காமராஜ் முழு மூச்சாக தேச சேவையில் இறங்கினார். காந்திஜியின் தலைமையி நடைபெறும் சுதந்திர அறப்போராட்டத்தில் தீவிர மன பங்கு கொண்டார்.
காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தைத் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்த சமயம் அது. தமிழகத்திலும் மூலைமுடுக்கெல்லாம் ஒத்துழையாமை இயக்கம் முழு வேகத்தில் நடந்துக்கொண்டிருந்தது.
விருது நகர் வட்டாரத்தில் ஒத்துழையாமை இயக்கத்தை காமராஜ் பொறுப்பேற்று மிகவும் சிறப்பாகச் செயற்பட்டார்.
ஒத்துழையாமை இயக்கத்துடன் கதர்ப் பிரச்சாரம் ஆகியவற்றையும் இணைந்து விருது நகர் சுற்றுவட்டார்ம முழுமையிலும் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று செயற்பட்டார்.
விருது நகரைப் பொருத்த மட்டில் ஒரு தரம சங்கட நிலையைக் காமராஜ் சந்திக்க வேண்டியிருந்தது.
பிராமணரலாதாருக்காக என நடத்தப்பட்டு வந்த நீதிக் கட்சி விருதுநகர் வட்டாரத்து நாடார்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது.
நடார்களை கீழ்த்தரப்பட்ட மக்களாக அந்த வட்டாரத்து மக்கள் பிற இனத்தினர் கருதித் தொல்லைகள் இழைத்து வந்தனர். சமுதாயப் பாகுபாட்டைத் தகர்த்தெறிவது நீதிக் கட்சியின் கொள்கைகளில் ஒன்றாக இருந்ததால் நாடார்கள் உற்சாகமாக நீதிக் கட்சியுடன் தொடர்பு கொண்டார்கள்.
நீதிக்கட்சி சுதந்திரப் போராட்டத்திற்கு எதிரான கருத்து கொண்டதாக இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாக அது செயற்பட்டுக் கொண்டிருந்தது.
விருதுநகர் வட்டாரத்து வசதிபடைத்த பெரும்புள்ளிகள் எல்லாம் நீதிக் கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்தனர. அவர்ளால் காமராஊ பல தொல்லை – தொந்தரவுகளுக்கு இலக்காக வேண்டி வந்தது. அவர்கள் காமராஜின் சுதந்திரப்போராட்ட முயற்சிகளுக்குப் பல வகைகளிலும் முட்டுக்கட்டை இட்டனர்.
நாடார்களுக்குச் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதை காமாராஜ் ஒப்புக்கொண்டார். இந்தமாதிரி அநீதிகளுக்கு நாடு சுதந்திரம் பெறாததே காரணம் என்றார் காமராஜ். தேசம் சுதந்திரம் பெற்றுவிட்டால் இந்த மாதிரியான அநீதிகள் தானாகவே நீங்கிவிடும் என்று அவர் வாதாடினார்.
நீதிக் கட்சித் தொடர்புடையவர்கள் அந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. என்றாலும் அவர்களுடைய ஆதிக்கத்தை அந்த வட்டாரத்தில் உடைத்தெறிவதற்காக தீவிரமான பிரச்சாரம் செய்து காமராஜ் அதில் வெற்றி பெற்றார்.
விரல் விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர்கள் தவிர நாடார் வகுப்பு இளைஞர்கள் காமராஜின் பிரச்சாரம் காரணமாக தேசிய இயக்கத்தில் உற்சாகமான தொடர்பு கொண்டனர்.
விருதுநகர் வட்டாரத்திலேயே ஒதுக்கித்தள்ள இயலாத ஒரு தேசிய சத்தியாக காமராஜ் உருப்பெற்று விட்டார்.
ஒத்துழையாமை இயக்கம் மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் சில பல காரணங்களை முன்னிட்டு ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி நிறுத்தி விட்டார்.
காங்கிரா இளைஞர்களுக்கு இது ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்தாலும், காமராஜ் சற்றும் சோர்வடையவில்லை. ஒத்துழையாமை இயக்கம் தவிர மதுவிலக்குப் பிரச்சாரம் போன்றவற்றில் தொண்டர்களை ஈடுபடுத்தினார். காமராஜ் தலைமையிலுள்ள தொண்டர்கள் கள்ளுக்கடை மறியலில் தொடர்ந்து ஈடுபட்டார்.
Leave a Reply