பொதுவாக கல்வியின் தேவையை உணர்ந்திருந்த லெனில், ரஷ்ய புரட்சிக்கு பின்னர் அமைந்த ஆட்சியில் எல்லாவற்றிற்கும் மேலான முக்கியத்துவத்தை மக்களின் கல்விக்கு அளித்தார். கலாச்சாரப் புரட்சியின் வெற்றி உறுதி பெற வேண்டுமென்றால், கல்லாமையைப் போக்குவது இன்றியமையாத்து என லெனில் உறுதியாக கருதினார். 1918 – ம் ஆண்டு ஆகஸ்ட் 28 -ம் தேதி நடைபெற்ற கல்வியைப் பற்றிய அகில-ருஷ்ய காங்கிரசில் லெனின் பின்வருமாறு உரையாற்றினார்.

“உழைக்கும் மக்கள் அறிவத்தாகம் கொண்டு இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் வெற்றிபெற அதுதேவைப்படுகிறது. உழைக்கும் மக்களில் பத்தில் ஒன்பது பேர், அறிவுதான் அவர்களுடைய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதம் என்பதையும், அவர்களுடைய தோல்விகள் என்பதையும், இப்பொழுது உண்மையிலேயே கல்வி ஒவ்வொருவருக்கும் இப்பொழுது உண்மையிலேயே கல்வி ஒவ்வொருவருக்கும் எளிதில் கிடைக்கும்படி செய்வது நம் கடமை என்பதையும் உணர்ந்து விட்டார்கள். நம்முடைய இலட்சியத்திற்கு உத்தரவாதம் கிட்டிவிட்டது. ஏனெனில் மக்கள் திரள் தானே புதிய சோசலிச ருஷ்யாவைக் கட்டுவதற்கு ஆயத்தமாகிவிட்டது. அவர்களுடைய அனுபவம், அவர்களுடைய தோல்விகள், தவறுகள் ஆகியவற்றிலிருந்து அவர்கள் படிப்பினை பெறுகிறார்கள். மேலும் அவர்களுடைய போராட்டத்தின் வெற்றிகரமான முடிவிற்கு கல்வி எவ்வளவு இன்றியமையாத்து என்பதையும் அவர்கள் பார்க்கிறார்கள்” என்றார்.

அதைப்போலவே, கூட்டுறவுத்துறைக்கு லெனில் அதிக முக்கியத்துவம் அளித்ததைப் பற்றி ‘கூட்டுறவு குறித்து’ எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“சோசலிசத்தைநிர்மாணிக்கின்ற வடிவமாக்க் கூட்டுறவு முறையைப் பயன்படுத்துவது தொழிலாளி வர்க்கத்துக்கும் உழைக்கும் விவசாயி வர்க்கத்துக்கும் பொருளாதார ரீதியிலும் லாபகரமானது என்பதை லெனின் சிறப்பாக நிரூபித்தார்.”

இத்தகைய லெனின் கருத்துக்கள், ரஷ்ய புரட்சிக்கு பின்னர் மேற்கொள்ளப்ட்ட புதிய ஆட்சி அனுபவங்களை எல்லாம் படித்து அறிந்து கொள்ள வேலூர் மற்றம் அமராவதி சிறைச்சாலைகளில் இருந்த நேரத்தை காரமராஜர் பயன்படுத்திக் கொண்டார்.

எனவேதான்,புதிய எதிர்பார்ப்புக்களை மக்கள் புரிந்து கொள்ளவும், அவர்களே திட்டமிட்டு செயல்படுத்தவும் மக்களுக்காகன அடித்தளம் அமைக்க வேண்டியதை உணர்ந்திருந்தார் காமராஜர்.

லெனின் பார்வையிலும் ஆட்சியில்மு,கல்வியும் கூட்டுறவம் அதிக முக்கியத்துவம் பெற்றது. காமராஜர் ஆட்சியிலும் கல்வியும் கூட்டுறவும் முதன்படுத்தப்பட்டது. இதற்கு இணையாக உள்ளாட்சி அமைப்புக்களையும் முதன்மைப்படுத்துவது அவசியம் என்பதை காமராஜர் உணர்ந்திருந்தார்.

இந்த மூன்று துறைகளிலும் காமராஜர் ஆட்சி காட்டிய முக்கியத்துவத்தை விட, இந்த மூன்று துறைகளையம் தமிழ்நாட்டிற்கு ஏற்ற முறையில் மாற்றி அமைத்தது தான் எல்லாவற்றிலும் சிறப்பானது ஆகும். வளம் கொழிக்கும் தமிழகம் அமைய வகுத்த அந்தத் திட்டங்கள் பற்றிய புதிய பார்வை காமராஜர் ஆட்சியின் சிறப்பை வெளிப்படுத்தும்.

உள்ளாட்சி

காமராஜர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட போது கிராம்ப் பஞ்சாயத்துக்கள், இரண்டாம் நிலையில் ஒருசில கிராமங்களை இணைத்த பிர்க்காக்கள், மூன்றாம் நிலையில் மாவட்ட ஆட்சிக்குழுக்கள் என்ற மூன்று வகையில் உள்ளாட்சி அமைப்பு அடுக்கு அமைந்திருந்தது. மாவட்டங்கள் பெரிய அளவில் இருந்தன. மாவட்டங்களில் போடக்கூடிய திட்டங்கள் கிராமங்களை அடிப்படையாக்க கொண்டு போட்டாலும் ஒவ்வொரு கிராம்மும் தனித்தனி அலகுகளாகப் பார்க்கப்பட்டதால் பல நடைமுறை சிக்கல்கள் இருந்தன. எல்லா அதிகாரங்களும் மாவட்ட ஆட்சிக் குழுவிடன் குவிந்து இருந்தது.

உணவு உற்பத்திக்கம் மாநிலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் மக்களுடைய பங்கேற்பு மட்டுமல்லாமல் மக்களுக்கும் ஆட்சியாளருக்கும் இருக்கக்கூடிய இடைவெளி குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை காமராஜர் கொண்டிருந்தார். அந்த வகையில் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மக்களுக்கும், ஆட்சியாளருக்கும் இடைவெளியை குறைக்கும் வகையில் உள்ளாட்சிக்கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என காமராஜர் அரசு திட்டமிட்டது. அதனுடைய முதல் பகுதியாக 1957 – ல் மாநில அரசு,, உள்ளாட்சி நிர்வாக சீர்திருத்தம் பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அதன்படி அதிகாரங்களுடைய மையமாக இருந்த மாவட்ட ஆட்சிக் குழுக்கள் கலைக்கப்பட்டு, கிராம்ம், ஒன்றயங்கள் என்றளவில் பஞ்சாயத்துக் கட்டமைப்பை மாற்றியமைக்க திட்டமிடப்பட்டது.

தொடர்ந்து 1958 – ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி இரண்டு அடுக்குகளைக் கொண்ட உள்ளாட்சி கூட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் கட்டமைப்பில் கிராம்ப் பஞ்சாயத்துக்கள் கீழ்மட்ட அடுக்குகளாகவும், ஒரே பகுதியைச் சார்ந்த பல கிராமங்களை ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட பஞ்சாயத்து ஒன்றியங்கள் மேல்மட்ட அடுக்காகவும் இடம் பெற்றன. ஒரு பஞ்சாயத்து ஒன்றியத்தில் அந்தப் பஞ்சாயத்து ஒன்றியத்திற்கு உட்பட்ட எல்லாக் கிராம்ப் பஞ்சாயத்துத் தலைவர்களும் இடம் பெறுவார்கள் என்று இருந்ததன் மூலம் இரண்டு அடுக்குகளும் இடையே ஒரு குறிப்பிட்ட தொடர்பு இந்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது.

1958-ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தினுடைய இன்னொரு சிறப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்வதற்கு வழிவைக செய்த்தோடு பெண்களை நியமன உறுப்பினர்களாக நியமித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. இதுதவிர நீக்கப்பட்ட மாவட்ட ஆட்சிக் குழுக்களுக்குப் பதிலாக மாவட்ட வளர்ச்சி மேம்பாட்டுக் கழகம் என்ற ஒன்று ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இந்த மாவட்ட அளவிலான மேம்பாட்டுக் கழகத்திற்கு ஆலோசனை வழங்கும் பங்கு மட்டுமே இருந்தது.

மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் மட்டுமே அதிகாரமளிக்கப்பட்டிருந்த உள்ளாட்சி அமைப்புகள், 1958- ஆம் ஆண்டு உள்ளாட்சிச் சட்டத்திற்குப் பின்னர் விவசாயம், கால்நடை வளர்ச்சி, ஊரகத்தொழில்கள், கல்வி, போன்ற பணிகளை மேற்கொள்ள கூடிய அமைப்புக்களாக கிராம பஞ்சாயத்துக்களும், பஞ்சாயத்து ஒன்றியங்களும் மாற்றம் பெற்றிருந்தன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் பஞ்சாயத்து ஒன்றியங்கள் மூலம் உரங்கள், மாடுகள், ஆடுகள் விநியோகம் செய்வது, கால்நடை மருதுவமனைகள் கட்டுவது, கோழிப்பண்ணைகள், மீன் வளர்ப்புப் பண்ணைகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டது.

கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் உதவியுடன் ஊரகத்தொழில்கள் உருவாக்கப்பட்டது. ஆரம்பப்பள்ளிகளைத் திறப்பது, பராமரிப்பது, விரிவுபடுத்துவது, மேம்படுத்துவது போன்ற கல்விப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எந்த வகையான திட்டங்களை அமல்படுத்துவது, எங்கெங்கு அமல்படுத்துவது, அதன் தேவைகள் யார் யாருக்கு என்பன போன்றவைகளை உள்ளூர்த் தேவைகளுக்கு ஏற்ப முடிவுகளை மேற்கொள்ள புதிய அதிகார பரவல்முறை 1958-ம் ஆண்டு பஞ்சாயத்து சட்டம் மூலமாக நடை முறைப்படுத்தப்பட்டது.

கூட்டுறவு

அதிகாரம் பரவலாக்கப்பட்டாலும், மக்களிடம் முதலீடு செய்யக்கூடிய சக்தி என்பது குறைந்தே இருந்தது. மாநில அரசிடம் போதிய நிதி வசதி இல்லை என்ற் சூழ்நிலையில், அவர் அவர்களுக்கு இருக்கும் சக்திக்கு ஏற்ற அளவில் பங்கேற்று, கூட்டுறவு மூலம் உயர்வு காண்பது தமிழகத்திற்கு ஏற்றதாக இருந்திடும் என்பதை காமராஜர் உணர்ந்திருந்தார். எனவே,காமராஜர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர், கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது. கூட்டுறவுச் சங்கங்களில் அரசும் குறிப்பிட்ட அளவு பங்குகளை ஏற்றுக்கொண்டு உறுதுணையாக இருந்தது. மாநிலத்த்தில் கூட்டுறவுச்சங்கங்கள் இல்லாத கிராமமே இல்லை என்ற நிலையை காமராஜர் ஆட்சி உருவாக்கியது. மக்களில் 84 விழுக்காட்டினர் கிராமக் கூட்டுறவுச் சங்கங்களில் பங்கேற்று இருந்தனர்.

