காமராஜரைப் பற்றி கேள்விப்பட்டது கண்ணீரை வரவழைத்தது: சமுத்திரகனி

posted in: அஞ்சலி | 1

சென்னை: காமராஜர் படத்தில் நான் நடித்த போது காமராஜரை பற்றி கேள்வி பட்ட விஷயங்கள் எனக்கு கண்ணீரை வரவழைத்தது இந்த படம் எனக்கு மறக்க முடியாத ஒரு படம் என்று நடிகரும், இயக்கநருமான சமுத்திரகனி கூறியுள்ளார். ஏ.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘காமராஜ்’ படத்தில் நடித்துள்ள சமுத்திரகனி இன்று காமராஜர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு, `காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு, 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட் டது. ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரித்த இந்த படம், 2004 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருதை பெற்றது. இப்போது அந்த படம், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு, பல புதிய காட்சிகளோடு மீண்டும் திரைக்கு வர இருக்கிறது. காமராஜ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

06-1436183936-kamrajar-samutharakni-600

06-1436184042-kamararaj-samuthakani-600

மாசற்ற தலைவர்

படத்தின் டீசரை வெளியிட்டு பேசிய மகாத்மா காந்தியின் செயலாளர் கல்யாணம், காமராஜர் மாதிரி ஒவ்வொரு அரசியல் வாதியும் இருந்தால் இந்த நாடு எப்பொழுதோ முன்னேறி இருக்கும். அரசியலுக்கு வருகிற ஒவ்வொருவருமே ஏதோ ஒரு ஆதாயத்தை எதிர் பார்த்துதான் வருகிறார்கள்.

இன்றைய அரசியல்வாதிகள்

இன்றைய அரசியல்வாதிகள் ஒவ்வொரு எம்.எல்.ஏ, எம்.பி எல்லோருமே கோடி கோடியாக பணம் வைத்திருக்கிறார்கள். எல்லாமே ஊழல் பணம்தான். இந்த படத்தை நிச்சியமாக ஒவ்வொரு எம்.எல்.ஏ, எம்.பிக்களும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்றார்.

இனி ஒரு தலைவர்

நேர்மையாக வாழ்ந்த ஒரு மனிதனின் வாழ்கையை பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரியவில்லை இந்த படத்தை ஓவொரு பள்ளி குழந்தைகளும் பார்த்து எதிர்காலத்தில் காமராஜர் போல் யாரவது வர மாட்டார்களா என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது என்றார் நடிகர் சமுத்திரகனி.

மறக்க முடியாத அனுபவம்

இந்த படத்தில் நான் நடித்த போது காமராஜரை பற்றி கேள்வி பட்ட விஷயங்கள் எனக்கு கண்ணீரை வரவழைத்தது இந்த படம் எனக்கு மறக்க முடியாத ஒரு படம் என்றும் அவர் கூறினார். இந்த திரைப்படம் உருவாக மூப்பனார் அவர்களும் ஜி.கே.வாசன் இருவரும் உதவியாக இருந்தார்கள். இப்போது காமராஜர் பேரை சொல்லி அரசியல் செய்கிறவர்களின் ஆதரவு சுத்தமாக கிடைக்க வில்லை என்றார் இயக்குனர் பாலகிருஷ்ணன்.

காமராஜர் வெற்றியடைய வேண்டும்

இன்றைய அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் இந்த படம் முழுமையாக மக்களிடம் சென்றடையும் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார். இந்த விழாவில் காமராஜராக நடித்த பிரதீப் மதுரம் மற்றும் வியோகஸ்தர் பாலசுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

110 ரூபாய்தான் சொத்து

காமராஜருக்கு என்று எந்த சொத்தும் கிடையாது. அவரது கார் டி.வி.எஸ் கொடுத்தது, வீடு – நடராஜன் கொடுத்தது(வாடகை வீடு), அவருக்கு சொந்தமாக 110 ரூபாய் மட்டுமே இருந்தது. இதைப்பற்றி எல்லாம் முந்தைய படத்தில் பதிவு செய்யவில்லை. தற்போது இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகாரியாக சமுத்திரகனி

காமராஜரின் வீட்டினை சோதனை செய்யும் அதிகாரியாகத் தான் இயக்குநர் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். 15 நிமிடங்களுக்கு மேல் இவருடைய காட்சிகள் இருக்கும். இந்த படத்தில் 30 நிமிட காட்சிகளை புதிதாக சேர்த்திருப்பதாகவும் இயக்குநர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியினர் கவனிக்க

முதல் முறை வெளியான ‘காமராஜ்’ படத்தில் காமராஜராக நடித்த ரிச்சர்ட் மதுரம் இறந்துவிட்டார். அதனால் அவருடைய மகன் பிரதீப் மதுரம் இந்த படத்தில் காமராஜராக நடித்திருக்கிறார். இந்த படம் 80 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாம். 50லட்சம் ரூபாய் கடனில் இருக்கிறாராம் தயாரிப்பாளர். காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பேசும் காங்கிரஸ் கட்சியினருக்கு இது தெரியுமா?

நன்றி : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *