காங்கிரஸ் செயலாளரானார்

posted in: politics | 1

1932 – ம் ஆண்டு பாரதமெங்கும் சட்டசபைத் தேர்தல்கள் நடத்துவது என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்து அதற்கான ஆயத்தங்களைச் செய்யத்துவங்கியது.

நேருஜி அப்பொழுது அகில இந்தியக்காங்கிரஸ் தலைவராக இருந்தார்.

காங்கிரஸ் கட்சித் தேர்தலில் போட்டியிடுவதை அவர் விரும்பவில்லை. எனினும் பெரும்பான்மையினர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவான கருத்தை தெரிவித்ததால் நேருஜி அதனை ஏற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபனத் தேர்தல் 1936 – ல் காரைக்குடியில் நடைப்பெற்றது.

தலைவர் தேர்தலில் முத்துரங்க முதலியாரும் சத்தியமூர்த்தியும் போட்டியிட்டனர்.

சத்தியமூர்த்தி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சத்தியமூர்த்தி காமராஜை கட்சியின் செயலாளர் பதவிக்கு நியமித்தார்.

1936 – ம் ஆண்டில் நேருஜி தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்தார்.

1937- ம் ஆண்டில் சென்னை மாநில சட்டமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்றது.

காமராஜ் விருது நகர் தொகுதியிலிருந்து போட்டியிட்டார்.

மக்கள் அந்தத் தேர்தலில் காமராஜைப் போட்டியின்றி தேர்ந்தெடுத்தனர்.
நடைபெற்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பெரு வெற்றி பெற்று ராஜாஜி தலைமையில் மந்திரி சபை அமைத்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்

1940 – ம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரா கட்சியின் தலைவர் தேர்தல் வந்தபோது காமராஜ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சி.பி. சுப்பையாவைத் தோற்கடித்து காமராஜ் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவரானார்.

1940 – ம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரான காமராஜ் ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்து அந்தப் பதவியை வகித்தார் என்பதிலிருந்து காங்கிரஸ் வட்டாரத்தில் காமராஜருக்கு இருந்த பெரும் செல்வாக்கினை விளங்கிக் கொள்ளலாம்.

போர் முயற்சிகளுக்கு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதிலைலை என்று அகில இந்திய காங்கிரஸ் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்திற்கிணங்க ராஜாஜி தலைமையிலிருந்த தமிழ் நாட்டு அமைச்சரவை ராஜினாம செய்தது.

இரண்டாவது உலகப்போர் நடந்துக் கொண்டிருந்த சமயம் அது. போர் முடிந்த பிறகாவது பாரத்த்திற்கு விடுதலை தருவதாக வாக்களித்தால் யுத்த முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்குவதாக காங்கிரஸ் கமிட்டியும் காந்திஜியும் கூறி யோசனையை பிரிட்டிஷ் ஆட்சி ஏற்றுக்கொள்ளவில்லை.

அதனால் தனிநபர் சத்தியாக்கிரகத்தை துவக்கினார்

காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொண்டர்கள் மட்டுமே அந்த சத்தியாக்கிரகத்தில் பங்கு பெற அனுமதிக்கப்பட்டார்கள்.

முதல் சத்தியாக்கிரகியாக அறிவிக்கப்பட்டவர்தான் ஆசாரிய வினோபா பாவே.

யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த்தற்காக இந்தியப் பாதுகாப்புச்சட்டப்படி 1940-ம் ஆண்டு டிசம்பர் மாதம் காமராஜர் கைது செய்யப்பட்டார்.

அப்போது சென்னை கவர்னராக சர் ஆர்தர் ஹோல் என்பவர் பணியாற்றக் கொண்டிருந்தார்.

யுத்த நிதி திரட்டுவதற்காக அவர் தமிழ் நாடு முழுவதும் பலதடவை சுற்றுப்பயணம் செய்தும் எதிர்பார்த்த அளவுக்குபணம் வசூல் ஆகவில்லை. இதற்குக் காரணம் காமராஜர்தான் என்று கவர்னர் நினைத்தார்.

அவர் கைது செய்யப்பட்டதற்கு அதுதான் முக்கிய காரணம்.