11, 366 கிராம மக்கள் கடன் கூட்டுறவுச் சங்கங்கள், 332 வேளாண்மை வங்கிகள், 22 கிராமவங்கிகள், 15 மத்திய கூட்டுறவு வழங்குதல் மற்றும் விற்பனை சங்கங்கள், 288 விவசாய சங்கங்கள், 1396 பால் உற்பத்தியாளர் சங்கங்கள்,, 275 வீடு கட்டும் சங்கங்கள், ஒரு கூட்டுறவு நகரியம், 1401 தொடக்கநிலை பொருள் சங்கங்கள், ஒரு கூட்டுறவு நகரியம், 14 கூட்டுறவு அச்சக சாலைகள், 7 சுகாதார கூட்டுறவு சங்கங்கள், 5 கூட்டுறவு லாண்டிரிகள், 2 முடிதிருத்தும் சங்கங்கள் போன்ற கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. கிராம்ப்புற வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய வகையில், கிராம்க்கூட்டுறவு வங்கிகளை ஏற்படுத்த திட்டமிட்டு, அதே 1963-ஆம் ஆண்டு மொத்தம் 19,164 கூட்டுறவு சங்கங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வந்தன. இதன் வழியாக, மனிதனின் எல்லா செயல்பாட்டுக்கும் சிந்தனைக்கும் ஏற்ப கூட்டுறவு சங்கங்கள் தமிழகத்தில் இருந்தன.

கல்வி

1899-ல் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும்போது,

“நீங்கள் இந்தியா முழுவதும் ஏழைகளுக்காகப் பள்ளிக்கூடங்களை ஆரம்பிப்பதாக வைதுக் கொள்வோம். அந்தப் பள்ளிக்கூடங்கள் இலவசமாக இருந்தாலும்கூட நீங்கள் அவர்களுக்குக் கல்வி அளிக்க முடியாது. உங்களால் எப்படி அவர்களுக்கு கல்வி அளிக்க முடியும்? நாலு வயது பையன் உங்களது பள்ளிக் கூடத்திற்கு போவதற்கு பதிலாக, வறுமை காரணமாக ஏதாவது ஒரு வேலைக்குத்தான் போவான். இப்போது மலை முகம்மதுவிடம் செல்லாவிட்டால், முகம்மது தான் மலையிடம் செல்ல வேண்டும். அதாவது, ஏழைப் பையன் கல்வியை நாடி வர முடியாவிட்டால், கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும் என்றுநான் சொல்கிறேன்” என்று கூறினார். 56 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏழையின் வீட்டை நாடி கல்வியைப் போக செய்தார் காமராஜர்.

அவரின் நடைமுறை தெரிந்த ஆட்சியின் காரணமாக மனிதகுல முன்னேற்றத்திற்கு முக்கிய சொதாக இருக்கின்ற அறிவுக்கு தமிழகத்தில் அடித்தளமிட்டு, தமிழனின் ஆழ்வுக்கு அச்சாரமிட்டவர்நகாமராஜர். கலவியில் சிறந்தது தமிழ்நாடு. அதைத் தமிழனுக்குச் சிறந்த, உரிய முறையில் அளித்த கல்வி வள்ளல்தான் காமராஜர்.

காமராஜர் பொறுப்பேற்ற ஆண்டில் இருந்த கல்வி நிலையையும், நிதிச்சுமையையும் பற்றி அப்போது கல்வி அமைச்சராக இருந்த திரு.சி.சுப்பிரமணியம் சட்டசபையில் பேசும்போது,

“பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. கூடுதலாக ஆசிரியர்களை நியமிப்பது, அவர்களுக்கப் பயிற்சி தருவதற்குப் புதிய ஆசிரியர்பயிற்சி நிறுவனங்களை அமைக்க வேண்டியுரக்கும் என்ற அடிப்படையில் மட்டும் நாம் செயல்பட்டால், ஆசிரியர்களுக்காகவும், தற்போதைய விகிதங்களில் ஆசிரியர்களின் ஊதியங்களுக்காகவும் மட்டும் நாம் மேற்கொண்டு ரூ. 6 கோடி செலவிட வேண்டிருக்கும்.

எல்லா குழந்தைகளுக்கும், குறைந்த பட்சம் தொடக்கக் கல்வி அளிப்பது என்றால், நமது மாநிலத்தில் கூடுதலாக 23,000 பள்ளிக்கூடங்களுக்கான கட்டடங்கள் மற்றும் இதர சாதனங்கள் ஆகியவற்றை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால்,மேற்கொண்டு ரூ. 10 கோடி முதல் 12 கோடி வரை செலவிட வேண்டியிருக்கும். இந்தத் தொகை நீங்கலாகச் சமுதாயத்தின் தரப்பில் கட்டடங்களுக்காகவும், இதர வசதிகளுக்காகவும் கூடுதல் தொகை தர வேண்டியிருக்கும்.

சென்னை மாகாணத்திற்குப் பொருத்தமாக இருக்க்குகூடியதும் நாம் பின்பற்ற, விருப்பமான தொடக்கக்கல்வித் திட்டத்தை முடிவு செய்வதற்கு முன்பாக, நமது மாகாணத்தின் நிதிச்சுமையை நம்மால் சமாளிக்க முடியுமா என்பதை இந்தச் சபை முதலில் நன்கு ஆராய வேண்டும்.

இப்போது நாம் செலுத்துகின்ற் ரூ. 6 கோடித் தொகை, தொடக்கப்பள்ளிக்கூட ஆசிரியர்களின் ஊதிய விகிதங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இந்த ஊதிய வகதங்கள் உண்மையிலேயே போதுமானவை அல்ல என்பதையும் இவற்றை குறைந்த பட்சம் சிறிதளவேனும் அதிகப்படுத்த வேண்டும். இந்த பின்னணியில் தான் இந்தப் பிரச்சனையை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.”

