நாகபுரி கொடிப் போராட்டம்

posted in: Leadership | 2

1926 – ம் ஆண்டு நாகபுரிக் கொடி ஏந்திச் செல்லக்கூடாது என்று அரசு தடைபோட்டிருந்தது. அந்தத்டையை மீறுமாறு தொண்டர்களுக்கு காமராஜ் உத்தரவிட்டார்.

தேசமெங்குமிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் – அலை அலையாகப் புறப்பட்டு வந்து நாகபுரிக் கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைப்புகுந்தனர்.


நாகபுரிக் கொடிப் போராட்டத்திற்குத் தொண்டர்களை அனுப்பும் பொறுப்பினைக்காமராஜ் ஏற்றுச் செயற்பட்டார்.

காமராஜ் திருச்சியில் முகாம் ஒனுற் அமைத்துக்கொண்டு நாகபுரிப் போராட்டத்துக்கு தொண்டர்களை அனுப்பி வந்தார்.

கடைசியாக காமராஜரே, கொடிப்போராட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தாமே புறப்பட்டுச் சென்றார்.

அவர் போராட்டக்களத்தைச் சென்றடைவதற்குள் கொடிப்போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது. அரசு தடையைத் திரும்ப몮பெற்றுக்கொண்டுவிட்டது.

பாரத மக்கள் வாள் ஏந்திச் செல்வதைத் தடுக்கும் சட்டம அப்பொழுது நடைமுறையில் இருந்தது.

வாள் ஏந்திச் செல்வது பாரத மக்களின் உரிமை என்றும் அதைத்தடுக்கும் அரசு உத்தரவு பாரத மக்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்துவதாக்க்கூறி ஜெனரல் அவாரி என்பவர் வாள் போராட்டம் ஒன்றைத் தொடர்ந்தார்.
பாரதமெங்கும் அந்தப் போராட்டத்தின் பிரதிப்பலிப்பைக் காணமுடிந்தது.

தமிழ்நாட்டில் வாள் போராட்டத்தை காமராஜ் முன்னின்று நடத்தினார்.

வாள் தாங்கிய காங்கிரஸ் தொண்டர்கள் தெருக்களில் வீறுநடை போட்டனர்.

அந்தச் சமயத்தில் சென்னையில் சர்.சி.பி. ராமசாமி அய்யர் சட்ட மந்திரியாக இருந்தார். வாள் போராட்டம் தீவிரமடைவதைத் தடுக்கும் நோக்கத்தில் சர். சி.பி. ராமாசாமி அய்யர் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.

மலையாளத்தில் மலபார் என்ற பகுதியைத் தவிர தென்னகத்தில் எங்கும் யாரும் வாள்எடுத்துச் செல்ல்லாம் என்று அனுமதி கொடுத்தது புதுச் சட்டம்.

வாள் போராட்டத்தின் துவக்கத்திலேயே காமராஜ் வெற்றியைச் சந்தித்துவிட்டார்.

காந்திஜி ஒத்துழையாமை போராட்டத்தைத் திடீரென நிறுத்திக்கொண்டதற்கு முக்கிய காரணம் ஒத்துழைமைப்போர் என்ற பெயரில் சிலர் வன்முறைச் செயலில் ஈடுபட்டதுதான்.

ஒத்துழையானை இயக்கம் நிறுத்தப்பட்டு விட்ட காரணத்தால் காங்கிரஸ் தொண்டர்கள் வட்டாரத்தில் பெருஞ் சோர்வு தென்பட்டது.

அந்தச் சந்தர்பத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும்ப ஆட்சிப் பொறுப்பினை ஏற்குமாறு பிரிட்டிஷ் ஆடிச் தரப்பில் சொல்லப்பட்டது.

ஆடிச்க்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்திவிட்ட பிறகு ஆட்சியினரின் அழைப்பை ஏற்று அதிகாரப் பொறுப்பை ஏற்கலாமா என்பது குறித்து காங்கிரஸில் வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்தன.

சட்டசபையில் பங்கெற்று சிறுகச் சிறுக அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று மோதிலால் நேரு. சி.ஆர். தாஸ் போன்ற் தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர்.

இந்தக் குழுவினர் தங்களுக்கென ஓர் அமைப்பினை அமைத்துக்கொண்டு அதற்கு ‘சுயராஜ்யக்கட்சி’ என்று பெயர் சூட்டினர்.

‘சுயராஜ்யக்கட்சி’க்கு தமிழகத்தில் சத்திய மூர்த்தியும், சீனிவாச அய்யங்காரும் பொறுப்பேற்றுச் செயற்படுத்தினர்.

சட்ட சபைகளை பகிஷ்கரிக்க வேண்டும் என்று குழுவில் முக்கியமாக ராஜாஜிபோன்ற தலைவர்கள் இருந்தார்கள்.

ராஜாஜி திருச்செங்கோடு ஆசிரமத்திற்குச் சென்று தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, கதர்ப்பிரச்சாரம் போன்ற நிர்மானப்பணிகளில் ஈடுபட்டார்.

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *