காமராஜ் பின்னாளில் அரசியலில் மிகவும் புகழும் செல்வாக்கும் பெற்ற காலத்திலும் முண்டியடித்துக்கொண்டு தனக்காகப் பதவிகளைத் தேடியலைந்ததில்லை இந்த இயல்பு சின்ன வயதிலேயே அவரிடம் பொருந்தியிருந்தது. என்பதற்கு பள்ளிப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சியொன்று சான்று பகர்கின்றது.
கமராஜ் கல்வி பயின்ற க்ஷத்திரய வித்தியாசாலையில் ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியை விமர்சையாக்க் கொண்டாடுவார்கள்.
விநாய சதுர்த்தி விழாவைக் கொண்டாடுவதற்காக ஒவ்வொரு மாணவரிடம்மு ஐந்து காசு வசூலிக்கப்படும்.
பூஜை முடிந்து பிரசாதம் விநியோகிக்கப்படும்போது மாணவர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்று ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகப் பிரசாதத்தைக் கைநிறையப் பெற்றுக்கொள்வார்கள்.
பிரசாத்த்துக்காக அந்த மாதிரிப் போராட்டம் நடத்துவது காமராஜருக்குப் பிடிக்கவில்லை. அதுமிகவும் கேவலமாகப்பட்டது.
அவசரப்படாமல் ஒரு மூலையில் ஒதுங்கி நின்றார். கடைசியாக மிச்சமிருந்த பிரசாத்த்தில் மிகவும் குறைந்து அளவே அவருக்குக் கிடைத்தது.
மற்ற மாணவர்கள் கை நிறையப் பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்திருக்கும்போது அவர் மட்டும் மிகவும் குறைவாகப் பிரசாதம் வாங்கி வந்திருப்பது பற்றி வீட்டில் கேட்டார்கள்.
மற்ற மாணவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சென்று பிரசாதம் வாங்க் எனக்கு விருப்பமில்லை. பள்ளியில் எல்லா மாணவர்களிடம்ம் ஐந்து காசு வசூலித்தவர்கள் ஒரே மாதிரியாகப் பிரசாதம் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது அவர்கள் தவறுதான் என்றார் காமராஜ்.
அரசியலில் சிக்கலான பிரச்சனைகளை எல்லாம் குறுக்கிடும் போது சற்றும் நிதானமிழகாமல் அவசர உணர்வுடன் அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் காமராஜிடம் அமைந்திருந்தது.
இந்த மாதிரி ஆற்றல் அவர் உடன்பிறந்தே வளர்ந்து வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
இம்மாதிரி நாம் முடிவு கட்டுவதற்கான ஆதாரம் போன்று காமராஜின் சின்ன வயதில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
குளத்தில் நீராடச் செல்வதற்காக கோவில் யானையைக்கொண்டு சென்றார்கள்.
திரும்பி வரும் சமயம் யானைக்கு மதம் பிடித்து விட்டது. அது தறிகெட்டு கண்டபடி அலைய ஆரம்பித்துவிட்டது.
மக்கள் அதுகண்டு வீறிட்டு அலறி திசைக்கு ஒருவராக ஓடி ஒளியத் தொடங்கினர்.
அந்த யானையை வழக்கமாக்க் குளிப்பதற்கு அழைத்துச் செல்லும்போது ஒரு கனத்த சங்கிலியை அதன் துதிக்கையில் கொடுத்து சுமந்து செல்லச் செய்வது வழக்கம். யானைப்பாகன் அன்று மறந்துவிட்ட காரணத்தாலோ என்னவோ யானையின் துதிக்கையில் இரும்புச்சங்கிலியைச் சுமக்கச் செய்யவில்லை.
காமராஜ் அதைக் கவனித்தார் யானையின் வெறியாட்டத்துக்கு அதுவும் காரணமாக இருக்கக்கூடுமோ என்று அவருக்ககுத் தோன்றியது.
உடனே கோவிலுக்கு ஓடினார்.அந்த இரும்புச் சங்கிலியை எடுத்து வந்தார். வெறி கொண்டு அலைந்த யானையின் துதிக்கையில் விழுமாறு சங்கிலியை வீசி எறிந்தார்.
யானை தனது துதிக்கையில் சங்கிலியைத் தாங்கிக்கொண்டது. உடனே அதன் வெறி ஆவேசம் அடங்கிவிட்டது.
அமைதியடைந்த யானையை காமராஜே கோவிலுக்குஅழைத்து சென்றார்.
Leave a Reply