ஆனால், திரு.சி. சுப்பிரமணியம் கூறியவை மட்டுமே பிரச்சனையாக இருக்கவில்லை. பள்ளிக்கு குழந்தைகள் வருகை. வருகை தந்தாலும் குறைந்த பட்சம் ஆரம்பக்கல்வி வரையிலாவது நீடிப்பது, பள்ளிக்கூடம் செல்வதற்காக குழந்தைகள் செல்லக்கூடிய நீண்ட தொலைவுகள், பள்ளிக்கூடங்களில் நிலவிடும் ஏற்றத்தாழ்வுகள் இப்படியும் பிரச்சனைகள். மேலும் கல்வியில் மேம்பாடு என்பது ஓர் இரவில் நடைபெறக்கூடிய செயலல்ல. பல்லாண்டுகள் பொறுமையாக முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே, கல்வித்துறையில் மேம்பாட்டைக் காணலாம்.

எனவே, மேம்பாடு பற்றித் திட்டமிடுவதற்கு முன்னர் உள்ள நிலையை அறிவது அவசியம். எனவே, 1954-ஆம் ஆண்டு டிசம்பரில் தொடக்கக் கல்வியின் நிலையினை அறிந்து கொள்வதற்காக அரசு ஓர் உயர்நிலைக் குழுவை டாக்டர் அழகப்பச் செட்டியார் தலைமையில் நியமித்தது. அன்றைய தமிழகத்தில் தொடக்கக் கல்வியின் நிலை எப்படி? போதி பள்ளிகள் உள்ளனவா? பள்ளிகளின் நிலை எப்படி? எந்தெந்த மாவட்டத்தில் பள்ளிகள் போதவில்லை? இப்படிப்பட்ட குறைகளை களைவதற்காக வழிவகை என்ன? தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் தகுதி, பயிற்சி மற்றும் ஆசிரியர்களின் மேம்பாட்டிற்காக வழி? ஆசிரியர்களின் எண்ணிக்கை உயர் வழி? ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, ஊதியம் ஆகியவற்றைப் பற்றிய பரிந்துறைகளைத் தெரிவிக்க தொடக்கக் கல்விக் குழுவை, காமராஜர் அரசு நியமித்தது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணத் செய்து, கலந்தாய்வு செய்து 1955-ஆம் ஆண்டு அக்டோபரில் இக்குழு தனது பரிந்துரைகளை அரசிடம் அளித்தது.

ஆரம்பப்பள்ளிகள்

தொடக்கக்கல்விக்கு, உயர்நிலைக்குழு அளிக்கும் பரிந்துரைகளக்குப் பின்னர் கல்விக்கான திட்டங்களை தீட்டலாமென காமராஜர் அரசு எண்ணவில்லை. மாறாக, காமராஜர் முதலமைச்சராக பொறுப்பேற்ற அதே கல்வி ஆண்டில் இயன்ற அளவு தொடக்கக் கல்விகள் திறந்திட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பள்ளி தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டன. பள்ளிகள் திறப்பதற்கு யாரும் விண்ணப்பம் அளிக்க வேண்டியதில்லை. அரசிற்கு நிதி ஏதும் கட்டணமாக அளித்திட தேவையில்லை. இன்னும், சொல்லப்போனால் பள்ளிக்கூடம் திறப்பதற்காக யாரும் எந்த அதிகாரியையும் தேடியும் கூட போக வேண்டாம்.

அதிகாரிகளே ஊர் ஊராக சென்றனர். எங்கெல்லாம 500 பேர் வாழும் சிற்றூர்கள் உண்டோ அங்கே அதிகாரிகளே சென்றனர். ஒரு பள்ளிக் கூடத்திலிருந்து ஒரு மைல் கல் தொலைவில் இன்னொரு கல்வி வருமாறும் பார்த்துக் கொண்டனர். இந்த இரண்டு அடிப்படைகளைக் கொண்டு, 500 பேர் வாழும் சிற்றூர் தோறும் பள்ளிகள் நிறுவப்பட்டன. ஊரில் இருந்த மக்களிடத்தில் கல்வி மேம்பாடு எடுத்து சொல்லப்பட்டது. ஒரு கட்டிடத்தை வாடகை இன்றி பள்ளிக்கூடத்திற்காக தரமக்கள் ஊக்குவிக்கப்பட்டு, பள்ளிக் கட்டிடங்கள் வாடகை இன்றி பெறப்பட்டு, அங்கே பள்ளிக்கூடம் தொடங்கி வைக்கப்பட்டது.

உடன் வரும் ஆசிரியர்களில் அந்தச் சிற்றூர் பள்ளி ஆசிரியரும் அங்கேயே அறிமுகப்படுத்தப்பட்டார். அந்தப் பள்ளிக்குரிய கரும்பலகைகள், மேசை நாற்காலிகள், பதிவேடுகள் முதலியவையும் அதே நேரத்தில் வழங்கப்பட்டது. பள்ளி செயல்படுவதற்குரிய வகையில் முறைப்படுத்தப்பட்டவுடன், அந்தக் குழு அடுத்த சிற்றூரை நோக்கி செல்லும்.

இப்படி பள்ளிகள் துவக்கப்பட்டதற்கு அந்த காலத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட ஆட்சிக் குழுக்களும் உரிய முறையில் ஒத்துழைத்தன. உத்வேகமும் உணர்வும் கொண்ட காமராஜரின் எண்ண வேகத்திற்கு ஏற்ப அதே உணர்வுடன் செயல்பட்டு கல்வியல் சிறந்த தமிழ்நாடாக எப்படியெல்லாம் பாடுபட்டார்கள் னப்தை திரு. நெ.து சுந்தரவடிவேலு பின்வருமாறு கூறுகிறார்.

