‘தீண்டாமை என்பது பாவச் செயல்’ என்றார் காந்தி. எனவே அவரைத் தொடர்ந்து அவர் வழியில் வந்த கருப்புக் காந்தியான காமராஜர் அவர்களும் தீண்டாமையை வெறுத்தார். தீண்டாமையை அகற்றப் பாடுபட்டார்.
அரசியலில் பெருந்தலைவர் என்ற பெயரும் புகழும் பெற்றபின் தீண்டாமையை வெறுத்தவர் அல்லர். பிள்ளைப் பருவம் முதலே காமராஜர் தீண்டாமையை எதிர்ப்பதில் தீவிரவாதியாகவே இருந்திருக்கிறார்.
தீண்டாமை ஒழிவதுவரை அடிமைத் தனமும் ஆதிக்கமும் ஒழியாது என்று நம்பினார். எனவேதான் மகாத்மா காந்தி அவர்கள் ‘எப்போது இந்தியாவை விட்டுத் தீண்டாமை விலகுமோர அப்போதுதான் உண்மையான சுதந்திரம் வந்ததாகக் கொள்ள வேண்டும்” என்றார்.
காமராஜர் ஆட்சிக்கு வந்ததும் இதனை சிந்தித்து இதனை பலவாறாகச் செயல்படுத்தத் தொடங்கினார் தீண்டாமை எனும் கொடுமையைச் செய்பவர்கள் அதைப் பாவம் என்று உணவில்லை என்றால், தீண்டாமைக்கு உட்படுத்தப் பட்டவர்கள் தாம் தீண்டத் தகுதியானவர்கள் என்று காட்டவேண்டும்.
அது எப்படி சாத்தியமாகும்? தீண்டத் தகாதவர்களாகக் கருதப்பட்டவர்கள் கல்வி பெற்று அந்தஸ்துடைய ஆளுமைமிக்க பதவிகளில் அமரவேண்டும். அப்போது அது சாத்தியமாகும். இதை உணர்ந்தே கலைவியை இலவசமாக்கினார்.
மாடாய் உழைத்து ஓடாய் தேயும் அவர்களுக்கு மதிய உணவு அளிக்கவும் முடிவு செய்தார். சமபந்தி முறையை ஏற்படுத்தி, ஏற்றத்தாழ்வின்றி எல்லோரும் உணவுண்டு, தீண்டாமை எனும் மனப்பேய் அழிய அயராது உழைத்தார்.
எல்லோர்க்கும் கல்வி என்றதே, தீண்டாமை தீர்வதற்குக் காமராஜர் அமைத்த முதல் படி எனலாம். அறவே சாதியைப் பிரித்தது என்றால் அந்த அறிவை அனைவரும் பெற்றுவிட்டால் பிரிவுகள் அழிந்து பொய்யாகும்தானே…!
தீண்டாமை தீர்வதற்கு அயராது பாடுபட்ட பெருந்தலைவர்க்கு இந்த உணர்வு இளமையிலே கிடைத்தது.
பங்குனிப் பொங்கல் விருதுநகரில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் ஒன்றாகும். இன்றுவரை இப்பங்குனிப் பொங்கலே இங்குத் தலையாய பொங்கலாக கருதப்படுகிறது.
தைப் பொங்கலைவிட, இப் பங்குனிப் பொங்கலையே பெரிதும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றார்கள். விருதுநகர் மற்றும் விருதுநகர் சுற்றுவட்டார தொழிற்சாலைகள், கடைகள், நிறுவனங்கள் யாவற்றிலும் பங்குனிப் பொங்கலை ஒட்டித்தான் போனஸ் வழங்கப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இத்தகைய சிறப்புமிக்க பங்குனிப் பொங்லன்று எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களும் அன்று தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள் யாரும் தீச்சட்டி தூக்கி கோவிலுக்குள் நுழையமுடியவில்லை.
அன்று பக்தனுக்கு ஏது ஜாதி அன்று பார்க்கவில்லை. இதையறிந்த இளைஞர் மிகவும் வருந்தி வாதாடினார்.
ஏன் தீண்டாமை பார்த்து ஒரு சாராரை உள்ளே போக தடைவிதித்து, தடுக்கிறீர்கள் என்று கேட்டால், ”ஆத்தாள் பொறுக்கமாட்டாள்” என்று இறைவன் மீது பழிபோட ஆரம்பித்தார்கள்.
உடனே காமராஜர் அரிஜன இளைஞனை அழைத்து வந்து, அவன் தூக்கிய தீச்சட்டியோடு உள்ளே நுழைந்தார். தடுத்தவர்களிடம் ”இவர்கள் உள்ளே வந்தால் மாரியாத்தா பொறுக்கமாட்டாள் என்பது உண்மையானால் கடவுளே இந்த தீச்சட்டியைத் தூக்கி வரும் இழிந்த சாதி என்று கருதுபவனைத் தண்டிக்கட்டும்.” என்று கூறிவிட்டு விருட்டன நடந்தார்.
அன்றே வந்த அரசியல்வாதிகளுக்கு இப்படியாய், பற்பல அரிய சாதனைகளும், தியாகங்களும் அஸ்திவாரமாய் அமைநைதிருப்பதைக் காணலாம்.
அன்று காமராஜர் போல் நேரடியாகச் சமூகச்சேவையில் ஈடுபட்டவர்கள் மட்டுமே அரசியலுக்கு வந்தால் அரசியல் மக்களுக்காக என்று மாறும்.
Rajasekaran
The following line is in Thendamai Therthavar.
இதை உணர்ந்தே கலைவியை இலவசமாக்கினார்.Instead of Kalvi, it is printed like Kalavi. Plz change it as soon as possible.
Thank u.