தனக்கென ஏதும் சேர்க்காத
தலைவர் காமராஜரின்
நினைவு தினம் இன்று..
அவரின் மறைவு
தமிழகத்தை நிலைகுழைய
செய்தது என்றால்..
இறந்தபோது அவரின்
சொத்துக்களை கண்டு
தமிழகம் நெஞ்சம் நெகிழ்ந்தது
இறந்தபோது அவரிடம்
இருந்தது சில வேட்டிகளும்,
சில நோட்டுகளும்தான்..
ஒரு
முதல்வன்
எப்படியெல்லாம் வாழ
வேண்டும் என்று
உலகிற்கே பாடமாய்
விளங்கியவர் காமராஜர்..
அப்படிபட்ட நேர்மையான
மனிதரின் ஆட்சி நடைபெற்ற
தமிழகத்தில் இன்று
“66-கோடி ஊழல் லாம்
ஒரு மேட்டரா? -என்று
கேள்வி கேட்கிறான்
நவீன கால தமிழன்..
அவனிடம் நான் கேட்க
விரும்பும் கேள்வி இதுதான்..
66-கோடிலாம் மேட்டரா என்று
காமராஜரும்
கொள்ளையடித்திருந்தால்..
இங்கு யாராவது
படித்திருக்க முடியுமா?
கருணாநிதியை
நியாயபடுத்த ஜெ -வை
கெட்டவராக காட்டுவது,
ஜெ வை நியாய படுத்த
கருணாநிதியை கெட்டவராக
காட்டுவது..
இதைதான் சய்கிறீர்களே..தவிர..
நல்லவராக முயலவில்லை..
அப்படியென்றால் அவர்கள்
நல்லவரில்லை என்று
தெரிந்தும் வாக்களிக்கிறீர்கள்..
முதலில் வருந்துங்கள்,
பின்பு திருந்துங்கள்,
அது தான் இந்த உன்னத
மனிதனுக்கு நாம் செய்யும்
உண்மையான
நினைவஞ்சலியாய் இருக்கும்..
Thanks : Vasanth Mdmk Tharamangalam
Leave a Reply