நான் புது தில்லியில், இந்திய அரசின் கல்வி அமைச்சரகத்தில் இணைக்கல்வி ஆலோசகராக இருந்தேன். அப்போது வட இந்திய அதிகாரி ஒருவர் என் அலுவலக அறைக்கு வந்தார். ஆங்கில நாளிதழ் ஒன்றைக் கையில் கொண்டுவந்தார். அதில், எங்கோ ஒரு மூலையில் பொடி எழுத்தில் போடப்பட்டிருந்த செய்தியொன்றைக் காட்டினார்.
“இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
“இந்த கௌரவப் பட்டயத்தை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்” என்றேன்.
“ஏன் அப்படிச்சொல்லுகிறீர்கள்? தகுதியில்லாமல் இதை கொடுத்துவிடவில்லை.
“பதினான்கு ஆயிரம் தொடக்கப் பள்ளிகளை ஏற்படுத்தினார்; ஆயிரத்து அய்நூறுக்கு மேல் உயர்நிலைப்பளிகளைத் திறந்தார். தொடக்கப் பள்ளிகளில் கூடுதலாக முப்பது இரண்டு இலட்சம் பிள்ளைகளைச்சேர வைத்துவிட்டார். ஒரு நூற்றாண்டின் வளர்ச்சியைப் போல்இரு மடங்கு வளர்ச்சியைய ஒன்பது ஆண்டில் செய்துகாட்டினார். முப்பதாயிரம் பள்ளிகளிலும் பகல் உணவுப் போடச்செய்தார். பரிசுகளையும் பட்டங்களையும் எதிர்பார்த்துச் செய்ததல்ல அவர் செய்த சீரிய கல்வித் தொண்டு. அவருடைய கல்வித் தொண்டிற்கு எத்தனையோ விருதுகளைத் தரலாம்.
“அனைத்திந்திய காங்கிரசு தலைவராய் விளங்கி, இருபெரும் நெருக்கடிகளிலும் இந்தியப் பிரதமரை எளிதில் உருவாக்கிய சிறப்பு அவருடையது. அவருடையகல்விச் சாதனைகளோடு இதையும் எண்ணியே, அவருக்கு கௌரவ டாக்டர்பட்டம் வழங்க முடிவு செய்திருக்கிறார்கள். அதை ஏற்றுக்கொள ஏன் மறுக்க வேண்டம்?” என்று திகைத்தார் வட இந்திய அதிகாரி.
காமராசரை நான் சற்று நெருக்கமாக அறிவேன். அவர் உண்மையான காந்தியவாதி. தாம் செய்து வருகிற நாட்டுத் தொண்டிற்குக் கைம்மாறாகத் தமக்கென்று எதையும் பெற்றுக்கொள்ளமாட்டார்.
“இராஜஸ்தான் பல்கலைக்கழகம், காமராசருக்கு கௌரவ டாகடர் பட்டம் கொடுக்க ஒரு மனதாக முடிவு செய்த்து சாலப் பொருந்தும். காமராசர் அதைத் தொடமாட்டார் என்பதே என் மதிப்பீடு” என்றேன்.
என் மதிப்பீடு தவறவில்லை. காமராசர் வலிய வந்த பட்டத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டார். அப்படியும் ஒருவர்.
காமராசரின் பிறந்த நாளைக் ‘கல்வி நாளாக’க் கொண்டாட வேண்டுமென்று திருவண்ணாமலை நகராடசி மன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. அரசினர் அதை எனக்கு அனுப்பி என் கருத்தைக் கேட்டார்கள். அப்போது அவர் அனைத்திந்திய காங்கிரசு தலைவர்.
“குடியரசுத் தலைவர் டாக்டர் இராதகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் நாளாக்க் கொண்டாடுகிறோம். நேருவின் பிறந்த நாளைக் குழந்தைகள் நாளாக்க் கொண்டாடுகிறோம். அதே அடிப்படையில் அமைந்துள்ளது இந்த ஆலோசனை. இதைத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில்தான் சொல்லியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் கல்வி வெள்ளத்திற்குப் பொறுப்பு காமராசரே.
“இது நிருவாக விஷயமல்லாத கொள்கை பற்றியது. எனவே, அரசு மட்டத்தில்முடிவு செது கொள்ளலாம்” என்று எழுது அனுப்பினேன்.
காமராசர் அப்படி விழாக் கொண்டாடுவதை விரும்பவில்லை. ஆகவே அதன்மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிறகு கேள்விப்பட்டேன்.
Reggie
Kewl you solhdu come up with that. Excellent!