்தை அமைக்க வேண்டும். அதையும் நாம் வாழ் நாளிலேயே செய்துவிட வேண்டும். உணவு, வீடு, கல்வி, வசதி எதுவும் இல்லை என்ற புகாரே மக்களிடம் இருக்கக்கூடாது”
6. ” மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. அரசியல் தான் நாட்டின் லட்சியத்திற்கு அஸ்திவாரம் எனவே மாணவர்கள் அதைப் பற்றி நன்கு தெரிந்து செய்ய வேண்டும்.
ஆசிரியர்களைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது ஆபத்து. மாணவர்களைக் கொண்டு அரசியல் பலம் பெற நான் விரும்பவில்லை. நாங்கள் மாணவர்களை அரசியலுக்குப் பயன்படுத்துவோம் என்ற சந்தேகம் யாருக்கும் வேண்டாம்.”
7. ”நம் சுகத்தைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. நாம் குழந்தைகளைப்ப பற்றிபக் கவலைப்படவேண்டும். கழந்தைகள் நல்வாழ்வு வாழ வேண்டும். குழந்தைகளுக்கு நிறையப் பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். மதிய உணவு வழங்குகிறோம். ஆணியும் (சீருடை) கொடுக்கிறோம்.”
8. ”நம்மால் நிலையான அரசு அமைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. எப்படியாவது யாரோடு சேர்ந்தாவது ஆட்சியில் பங்கு பெற முயற்சிக்கக்கூடாது.”
9. நாம் நம் உழைப்பைத் தந்து அதற்கு ஊதியமாகப் பெறும் ரூபாய் நோட்டுக்கள் வெறும் காகிதங்களே. ஆனாலும் அதை நிறை மனதோடு ஏற்கிறோம். சேமித்து வைக்கிறோம். எந்த நம்பிக்கையில்?
ஒவ்வொரு காகித நோட்டிலும் நாட்டின் அரசு ஒரு சத்தியப் பிரமாணம் செய்திருக்கிறது. அந்தக் காகிதத்தில் குறிக்கப்பட்டுள்ள தொகையை என்றும் எந்தப் பொருளாக விரும்புகிறோமோ அந்தப் பொருளாகப் பெறும் உரிமை நமக்குத் தரப்பட்டு இருக்கிறது. அரசுகள் மாறலாம். தலைவர்கள் மாறலாம். கொள்கை வேறுபாடுகள்ள அரசுகள் அமையலாம். ஆனால் தலைமை வங்கி (ரிசர்வ் பேங்க்) அல்லது நீதித்துறை அளித்த ‘சத்தியவாக்கு’ என்றும் மாறாது. மாறக்கூடாது.”
10. ”மாணவர்கள் கல்விகற்பது வெறும் அறிவு வளர்ச்சிக்காக மட்டும் பயன்படாமல் நாட்டு முன்னேற்றத்துக்கும் பெரிதும் உதவுகிறது. பல்வேறு விஞ்ஞான தொழில் நுணுக்க நிபுணர்கள் மாணவர்களிடமிருந்து தோன்றி அபிவிருத்தி வேலைகளுக்குப் பயன்பட்டு வருகின்றனர்”
எனினும் நமது வளர்ச்சிக்கு, வேகத்துக்கு அது போதுமானதாக இல்லை. எத்தனையோ பற்றாக்குறைகளைப் போலவே, நிபுணர்கள் பற்றாக்குறையும் உள்ளது. மாணவர்கள் நன்கு கற்று, விஞ்ஞான தொழில்நுட்ப மேதைகளாகி நாட்டுக்குப் பாடுபட வேண்டும்.”
11. சமதர்மம் என்றால் ஏழ்மையைச் சமமாகப் பகிர்ந்து கொடுப்பது என்று அர்த்தமல்ல. மேலும், மேலும் உற்பத்தி செய்தால், அதே சமயத்தில் அதனால் ஏற்படுகின்ற செல்வம் ஒரு ணிலருடைய இரும்புப் பெட்டிகளில் சென்று ஐக்கியமாகி விடாமல், பலருக்கும் பயன்படும் வித்ததில் பரவலாகும்படி பார்த்துக் கொள்ளுதல், இவை தான் சமதர்மத்தின் நோக்கம்.”
12. ”ஜனநாயக சோஷலிசமே இந்திய நாட்டிற்கு என்றும் ஏற்றது. முன்னேற்றம் அடையச் செய்யுற ஒரு காரியத்தை அந்த அம்மா மறு பரிசீலனை செய்யனும். அதி தான் பத்திரிக்ககைகளைத் தண்க்கை செய்யுறதாலே நாட்டிலே நடக்கிற உங்கள் நிலைமை அந்த அம்மாவுக்குக் கூடத் தெரியாமல் போய் விடும். கடைசிலே அது அவுங்களுக்கே ஆபத்தா முடியும்.”
12. ”மக்களுடைய மனதில் அரசாங்கம் என்று ஒன்று தனியாக இருக்கிறது. அரசாங்கமே எல்லாப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது. இந்த எண்ணம் மாற்றப்பட வேண்டும்.”
13. ”நமக்கு நல்ல திறமை இருக்கிறது. ஆனால் நாம் வீணாகச் சோம்பலாகத் திரிகின்றோம். சோம்பலுக்கு இடம் கொடுக்கக்கூடாது. ஏன் ஐயா சும்மா திரிகிறாய் என்று கேட்டால், நம் தலையெழுத்து, நமக்கு இவ்வளவுதான் என்று கூறுகிறோம். இதெல்லாம் வீண் பேச்சு. இப்படிப் பேசிக் கொண்டே இருந்தால் முன்னேற முடியாது.”
14. ”நம் தாய்மார்கள் படித்துவிட்டால், நாட்டிலுள்ள தொந்தரவுகள் நீங்கி விடும். நாம் சம்பாதித்த சுதந்திரமும் நல்ல முறையில் பாதுகாக்கப்படும்.”
15. ”சம்பாதிக்கட்டும். வரி கொடு என்றால் மாட்டேன் என்பதா? நாங்கள் ஆலையை மூடி விட்டால் சம்பாதிக்க் முடியுமா? மின்சாரத்தை நிறுத்தி விட்டால் தொழில் பங்கை முடியுமா?
ஆகவே, அதிர்ஷ்டம், சாமர்த்தியம் என்றெல்லாம் சொல்லாமல் வரி கொடுங்கள் என்று கேட்கிறோம். இது தவறா? மாடு மேய்ப்பவன் அப்படியே இருக்கட்டும் மென்று சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்த நாங்கள் தயார் இல்லை. அதற்கு வேறு ஆளைப் பாருங்க”
16. நாட்டிலே பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும். கிராமங்ள் முன்னேறும். ஏன், தேசமே முன்னேறும்.”
17. ”ஒருவன் பட்டினியாக இருக்கிறான் என்றால் அவன் யார்? என்ன சாதி? என்றெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?
திராவிடன் பசி ஒருவிதமாகவும் ஆரியன் பசி வேறுவிதமானதாகவுமா இருக்கும்? பட்டினி எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆகவே பாரபட்சமின்றி எல்லோரது பட்டினியையும் போக்க வேண்டும்.”
18. ”இந்தி மொழிகள் விஷயத்தைப் பொறுத்தவரை இந்தி மோழி பேசுகிறவர்கள்ப் பற்றி நாம் அறிந்து கொள்ள நாம் இந்தி மொழியைப் படிக்கணும். நம்மைப் பற்றி அறிய அவர்கள் நம் தமிழ் மொழியைப் படிக்கணும்.”
19. ”பழைய காலத்தில் காசியாத்திரை போவதென்றால் சிரமம். பல மாதங்கள் ஆகும். இப்போது டில்லிக்கு போக வேண்டுமானாலும் சீக்கிரத்தில் போகலாம். ரயில், மோட்டார், ஆகாய விமானம் எல்லாம் இருக்கின்றன.