உண்மையில் அப்போது காமராஜர் சத்தியாக்கிரகத்தில் இறங்கவில்லை. தமிழக சார்பில் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடக் கூடிய தொண்டர்களின் பட்டியல் ஒன்றை காந்திஜியின் அங்கீகாரத்துக்காக காமராஜர் எடுத்துச் சென்ற சமயம் ரயிலில் அவரைக்கைது செய்தார்கள்.

நகராட்சி மன்றத் தலைவர்
காமராஜர் சிறையில் இருந்த சமயம் விருதுநகர் நகராட்சிக்கு தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் வெற்றிப்பெற்றது. சிறையிலிருந்த காமராஜரே நகரமன்றத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1941 – ஆம் ஆண்டு காமராஜர் விடுதலை செய்யப்பட்டார். அதுவரை விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவர் பதவி காமராஜருக்காகக் காத்திருந்தது.

சிறையிலிருந்து விடுதலையாகி வந்த காமராஜர் நகராட்சி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தலைவர் பொறுப்பில் அவர் அமர்த்தப்பட்டார்.

கொஞ்ச நேரம் நகராட்சி மன்றத்தக்குத் தலைமைதாங்கி நிகழ்ச்சிகளை நடத்திக்கொடுத்த பின்னர் காமராஜர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்து விட்டார்.

விடுதலைப்போராட்டம் ஒரு முடிவுக்கு வருவதற்குள் எந்தச் சிறிய பதவியை ஏற்றுக்கொண்டாலும் அது சுதந்திரப் போராட்ட முயற்சிகளுக்கு இடையூறாகவே இருக்கம் என்று காமராஜர் கருதியதே ராஜினாமாவுக்குக் காரணம்.

பொதுவாக பதவி ஆசை நோக்கத்தோடு தாம் அரசியலில் இல்லை என்பதை நிரூப்பபதாகவும் அந்த நிகழ்ச்சி அமைந்தது எனலாம்.

விடுதலைப்போராட்டம் மக்கள் தழுவிய இயக்கமாக பிரிட்டிஷ் ஆட்சியினர் பாரத்த்தை இனி நெடுங்காலம் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்பதை உணர்ந்தனர். அதனால் ஏதோ ஒரு வித்த்தில் காந்திஜியுடன் சமரச உடன்பாடு காண்பது என்று முடிவுக்கு வந்தனர். சமரச பேச்சு நடத்துவதற்கென பிரிட்டிஷ் ஆட்சி இங்கிலாந்திலிருந்து கிரிப்ஸ் என்பவர் தலைமையில் ஒரு தூதுக் குழுவை பாரத்த்திற்று அனுப்பி வைத்தது.

பாரத்த்தை துண்டாக்க வேண்டும் என்பது கிரிப்ஸ் திட்டத்தின் அடிப்படையாக இருந்ததுமட்டுமன்றி முழுச் சுதந்திரத்திற்கு அது வழிகோலவில்லை.

ஆகவே கிரிப்ஸ் தூது தோல்வியில் முடிந்தது. கிரிப்ஸ் இங்கிலாந்து திரும்பி விட்டார்.

கிரிப்ஸ் தூது தோல்வியில் முடிந்தை ஒட்டி சுதந்திரப் போராட்டத்திற்கு இறுதியான தீவிர உருவம் கொடுப்பது என்று காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்தது.

1942 – ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி பம்பாயில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் கிமிட்டி பிரிட்டிஷ் ஆட்சிக்கு இறுதி எச்சிர்க்கை கொடுக்கும் வித்த்தில் ‘வெள்ளையனே வெளியேறு ‘ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

பிரிட்டிஷ் ஆட்சியும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றபட்ட உடனே தனது அடக்குமுறையைத் தீவரப்படுத்தியது. தேசத்தலைவர்களும் முக்கியமான தொண்டர்களும் இரவோடு இரவாக முக்கியமான தொண்டர்களும் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். டில்லி காங்கிரா செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டுத் திரும்பிய காமராஜ் உடனே போலீஸாரிடம் பிடிபட விரும்பவில்லை. தமிழகம் சென்று தாம் கைது செய்யப்ட்டால் தேசிய இயக்கம் தொடர்ந்து நடைபெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளைச் செய்து முடித்துவிட்டுக் கைதாகலாம் என்று எண்ணினார். அதனால் போலீஸார் கண்களில் படாமல் மிகவும் சாமர்த்தியமாகத் தமிழகம் வந்து சேர்ந்தார்.

தமது பணிகள் அனைத்தையும் ஒழுங்காக முடித்த பிறகு காமராஜ் போலீஸாரிடம் நேரில் சென்று தாமாகவே கைது ஆனார்.

1945- ஆம் ஆண்டு எல்லாத் தலைவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது காமராஜரும் விடுதலை செய்யப்பட்டார்.

தமிழகத்தின் முதலமைச்சர்

தேசம் விடுதலை பெற்றபிறகு சுதந்திர பாரத்த்தில் தமிழகத்தின் தனிப்பெரும் தேசியத் தலைவராக இருந்து காமராஜ் தொடர்ந்து நாட்டுக்குச் சேவையாற்றினார்.

1954 – ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 – ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று காமராஜ் தமிழகத்தின் முதலைமைச்சராகப் பொறுப்பு ஏற்றார்.

முதலில் முதலனைச்சர் பொறுப்பை ஏற்றக்கொள்ள அவர் தயங்கினார். பெரிய பதவிப்பொறுப்புகளில் தொடர்ப்பு கொள்ளாமலே வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்றுதான் அவர் திட்டமிட்டார்.

ஆனால் அப்போது அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்த நேருஜி போன்றவர்கள் பிடிவாதமாக வற்புறுத்தவே, முதலமைச்சர் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.

காமராஜ் முதலைமச்சர் பொறுப்பினை மேற்கொண்டதன் மூலம் பாரதம் தழுவி ஒரு புதிய நடைமுறையத் தோற்றிவித்தார் என்றே கூற வேண்டும்.

முதலமைச்சர் போன்ற உயர் அரசாங்கப் பதவி வகிப்பதாக இருந்தால் உயர் கல்வி கற்றிருக்க வேண்டும். நல்ல ஆங்கில மொழி ஞானம் இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.

தமிழ் மொழியைக்கூட சரியாகப் பயில வாய்ப்புக்கிடைக்காத ஒரு சாமானி மனிதரால் முதலமைச்சர் பதவியைச் சீரும் சிறப்புடன் நிர்வகிக்கமுடியும் என்பதைக் காமராஜ் நிரூபித்துக் காண்பித்து விட்டார்.

பெரிய படிப்பாளிகள் பதவியிலிருந்த காலத்துச் சாதனைகளை விட காமராஜர் காலத்தில் சாமானிய ஏழை எளிய மக்களுக்கு நன்மை செய்யும் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

தொடக்கப்பள்ளிக் கல்வி முற்றிலும் இலவசம் என்று ஆக்கியதோடு மாணவர்களுக்கு இலவச மதிய உணவு அளிக்கவும் காமராஊ ஏற்பாடு செய்தார்.

காமராஜ் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் முதலமைச்சராகப் பதவி வகித்த காலம் தமிழகத்தின் பொற்காலம் என்றே கூற வேண்டும்.

அந்த ஒன்பதாண்டுக்கால ஆட்சியில் தமிழகம் மற்ற எல்லா மாநிலங்களக்கும் முன் மாதிரியாக இருந்ததுடன், தொழில், விவசாயம், கல்வித்துறையில் மற்ற மாநிலங்களைவிட பலமடங்கு உயர்ந்து ஓங்கிக் காணப்பட்டது.

பின்னர் காமராஜ் தாமாகவே முதலமைச்சர் பதவியை விட்டு விலகிக்கொண்டார்.

முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவரானார்.

நேருஜியின் மறைவுக்குப் பின் இருமுறை பாரதப் பிரதமர்களைத் தேர்ந்தெடுத்து ‘கிங் மேக்கர்’ என்று எல்லோராலும் பாராட்டப் பெற்றார்.

நாட்டுக்காக – நாட்டு மக்களுக்காக உழைத்த காமராஜர் திடீரென 1975 – ம் ஆண்டு அக்டோபர் 2 ம் நாள் மறைவெய்தினார். அவர் மறைந்தாலும் அவர் செய்த சாதனைகள் சொல்லிச் சென்ற அறிவுரைகள் என்றும் நிலைத்திருக்கும்.

Leave a Reply to Lacey Cancel reply

Your email address will not be published. Required fields are marked *