“திக்கெல்லாம் புகழ்பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தில் கூட, குறிப்பாக, கோவில்பட்டிப் பகுதியில், எத்தனையோ, ஊர்களில் தொடக்கப் பள்ளி கூட இல்லாத அவலநிலை, அவ்வூர்களில் பள்ளி தொடங்க விரைந்து நடவடிக்கை எடுத்த நல்லவர் இன்னும் நம்மோடு வாழ்கிறார்.

அவர் அந்தக் காலத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சிக் குழுத் தலைவராகவும், சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். மாகாணக் கல்வித்துறைக்கு என்றும் உறுதுணையாக விளங்கிச் செயல்பட்டார்.

இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் உண்மையான பொதுநல உணர்வும் இயற்கையான கல்வி நாட்டமும் கொண்ட இராமசுப்பு, சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். ஆசிரியர்களையும் கல்வி அலுவலர்களையும் தனது ஜீப்பில் ஏற்றிக்கொண்டு, பள்ளி இல்லாத ஊர்களைத் தேடித் தேடிச் சென்றார்.

தடமில்லாத புஞ்சைக் காடுகளின் ஊடே பயணம் செய்தார். மற்றோர் ஜீப்பில் கரும்பலகைகள், மேசை நாற்காலி கள் பதிவேடுகள் ஆகியவை வந்தன.

சென்ற ஊர்ப் பெரியவர்களைப பிடித்து, ஏதாவதொரு, கட்டடத்தை வாடகை இன்றி பெற்று, அங்கே பள்ளியைத் தொடங்கி வைத்தார்.

ஊரார், மாவட்ட ஆட்சிக்குழு அலுவலகத்திற்குப் பலமுறை நடையாய், நடந்து அலுப்பதற்குப் பதில், ஆட்சிக் குழுத் லைவரே ஊர்களைத் தேடிச் சென்று பள்ளிகளைத் தொடங்கியதால், கலவித்துறை இயங்குதல் பணி எளிதாக இருந்தது, அலுவலக்க் கோப்புகள் படிப்பதும் காலதாமதம் ஏற்படுவதும் நீக்கப்பட்டன.

இப்படி எளிமையாக்க நடைமுறைகள் வழியாக 1954-55 ஆம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் 2,780 ஓராசிரியர் பள்ளிகள் துவக்கப்பட்டன. 500 பேர் மக்கள்தொகை கொண்ட சிற்றூரில்தான் பள்ளிக்கூடம் துவக்கப்படுவது தங்களுக்கு உகந்ததாக இருக்காது என்றும் அதைவிட குறைவான மக்கள்தொகை கொண்ட எல்லா சிற்றூர்களிலும் பள்ளிக்கூடம் திறக்கப்பட வேண்டுமென முதல்வர் காமராஜரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அவரிகளின் வேண்டுகோள் நியாயமாக இருந்ததை கருதி, 300 மக்கள் தொகை கொண்ட எல்லா சிற்றூர்களிலும் பள்ளிகள் துவங்கலாமென் காமராஜர் அறிவித்து செயல்படுத்தினார். இதனால், ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிற்றூர்களிலும் பள்ளிக்கூடம் துவங்க வாய்ப்பு ஏற்பட்டது.

பள்ளிக்கூடம் திறந்தால் போதாது. பள்ளிக்கூடத்திற்கு நிலையான சொத்துக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதுதான் பள்ளிக்கூடம் தொடர்ந்து எவ்வித சிக்கலும் இல்லாமல் செயற்பட வழிவகுக்கும் என்பதை காமராஜர் உணர்ந்தார். ஆனால், அரசிடம் போதிய நிதி இல்லை என்ற நிலையில்தான் சிறுவயதில் படித்த பிட அரிசி பள்ளிக்கூடம் அவருடைய மனதில் அசை போட்டிருக்க வேண்டும். சமுதாயத்தின் ஒத்துழைப்போடு, எந்த மேம்பாட்டையும் மேற்கொள்ளலாமென உணர்த்திய பள்ளி.

நாடார் சமுதாயத்தினர் தங்களின் சேமிப்பு நிதியிலிருந்து 1888ஆம் ஆண்டு விருதுநகரில் ஷத்திரிய வித்திதயாசாலா என்றப் பள்ளியை துவக்கினர். இந்தப் பள்ளியில் பயிலும் எல்லா மாணவர்களுக்கும் இலவச உணவு அளிகப்பபட்டது. பள்ளிக்கு உதவும் வகையில், விருது நகரில் உள்ள அனைத்து வீட்டினரும் தினமும், ஒரு பிடி அரிசி அளித்து வந்தனர். இப்படிப் பெறப்பட்ட பிடி அரிசி வழியாக பள்ளிக்கும் வருவாய் வந்தது. கலவிக்கு நிதி ஒரு பொருட்டு அல்ல என்பதை நன்கு உணர்ந்திருந்த காமராஜர், சமுதாய பங்கேற்பை ஊக்கவிக்கும் மாநாடுகளை தமிழ்நாடெங்கும் நடைபெற்றிட ஆணையிட்டார்.

இத்தகைய பள்ளி சீரமைப்பு மாநாடுகளைப் பற்றி திரு.சி. சுப்பிரமணியம் கூறினார்.

“பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவதற்காகத் தேவையான வசதிளை அளிப்பதில் பொதுமக்களை பங்கு கொள்ளுமாறு செய்வது என்று, விரிவான விவாதத்திற்குப் பிறகு முடிவு செய்யப்பட்டது. பள்ளிக்கூடங்களின் அடிப்படைத் தேவைகள் எவையென்று பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன. தொடக்கப்பள்ளிகளுக்கு ஒரு பட்டியல், உயர் தொடக்கப் பள்ளிகளுக்கு ஒருபட்டியல், உயர்நிலைப் பள்ளிக்கு கூடங்களுக்கு ஒரு பட்டியல் என்று மூன்று பட்டியல்கள் உருவாயின.

தொடக்கப் பள்ளிக்கூடங்களுக்கு, என்னென்ன வசதிகள் இல்லை என்பது கிராம மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. தேவைப்படும் வசதிகளை அளிக்குமாறு கிராம மக்கள் கேட்டுக் கொண்டார்கள்.

கரும்பலகைகள், மேஜைகள், நாற்காலிகள், கடிகாரங்கள் முதவியவற்றை கிராம மக்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கூடங்களுக்கு அளித்தார்கள். பல இடங்களில் பள்ளிக்கூடங் கட்டடங்களை விரிவுபடுத்திப் புதியதாக அறைகளை அமைக்கவும் மக்கள் தயாராக முன்வந்தனர. இந்த அனுபவத்தின் அடிப்படையில் பள்ளிக்கூடங்களின் மேம்பாட்டிற்காக விரிவான மக்கள் இயக்கமாக ஆக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
கல்வி மேம்பாட்டிற்குபொது மக்களின் நிதி வசதிகளைத் திரட்டும் பணியை மேற்கொள்ளுமாறு மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு கூறினோம்.

பல்வேறு கிராமங்களைச் சார்ந்த மக்களின் கூட்டம் நடதப்பட்டபோது, யாராவது ஒரு கிராம்ப்பிரமுகர் கூட்டத்திற்குத்தலைமை வகிக்குமாறு கேட்டுக் கொள்ளப்ட்டார். மாவட்ட அளில் பள்ளிக்கூட வளர்ச்சி மாநாடுகள் நடத்தப்பெற்றன. அவற்றில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கரும்பலகைகள், மேஜைகள், நாற்காலிகள் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குத் தேவையான பொருள்கள் முதலியவற்றை நன்கொட்யாக அளிதார்கள். பள்ளிக்கூடக் கட்டங்களக்கு புதியதாக எள்ளையடிக்கவும், கட்டங்களைப் பராமரிக்கும் பணியை மேற்கொள்ளவும் சிலர் முன்வந்தார்கள்.

இந்த இயக்கம் தொடக்கப்பள்ளிக்கூடங்களுக்கு மட்டுமின்றி, உயர்நிலைப் பளிக்கூடங்களுக்காகவும் நடத்தப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் பறுமானமுள்ள நடன்கொடைகள் இந்த இயக்கத்தின் மூலம் குவிந்தனர. பள்ளி மாணவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது சாத்தியமாயிற்று.”

கல்வியில் தமிழகம் வழிகாட்டி

28.07.1958 அன்று திசையன்விளை மாநாட்டில் முதல் அமைச்சர் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் 102 பள்ளிகள் பங்கேற்றன. மாநாட்டில் முன் வைக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பு ரூபாய் 1,38,000 ஆகும். மாநாடு மூலம் பெறப்பட்ட பொருட்கள் நிதிகளின்பமொத்த மதிப்பு ரூபாய் 1,36,000 ஆகும். இந்த மாநாட்டில் கலந்துகொண்டு முதலமைச்சர் காமராஜர் கூறினார்.

“இவற்றையெல்லாம் மக்கள் வெற்றிகரமாக நடத்துவதற்குக் காரணமன்ன? இது பொதுமக்கள் சக்திக்கு உட்பட்டது. இவை, அவர்களுக்கு சுமை அல்ல!”

இத்தகைய ஒரு மாநாடு, 22.11.1958 அன்று செங்கற்பட்டு நகரத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் இந்திய கல்வி அமைச்சர்திரு. கே. சி. பந்த் கலந்து கொண்டார். 826 பள்ளிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் ரூபாய் 23 இலட்சத்துக்கு திட்டங்கள் முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.”

அம்மாநாட்டில் திரு.கே.சி. பந்த் உரையாற்றும்போது,

“பிற மாநிலங்களில் முளைக்காத, நல்ல மேம்பாட்டுத் திட்டங்கள், சென்னை மாகாணத்தில் மட்டும் பயிராவது வியப்பானது.”

என்று கூறினார். கூறியது மட்டுமல்ல, டெல்லி சென்றவுடன்,பிரதமர் நேருவிடம் இம்மாநாடுகளைப் பற்றி வியந்து கூறியுள்ளார். அதன் பயனாக, 15.01.1959 அன்று காரைக் குடிக்கு அருகிலுள்ள ஆ.தெக்கூரில் நடைபெற்ற பள்ளி சீரமைப்பு மாநாட்டில் பிரதமர் நேர கலந்த கொண்டார். அடுத்த நாள் திருநெல்வேலி கல்வி மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகள் பங்கேற்ற அடைக்கலாபுர மாநாட்டிலும் பிரதம் நேரு கலந்துகொண்டார். பிரதமர் நேரு, பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் இரண்டில் கலந்து கொண்டது இத்தகைய மாநாடுகள் மீது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, கல்வி மேம்பாட்டு திட்டங்களில் தமிழகத்தின் வழியில் செயல்படுமாறு அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் பிரதமர் நேரு கடிதம் எழுதினார்.

மொத்தமாக 167 பள்ளி சீரமைப்பு மாநாடுகள் 1963 ஆம் ஆண்டு வரை நடைபெற்றன. இந்த மாநாடுகள் மூலமாக 7,00,000 பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. பள்ளிக்கு குழந்தைகள் வருவதை உறுதி செய்ய இலவச மதிய உணவு வழங்கப்பட்டது.