அதாவது நாட்டில் இன்று பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதை உணர்ந்து நாம் வாழவேண்டும். ஆனால் சிலர் இதை உணர மறுக்கிறார்கள். கட்டை வண்டியில் சவாரி செய்த காலம் தான் உயர்ந்தது என்கிறார்கள். அவர்களை எப்படித் திருத்துவது?”
20. ”வயிற்றுக்கு முதலில் கஞ்சி கிடைத்தால் போதும். பாயசம், வடை எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். பட்டினி இருப்பவர்கள் என் மேலே கோப்ப்படுவது எனக்குப் புரிகிறத். ஆனால், தினசரி மூன்று வேளை வயிறாரச் சாப்பிட்டுக் கொண்டு, அதே சமயத்தில் பாயசத்துக்குப் பால் இல்லை, அல்வாவுக்குச் சர்க்கரை இல்லை என்பவர்கள் கோப்ப்படுவது தான் எனக்குப் புரியவில்லை.”
21. ”புதிய சமுதாயத்தை அமைக்க வேண்டுமானால் பழைய பழக்க வழக்கங்களை அப்படியே வைத்துக் கொள்ள முடியுமா? அதற்காக்ப் பழையதெல்லாம் தப்பு என்று சொல்ல்லாமா? கூடாது. ஒரு புது வீட்டுக்குக் குடித்தனம் போகும்போது, பழைய டின், துடப்பம், ஓட்டை உடைசல் எல்லாவற்றையும் விட்டு விட்டு நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு போகிறோம். அல்லவா? அது போல் பழமையில் இருக்கிற நல்ல விஷயங்களை எல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
22. ”நமது சமுதாயத்தில் உழைப்புக்கு மரியாதை இல்லை. உழைப்பவனைக் கூலிக்காரன் என்று கூறுகிறோம். ஆனால் கடத்தல்காரனை, ”கடத்தல் மன்ன்” என்று அரசர் அந்தஸ்த்தில் அழைக்கிறோம்.”
23. பல்வேறு மொழிகள் பேசுகிறவர்களும் பழக்க வழக்கங்கள் உள்ளவர்களும் இருப்பதினால் ஒரு நாட்டை வெவ்வேறு பிரிவுகள் என்று சொல்லவோ, பிரிக்க வேண்டும் என்று சொல்லவே முடியாது.”
24. ”என்னால் சார்ந்திருக்க முடியாது. இப்போதே பதவியில் உட்கார வேண்டும் என்றால் முடியுமா? நெல்லை இன்றைக்கு விதைத்து விட்டு, நாளையே அறுவடை செய்ய வேண்டுமென்று அரிவாளை எடுத்துக்கொண்டு போய் நின்றால் நடக்குமா?”
25. ”எப்போதும் தேவை ஏற்படுவது வளர்ச்சிக்கு அடையாளம் முன்பு எல்லாம் கிராமங்களில் சட்டை கூடப் போட மாட்டார்கள். இப்போது அப்படி இல்லை. எல்லோரும் சட்டை போடுகிறார்கள்.
ஆகவே நிறையத் துணி வேண்டியிருக்கிறது. துணிகளைத் தயாரிக்க ஆலைகள் வைக்க வேண்டும். ஆகவே தேவை ஏற்படுகிறதென்றால் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.”
26. ”வட இந்தியாவையும் நான் பார்த்திருக்கிறேன். தமிழ் நாட்டிலோ மூலைமுடுக்குகளில் உள்ள எல்லாக் கிராமங்களையும் கண்டு இருக்கிறேன். இந்தியா ஒரே தேசம்தான் ஒரே சக்திதான்.”
27. ”நேற்று, இன்று, நாளை, முக்காத்தையும் சரித்திரத்தையும், நாம் உணர வேண்டும். நாம் மட்டும் வளர்ந்தால் போதாது. வாலிப வயதினருக்கும் உணர்த்த வேண்டும்.
