அரசியல் மேடை நாகரிகத்தின் எல்லை எது?
சென்னை மெரினா கடற்கரையில் ஒரு தடவை நடந்த பொதுக் கூட்டத்தில் காமராஜர் முன்னிலையில் முக்கியமான தலைவர்கள் பேசத் தொடங்கினர். எங்கிருந்தோ சரமாரியாக விழுந்த கற்களில் இரண்டு பேர் காயமுற்றனர். கூட்டத்தில் பரபரப்பு. காமராஜர் திரும்பிப் பார்த்தார்.
யார் தலைவர்?
தலைவர்கள், கட்சித் தலைவர்கள் என்ன வித்தியாசம்? அடுத்த தேர்தலைப் பற்றி கவலைப்படுபவர்கள் கட்சித் தலைவர்கள். அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பவர்கள் தலைவர்கள்! காமராஜர் – தலைவர்
அரசியலில் குரு-சிஷ்ய நட்புக்கு உதாரணமாக யாரைச் சொல்லலாம்?
தீரர் சத்தியமூர்த்தியையும் பெருந்தலைவர் காமராஜரையும் சொல்லலாம். சத்தியமூர்த்தியை வைத்து விருதுநகரில் கூட்டம் போட்டவர் காமராஜர். அன்றைய காங்கிரஸில் ராஜாஜியா, சத்தியமூர்த்தியா என்ற போட்டிதான் இருந்தது. அதில் சத்தியமூர்த்தி பின்னால் காமராஜர் நின்றார்.
Buy Tamil books about Kamarajar
Dear friends, please find various tamil books on Perunthalaivar Kamaraj at the following online book shop. Buy Karamajar Tamil books online – Noolulagam.com Anbudan, Webmaster, Perunthalaivar.org