கட்டாயக் கல்வி

இதற்கிடையில் 1960-61 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மூன்றில் ஒரு பகுதியில் 6லிருந்து 11 வயது வரையிலான குழுந்தைகளுக்கு கட்டாய கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1961-62 ஆண்டில், மாநிலத்தின் இன்னொரு மூன்றில் ஒரு பகுதியில் கட்டாயக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இறுதியாக 1962-62 ஆம் ஆண்டில் மீதமிருந்த ஒரு பகுதியிலும் கட்டாயக் கலவி அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆசிரியர் நலன்

பள்ளிக்கூடங்களுக்கம்,மாணவர்களுக்கும் மட்டும் உதவிகளும் சலுகைகளும் அளித்தால் போதுமா? மாணவர்களின் நலனில் அக்கறை உணர்வுபூர்வமாக இருக்க வேண்டுமென்றால், அவர்களுக்குக் கற்றுத் தரும் ஆசிரியர்களின் மனநிறைவும் முக்கியமல்லவா! அதற்காக, ஆசிரியர்களின் நலன் காத்திட பல்வேறுதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அவற்றில் குறிப்பாக கூற வேண்டுமென்றால், இந்தியவிலேயே முன்முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான மூன்ற நன்மை திட்டத்தைக் குறிப்பிடலாம்.

194-1955 முதல் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் 14-4-1958 முதல் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கம் பின்னர் கல்லூரி ஆசிரியர்களுக்கும் இத்திட்டம் கிடைத்தது. இதன் வழியாக நிரந்தர வைப்பு நிதி, ஓய்வுக்கால ஊதியம் இவற்றுடன் இணைந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டம், என்ற மூன்று நன்மை திட்டங்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. ஆசிரியர்களின் குழுந்தைகளுக்கு இலவசக் கல்வியும் அளிக்கப்பட்டது. ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 55லிருந்து 58 ஆக உயர்த்தப்பட்டது.

கல்வியில்மேம்பாடு

இப்படி கல்வி மேம்பாட்டுக்கான பல்வேறு நடவடிக்கைகளை காமராஜர் அரசு மேற்கொண்டது. அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற 1954 – ஆம் ஆண்டில் 6 வயதிலிருந்து 11 வயது வரையிலான பள்ளி செல்லும் பிள்ளைகளில் 45% மட்டுமே பள்ளிக்குச்சென்றனர். ஆனால், அதே வயது பிரிவைச் சேர்ந்த 80% குழந்தைகள் 1963-ல் பள்ளிக்குச் சென்றனர்.

இந்தியா விடுதலை பெற்ற போது அப்போதைய ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தில் இருந்த தொடக்கப் பளிகள் எண்ணீக்கை 15,303 அதுவே தமிழ்நாடு தனி மாநிலமாக அமைந்த பின்னர் 1963-ஆம் ஆண்டு மொத்தமாக 30020 தொடக்கப்பள்ளிகளாக வளர்ச்சிப்பெற்றது. 1954-இல் 18 இலட்சம் சிறுவர்கள் மட்டுமே பள்ளிக்கு சென்றனர் என்ற நிலைமாறி, 1963-ல் பள்ளிக்குச்சென்ற சிறுவர்கள் எணிகை 47 இலட்சமாக (47,44,115) உயர்ந்திருந்தது.

தொடக்கப்பள்ளி தவிர, பிற நிலைகளில் 1954-ஆம் ஆண்டும் ஒப்பீடு செய்யப்பட்டால், காமராஜ் அரசின்ற கல்வி சாதனை தெளிவாகும். இடைநிலைக் கல்வியை பொறுத வரை 1954-ஆம் ஆண்டு இருந்த 1006 பள்ளிகளில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து 4,89,115 மாணவர்கள் பயின்றனர். இது காமராஜரின் ஆட்சியில் ஏறக்குறைய இரண்டு மடங்காக உயர்ந்தது.

1963-ஆம் ஆண்டில் இடைநிலைப் பள்ளிகள் 1994 ஆக உயர்ந்தது மட்டுமின்றி ஆண், பெண், மாணவர்கள் எண்ணிக்கையும் 9,89,590 ஆக உயர்ந்தது. இரண்டுபல்கலைக் கழகங்களுடன் 39 கலை, அறிவியல் கல்லூரிகளை 1954-ஆம் ஆண்டு கொண்டிருந்த தமிழ்நாடு 1963-ஆம் ஆண்டில் அதே இரண்டு பல்களைக்கழகங்களுடன் உயர்ந்து இருந்தது. ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை பொறுத்தவரை 1954-ல் 141 இருந்தது, காமராஜரின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் 209 ஆக உயர்ந்தது.

இலவசக் கல்வி

தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த எல்லாக் கல்வி சலுகைகளையும் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கும் அதேபோல தாழ்த்தப்பட்டவராக இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியவர்களுக்கும் அளித்து 1957-58 -ல் காமராஜர் அரசு ஆணையிட்டது. இதன் வழியாக பின்தங்கிய மாணவர்களும் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இலவச கல்வி உட்பட ஏனைய பல சலுகைகளை பெற்றனர். பின்னர், ஆண்டு வருமானம் ரூ.12000 இருக்கக்கூடிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு உயர்நிலைப்பள்ளி வரை இலவச கல்வி அளித்து 1960-ல் காமராஜர் அரசு ஆணைபிறப்பித்தது. அதுவே 1962-ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளி வரை எல்லோருக்கும் இலவசக் கல்வி வழங்கப்பட்டது.