28. இது ஜனநாயக நாடு. இங்கே எஜமானர்கள் யார்? வாக்காளப் பெருமக்கள்தான் அவர்கள் தான் உண்மையான எஜமானர்கள்.”
29. கல்வி நாட்டிற்கு அவசியம் தேவை. ஆனால், கற்றவர், கல்லாதவர் என்று ஒரு புது சாதி உண்டாகிவிடக்கூடாது.”
30. ”தண்ணீர் கீழ்நோக்கி ஓடுகிறது. திடீரென்று அது நின்று விட்டால் தேக்கம் ஏற்படுகிறது. அதைப் பகிர்ந்து கொடுக்கவேண்டும். அதேபோல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருகும் காலத்தில் அந்த வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேங்கி விடாமல் பிரித்து தர வேண்டும். அப்படிச் செய்யும் போது கோப்ப்படுவதற்கு என்ன இருக்கிறது?”
31. ”சமதர்மத்தில் என்ன கெடுதல் இருக்கிறது? பட்டினியாக இருப்பவர்கள் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பது? ஒரு சிலர் செலவத்திலும் இருக்கலாமா? இந்த வேறுபாடு போய் எல்லோரும் சம்மாக இருக்க வேண்டும் என்பது தான் சமதரம்ம் அதில் என்ன தப்பு?”
32. ”உங்களைக் ‘கேடிலாக்’ காரில் போக வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால், போக்குவரத்து நெரிசலின் போது, நாலு தெருச் சந்திப்பில் வெறும் நூறு ரூபாய் சம்பளம் வாங்கும் டிராபிக் கான்ஸ்டபிள் நிறுத்து என்றால் கேட்கிறீர்களே! அவன் நிறுத்தி வழியமைக்கக் குடுக்கலேன்னா, நீங்களும் உங்க காரும் நொறுங்கிப் போயிடுமேன்னேன். அதே போலத் தான் சமூகத்திலும் சில கட்டுப்பாடுகள் தேவைன்னு நாங்க சொல்கிறோம்”
33. ரூபாய்க்கு மூணு படி அரிசி போடுவோம்னு சில படிச்ச தலைவர்களே பேசறாங்க. அது முடியுமான்னு நானும் பல பொருளாதார நிபுணர்களைக் கேட்டேன். அவர்கள் அது சாத்தியமே இல்லேங்குறாங்க. பாமர ஜனங்களின் ஓட்டுக்களை விக்குறத்துக்குப் படிச்சவங்க இப்படிப் பொய் சொல்லலாமா?
34. ” வசதியாக வீடு கட்டிக் கொள்கிறவர்கள், தங்கள் வீட்டு வேலைக்கார்களுக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று சட்டம் போடவேண்டும். இல்லா விட்டால் குடிசைப் பிரச்சனை தீராது.”
35. ”கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, இது நமது நாடு. நாம் எல்லோரும் இந்தியர்கள என்ற உணர்ச்சி வேண்டும். தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்ளலாம். ஆனால் இந்தியன் என்றால் இன்னும் அதிகமான பெருமை கொள்ள வேண்டும். இந்தியா வாழ்ந்தால் தான் தமிழ் நாடும் வாழும்.”
36. பதவி என்பது யாருக்கும் சொந்தமானதல்ல. அது என்ன தனி உடைமையா? கிடையவே கிடையாது. மந்திரி பதவி பரம்பரைப் பாத்தியதை அல்ல. மகாராஜாக்கள் பதவி போன்றதும் அல்ல. மக்கள் ஒத்துழைக்கும் வரை மட்டுமே பதவி நீடிக்கும்.”
37. ”நாட்டில் உள்ள பஞ்சம், பசி, பட்டினி, பிணி, வேலையின்மை ஆகியவற்றைப் போக்குவதி ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமான வேலை அல்ல. அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களுடைய பிரச்சினை தேசியப் பிரச்சினை ஆகும்.”
38. ”கடவுளுக்கு தேங்காய் உடைத்துப் பூமாலை சாத்தி பூஜை செயதால் மட்டும் போதும். அவர்கள் சும்மா இருந்து விடுவார். நாம நினைத்ததைச் செய்து கொண்டே போகலாம் என்று எண்ணக் கூடாது.”
39. ”கோடி ரூபாய் வைத்திருப்பவனைக் கோடீஸ்வரன் என்கிறோம். பணமு படைத்தவன் என்பதற்காக ஒருவனை ஈஸ்வரனாக்கி கடவுளாக்கி விடும் இந்நப் புத்தி சமுதாயத்துக்கு எப்படி நன்மை தரும்?”
40. ”நாணயக் குறைவால் தொழில்கள் கெடும். தாங்கள் காட்டும் மாதிரிப் பொருளகளையும் போலவே சரக்கை அனுப்ப வேண்டும். மாதிரி நன்றாகவும், சரக்கு மோசமாகவும் இருக்கக்கூடாது. இதுவே வணிகர்களுக்கு நான் கூறும் அறிவுரை.”
41. வயோதிக காலத்தில் வேலை செய்ய இயலாமல் போய்விடும். நம கதி என்ன ஆகும் என்ற பயம் முதியவர்களுக்கு உண்டாகிறது. அவர்களுடைய இந்த அச்சத்தை நாம் போக்க வேண்டும்.”
42. ”மந்திரியாக இருப்பது மாலை வாங்கிக் கொண்டு சுற்றுவதற்கல்ல. நம்மை நம்பி ஆட்சியை ஒப்படைத்த மக்கள் அனைவருக்கும் சேவை செய்வதற்காகத்தான்.”
43. இவ்வளவு செய்தும் குழந்தைகள் போல இவனும் அப்பபடியே இருக்க வேண்டுமானால் அரசாங்கம் எதற்கு? மந்திரிகள் எதற்கு? பலம் படைத்தவர்கள் அதிகாரம் தானே இருக்க வேண்டும்?”
44. ”பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்று சொன்னாங்க். அப்போதைக்கெல்லாம் நான் நம்பலே. ஆனால், இப்பத் தான் தெரியுது. பணம், பாதாளமென்ன. அதுக்குக் கீழே வரைக்கும் கூட பாயுமின்னு.”
45. ”ஏதோ சில கட்சிகள் கூடிக் கூட்டாளி அமைத்துத் தேர்தலில் வெற்றி பெற்றால் நிலையான அரசாங்கம் எப்படி அமையும்? சர்க்கசில் சிங்கம், புலி, கரடி, குரங்கு, நரி ஆகியவை கூண்டில் அடைபட்டு அடங்குவது போல, ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கொள்கைகளை உடைய கட்சிகளது கதம்ப சர்க்கார் தானே நடக்கும்? நாட்டில்அமைதியும் ஒழுங்கும் இருக்குமா? அவர்களது பிரச்சினையைக் கவனிக்க முடியுமா? பொது மக்கள் யோசிக்கவேண்டும்.”
46. ”நாமெல்லோரும் பெரியவர்களாகி விட்டோம். நமக்குப் படிப்பு வராது. நம்முடைய குழந்தைகளாவது படிக்கட்டும். அவர்களுக்காவது எது நியாயம், எது அநியாயம் என்று தெரியட்டும். அதற்காகத் தான் நாங்கள் நிறையப் பள்ளிக் கூடங்களைத் திறக்கிறோம். எல்லோரும் படிக்க வசதி செய்து கொண்டு இருக்கிறோம்.
47. ”ஏழைகள் கையில் பணப புழுக்கம் நன்றாக இருந்தால் தான் நாடு நல்ல படியாக இருக்க முடியும். புதிய தொழிற்சாலைகளைக் கட்ட முடியும். ஏழைகள் நிறைய காப்பி, டீ சாப்பிடுவதால் சர்க்கரை மிகுதியாகத் தேவைப்படுகிறது. உடனே சர்க்கரை ஆலை வைக்கிறோம். ஆக ஏழை கையில் பணமிருந்தால் தான் வாழ்க்கை தரம் உயரும். தொழில்கள் வளரும்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *