காங்கிரஸ் செயலாளரானார்
1932 – ம் ஆண்டு பாரதமெங்கும் சட்டசபைத் தேர்தல்கள் நடத்துவது என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்து அதற்கான ஆயத்தங்களைச் செய்யத்துவங்கியது. நேருஜி அப்பொழுது அகில இந்தியக்காங்கிரஸ் தலைவராக இருந்தார். காங்கிரஸ் கட்சித் தேர்தலில் போட்டியிடுவதை அவர் விரும்பவில்லை. எனினும் பெரும்பான்மையினர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவான கருத்தை தெரிவித்ததால் நேருஜி அதனை ஏற்றுக்கொண்டார்.