தொழிற்கல்வி

தொடக்கக் கல்வியிலும் உயர்நிலைப் பள்ளிப்படிப்பிலும் எடுத்த அதே அக்கறையுடன் , தொழிற்கல்வி வளர்ச்சி மேம்படவும் காமராஜர் அரசு பல முனைகளில் செயல்பட்டது. தொடக்கக் கல்வி வளர்ச்சியானது உயர்நிலைப் பள்ளியிலும் தொடர்ந்து, தொழிற்கல்வி நிலையை அடையும்போது அதனை எதிர்கொள்ளக்கூடிய வகையில் தொழிற்கல்வி வளர்ச்சியானது காமராஜர் ஆட்சியில் திட்டமிடப்பட்டது. எனவே, வளர்ந்து வரும் வளர்ச்சி நடவடிக்கைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் தேவைகளுக்கு ஏற்ப தொழிற்கல்வி சார்ந்த பல துறைகளையும் இணைத்து, திட்டமிட்டு செயலாற்றிட, அக்டோபர் 1957 -ல் தொழிற்கல்வி இயக்குநரகத்தை காமராஜர் அரசு ஏற்படுத்தியது. 1954-ல் இருந்த பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கையான ஆறிலிருந்து உயரவில்லை எனினும் இந்த கல்லூரிகளின் தரம் ஏறக்குறைய நூறுமடங்கு உயர்வாகிட பலதிட்டங்களை காமராஜர் அரசு செயல்படுத்தியது.

பழமைவாய்ந்த கிண்டி பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் எண்ணிக்கையானது இரு மடங்காக உயர்த்தப்பட்டது. 1954-ல் இருந்த பாலிடெக்னிக் நிறுவனங்களின் எண்ணிக்கையான 9,1963 – ஆம் ஆண்டில் 30 ஆக உயர்ந்தது. பெண்களின் தொழிற்கல்வி தேவையை நிறைவு செய்வதற்காக, சென்னையிலும், மதுரையிலும் பெண்களுக்கான பாலிடெக்னிக் நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன.

1954-ல் இருந்த நன்கு மருத்துவக்கல்லூரிகளுடன் காமராஜர் முதல்வராக பொறுப்பேற்ற, ஆண்டு துவக்கப்பட்ட மதுரை மருத்துவக் கல்லூரியையூம் சேர்த்து ஐந்து கல்லூரிகளை செயல்பட்டன.

பொதுநூலக இயக்கம்.

அறிவு பரவலாக்குதல், கால மாற்றத்திற்கு ஏற்ப அறிவை புதுப்பித்தல், இரண்டிற்கும் கற்றறிந்த சான்றோர்கள் கருத்துக்களை தாங்கிய நூல்கள் வழி வகை செய்கின்றன. அது தவிர, சில நேரங்களில் பொது மக்களுக்குப் பொழுது போக்கும் நல்ல முறையாக நூல்களை படிப்பதும் வளர்ந்துள்ளது. ஆனால், பல நூல்களை வாங்கி, பயன்படுத்தி அறிவை வளர்த்துக்கொள்ள பணம் படைதவர்களாலேயே இயலாத அளவுக்கு நூல்களின் விலை இருக்கும்போது, சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு பல நூல்களை வாங்கிப் பயன்படுத்துவது என்பது கனவாகவே முடிந்து விடும். ஒரு விழிப்புற்ற சமுதாயத்தின் முன்னேற்ற வேகம் என்பது அந்த சமுதாயத்தின் வெற்றிக்கு வழிகோலாகும். இவற்றையெல்லாம் நன்கு உணர்ந்திருந்த காமராஜர் அரசு, தொடக்கக் கல்விக்கு அளித்த முன்னுரிமையை நூலக இயக்கத்திற்கும் அளித்தது.

தங்கள் தங்கள் ஊர்களில் நூலகம் அமைத்து செயல்பட, நூலகத்திற்கு இடம், கட்டிடம், நூல்கள், பொருட்கள், ஆகியவற்றை தருவதற்கு பொதுமக்கள் உற்சாப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, நாலகங்கள் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டில் 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்கப்பட்டன. இது தவிர நூல்களை நேரடியாக தரும் நோக்கில் 644 நூல் நிலையங்களும் செயற்பட்டன.

நூலக இயக்கத்தின் ஒரு பகுதியாக பெண்கள் குழந்தைகளிடம் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காக என்று சிறப்பு நூலகம் ஒன்று மேற்கு தாம்பரத்தில் திறக்கப்பட்டது. சென்னை, கோவை, தாராபுரம், உடுமலைப்பேட்டை பகுதிகளில் பெண் ஆசிரியர்கள் மூலகமாக நூல்களை வீட்டிலேயே பெண்களுக்கு அளித்து திரும்பப் பெறுதல் முறை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

சென்னை புதுப்பேட்டையில் பெண்களுக்கு என்று கிளை நூலகம் திறக்கப்பட்டது. இப்படி பல வழிகள் மூலமாக நூலக இயக்கம் காமராஜர் ஆட்சியில் சிறப்புற்றது.

விவேகானந்தர் கருத்து

“ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, அந்த நாட்டு மக்கள் பெற்றிருக்கும் கல்வி, அறிவாற்றல் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. நாம மீண்டும உயர்வடை வேண்டுமானால், பொதுமக்கள் கலவியைத் பரப்பபியாக வேண்டும். பொது மக்களுக்குக்கல்வியைத் தந்து அவர்களை உயர்த்தி வடிஉங்கள். இது ஒன்றே ஒன்றுதான் நமது சிறப்பைப் பெறுவதற்கு உரிய ஒரே வழியகும்” என்று 1889ஆம் ஆண்டில் சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டார். அந்த சிறப்பான நிலையை உருவாக்க பெருந்தலைவர் காமராஜர் மேற்கொண்ட வழிகள்தான், இன்று தமிழனை தமிழ்நாட்டை உயர்த்தி உள்ளது.